கடுப்பேற்றும் கற்புக்கரசிகள்..நேத்து சாயந்திரம் அலுவலகம் விட்டு வீடு திரும்பும்போது கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டியிருந்ததால கடைக்குப் போயிருந்தேன். முடிச்சிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வர ஏழு மணியாயிடுச்சு. பஸ் கூட்டமாயிருந்ததால ஷேர் ஆட்டோல போயிடலாம்னு முடிவு செஞ்சேன். அடுத்தடுத்த ஷேர் ஆட்டோ கூட்டமாயிருந்ததால நாலு ஆட்டோவ விட்டுட்டேன். அஞ்சாவதா ஒரு ஷேர் ஆட்டோ வந்துச்சு. ஆட்டோவின் உள் சீட்ல நாலு பெண்களும் எதிர்ல இருந்த பலகைல ஒரு வயசான பெரியவரும் உட்கார்ந்திருந்தாங்க. அவருக்குப் பக்கத்துல (கிட்டத்தட்ட 45 முதல் 50 வயதிருக்கும்) ஒரு வயதான பெண் உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண் தன்னுடைய கைப்பையை தனக்கும் அந்தப் பெரியவருக்கும் இடையே வைத்து நிறையவே இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்.

எனக்கு அந்த பெண்மணிக்கு பக்கத்துல உட்கார வேண்டிய கட்டாயம். ஆட்டோ டிரைவர் அவங்ககிட்ட “தள்ளி உக்காருங்கம்மா, ஆள் வராங்க“னு சொன்னார். அந்தப் பெண்மணியோ இருந்த இடத்துலயே கொஞ்சம் குதிச்சு உட்காந்தாங்க. நகரவேயில்ல. இத்தனைக்கு அவர் பக்கத்துல இருந்த பெரியவர்க்கு அவரை விட அதிக வயதிருக்கும். உடனே நா அவங்க கிட்ட அந்த பைய எடுத்து மடில வச்சுட்டு தள்ளி உக்காருங்கம்மானு சொன்னேன். அவ்ளோ தான்... என்னவோ நா சொல்லக்கூடாதத சொல்லிட்ட மாதிரி என்ன முறைச்சுப் பாத்துட்டு “ஏம்மா ஆம்பளையாள் பக்கத்துல எப்படிம்மா உட்காருரது“னு கோவமா கேட்டாங்க. இது சரிப்பட்டு வராதுனு நா வேற ஷேர் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போனேன்.

அந்தப் பெண்மணினு இல்ல.. நெறைய பெண்கள் இப்டி தான் இருக்காங்க. கூட்டமான பேருந்துகளில் இதுபோன்ற சம்பவங்களை அதிகம் பார்க்கலாம். ரொம்ப தூரம் நின்னுகிட்டே கூட பயணம் செய்வாங்க. ஆனா ஒரு ஆணுக்குப் பக்கத்துல இடம் இருந்தா உக்கார மாட்டாங்க. அந்த ஆண் 90 வயதுக் கிழவராக இருந்தாலும் சரி, என்னவோ பக்கத்துல உக்காந்தா தங்களோட கற்பே போயிட்ற மாதிரி நெனச்சுக்குறாங்க.

அந்தக் காலத்துல தான் ஆண்கள்கிட்ட பேசக்கூடாது, நிமிர்ந்து பாக்க கூடாதுன்னு ஏகப்பட்ட தடை விதிச்சிருந்தாங்க. ஆனா இப்ப இருக்குற பெண்கள்ள வயசானவங்களும் சரி நடுத்தர வயசுல இருக்குறவங்களும் சரி ஆண்களோடு சகஜமாப் பேச ரொம்பவே தயங்குகின்றனர். அப்படிப் பேசும் பெண்களையும் இவங்க தப்பான கண்ணோட்டத்துலயே பாக்குறாங்க. இன்னைக்கு ஆண் பெண் நட்புங்குறத பரவலான முற்போக்கு எண்ணத்துல பார்க்கணும். ஏதோ சிங்கம் புலிய பாக்குற மாதிரி விலகி நிக்கிறதும் பேசத் தயங்குறதும்னு தங்களைத் தாங்களே மிகைப்படுத்தி காட்டிக்கிறாங்க. ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் மனதில் எந்தவித தப்பான எண்ணமுமில்லாம வெறும் நட்பின் அடிப்படைல ஒருவருக்கொருவர் சாதாரணமாப் பேசிக்கிறதுல என்ன தவறு இருக்கிறது?

அதுக்காக ஆண்களோட ஒட்டி உரசிகிட்டு பயணம் செய்யணும்னோ தொட்டுக் கொண்டும் தோளில் சாய்ந்து கொண்டும் பேசணும்னோ சொல்ல வரல. சாதாரணமா ஆண் பெண் நட்பா பேசக் கூட தயங்குறாங்கங்குறன்னு சொல்ல வரேன்.

எந்தவொரு ஆண்களிடத்திலும் நட்பாகக் கூட பேசாமலிருந்தால் தான் இவங்களுக்கு கற்புக்கரசிங்குற பட்டம் கிடைக்கும்னு நெனச்சுட்டாங்க போல. அப்டி பேசியே ஆகணும்குற கட்டாயம் வரும்போது “அண்ணா“னு உறவுமுறை சொல்லிப் பேசுறாங்க. (கேக்குற ஆண், மனசுக்குள்ள அழுகுற சத்தம் அவங்களுக்கு கேக்குறதில்லை). அந்த வார்த்தை தான் தங்களுக்கு ஒரு பாதுகாப்புனு நெனச்சுக்குறாங்க. இந்த பாசமலர்கள நெனைக்கும்போது நமக்கு சிரிப்பு தான் வருது. இந்த பாழாய்ப்போன சமுதாயமும் இவர்களை இப்படித்தான் பழக்கி வைத்திருக்கிறது. எந்த விசயத்தை நாம் தனியே பிரித்து வைக்கிறோமோ அதன் மீது தான் தனிப்பட்ட ஆர்வமும் எல்லை தாண்டுதல்களும் ஏற்படும். சகஜமான உரையாடல்களையும் நட்புகளையும் ஏற்படுத்திக்கொண்டால் அதிலுள்ள ஈர்ப்பு குறைந்து எல்லாமே புதிரில்லாத நிதானமான நடைமுறையாகிவிடும்.

உடனே ஆண்கள் யாரும் சந்தோசப்பட வேணாம்.. பொண்ணுங்க கொஞ்சம் சிரிச்சுப் பேசிட்டாப் போதும்.. இதுதான் சாக்குனு தப்பான எண்ணத்துல அவங்கள அணுகும் ஒரு சில ஆண்களும் இருக்கத்தான் செய்றாங்க. அதுனால தான் ஒட்டுமொத்த ஆண்களையும் பெண்கள் தள்ளிவைத்தே பார்க்கின்றனர். தங்களிடம் சகஜமாய்ப் பேசும் பெண்களிடம் கண்ணியமான நட்பைக் கடைபிடித்தாலே ஆண்கள் மீதான நம்பிக்கை தானாக வந்துவிடும்.

ஒரு பெண் பெண்ணிடம் நட்பாக இருப்பது போல, ஆண் ஆணிடம் நட்பாக இருப்பது போல, ஆணும் பெண்ணும் (உண்மையான) நண்பர்களாக இருப்பதில் தவறில்லை.

.

Comments

//ஒரு பெண் பெண்ணிடம் நட்பாக இருப்பது போல, ஆண் ஆணிடம் நட்பாக இருப்பது போல, ஆணும் பெண்ணும் (உண்மையான) நண்பர்களாக இருப்பதில் தவறில்லை.//

உண்மை.

porinchu thallittinga....
//ஒரு பெண் பெண்ணிடம் நட்பாக இருப்பது போல, ஆண் ஆணிடம் நட்பாக இருப்பது போல, ஆணும் பெண்ணும் (உண்மையான) நண்பர்களாக இருப்பதில் தவறில்லை. //

ரைட்டு.......
karthikkumar said…
ஒரு பெண் பெண்ணிடம் நட்பாக இருப்பது போல, ஆண் ஆணிடம் நட்பாக இருப்பது போல, ஆணும் பெண்ணும் (உண்மையான) நண்பர்களாக இருப்பதில் தவறில்லை///
தவறில்லைதான். ஆனால் நீங்க சொன்ன மாதிரி நம் சமுதாயம் நம்மை அப்படி பழக்கப்படுத்திவிட்டது... என்பதும் உண்மைதான்...
அவர்களை சொல்லி தப்பில்லை இந்திரா. கொஞ்சம் வயதில் பெரியவர்கள்தான் அதிகம் சில்மிஷங்கள் செய்கிறார்கள்
மங்குனி அமைச்சர் said…
இன்னும் சிறிது காலம் ஆகும்
R.Gopi said…
ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க இந்திரா...

பட், நடைமுறையில் இது நடப்பதில்லையே!!

என்ன சொல்றது? சிறிது சிறிதாக இந்த நிலை மாறலாம்... மாறினால் நன்றாக இருக்கும்...
ஆண்கள் குலத்தை காக்கவந்த பெண் தெய்வம் இந்திரா வாழ்க வாழ்க


(45 -50 வயசு ஆனா வயசான பெரியவராங்க... அவ்வ்வ்வ்வ்.... இது ஓவர்...)
//karthikkumar said...

VADAI//


சந்தேகமில்லாம உங்களுக்குத் தான்
//சங்கவி said...


ரைட்டு.......//


இனிமே ஸ்மைலிக்கு மட்டுமில்ல.. ஒரு வார்த்தைல கமெண்ட் போட்டாலும் அபராதம் விதிக்கணும்னு நெனைக்கிறேன்..
//சே.குமார் said...

உண்மை.

porinchu thallittinga....//நன்றி குமார்..
//karthikkumar said...


தவறில்லைதான். ஆனால் நீங்க சொன்ன மாதிரி நம் சமுதாயம் நம்மை அப்படி பழக்கப்படுத்திவிட்டது... என்பதும் உண்மைதான்...//

சரிதான் கார்த்திக்.. அது விரைவில் மாற வேண்டும் என்பது தான் எனது கருத்தும் கூட..
//எல் கே said...

அவர்களை சொல்லி தப்பில்லை இந்திரா. கொஞ்சம் வயதில் பெரியவர்கள்தான் அதிகம் சில்மிஷங்கள் செய்கிறார்கள்//

அதைப் பற்றியும் பதிவில் சொல்லியிருக்கிறேனே..
//ஒரு பெண் பெண்ணிடம் நட்பாக இருப்பது போல, ஆண் ஆணிடம் நட்பாக இருப்பது போல, ஆணும் பெண்ணும் (உண்மையான) நண்பர்களாக இருப்பதில் தவறில்லை. //

ஆம். ஆனால் நம் சமுதாயம் அதற்கான வாய்ப்புகளை அதிகமாக அளிப்பதில்லை!
//மங்குனி அமைச்சர் said...

இன்னும் சிறிது காலம் ஆகும்//


ஏற்கனவே நூறு ஆண்டுகள் போய்விட்டதே அமைச்சரே..
//பிரியமுடன் பிரபு said...

உண்மை.//

நன்றி பிரபு
//R.Gopi said...

ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க இந்திரா...

பட், நடைமுறையில் இது நடப்பதில்லையே!!

என்ன சொல்றது? சிறிது சிறிதாக இந்த நிலை மாறலாம்... மாறினால் நன்றாக இருக்கும்...//

அந்த மாற்றம் நட்பு கொள்ளுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் இருக்கிறது கோபி
//அருண் பிரசாத் said...

ஆண்கள் குலத்தை காக்கவந்த பெண் தெய்வம் இந்திரா வாழ்க வாழ்க//

ஹலோ அருண்.. ஆண்களையும் குறை சொல்லியிருக்கிறேனே.. பதிவை முழுசாப் படிக்கலையா???


//(45 -50 வயசு ஆனா வயசான பெரியவராங்க... அவ்வ்வ்வ்வ்.... இது ஓவர்...)//

அந்தப் பெரியவர் அதை விட வயதானவர்னு தான் சொல்லிருக்கேன்.
//எஸ்.கே said...


ஆம். ஆனால் நம் சமுதாயம் அதற்கான வாய்ப்புகளை அதிகமாக அளிப்பதில்லை!//

இந்தக் கேடுகெட்ட சமுதாயத்தில் எல்லாமே தவறான கண்ணோட்டத்தில் தானே பார்க்கப்படுகிறது..
கூட வரும் சகோதரனைக் கூட காதலனோ என்ற எண்ணத்தில் தான் ஏளனமாகப் பார்க்கிறது..
இதை என்ன சொல்வது??
sakthi said…
பெரும்பாலும் மாறிவிட்டாலும் இன்னும் நிறைய மாற்றம் வேண்டும்
தப்பே இல்லை..தமிழ்நாட்டில் தான் இன்னும் இப்படி, மற்ற மாநிலங்களில் எவ்வளவோ பரவாயில்லை!
//sakthi said...

பெரும்பாலும் மாறிவிட்டாலும் இன்னும் நிறைய மாற்றம் வேண்டும்//


மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களும் வேண்டுமே சக்தி..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

தப்பே இல்லை..தமிழ்நாட்டில் தான் இன்னும் இப்படி, மற்ற மாநிலங்களில் எவ்வளவோ பரவாயில்லை!//

அருகிருப்போருக்காகவே வாழும் சமுதாயம் இது.. அந்த நிலை மாற வேண்டும் முதலில்.
பதிவுக்கு கருத்து சொல்ற அளவுக்கு பக்குவம் இல்ல...

அதனால ஓட்டு மட்டும் போட்டுட்டு போயிடுறேன்...
Arun Prasath said…
எல்லாருக்கும் புரிய இன்னும் கொஞ்ச நாள் ஆகும்ங்க
Balaji saravana said…
தெளிவான அலசல் இந்திரா!
படித்த இளைஞர்களிடம் இப்படி வேறுபாடு பார்ப்பது குறைவாகத்தான் இருக்கிறது சற்று வயதானவர்கள் தான் பிரச்சனையே!
//எல் கே said...

அவர்களை சொல்லி தப்பில்லை இந்திரா. கொஞ்சம் வயதில் பெரியவர்கள்தான் அதிகம் சில்மிஷங்கள் செய்கிறார்கள்

//

நான் சொல்லவந்த கருத்தை, அண்ணனே சொல்லிவிட்டதால்.. எதுவும் சொல்லமுடியாமல்.. திரும்ப செல்கிறேன்.. நன்றி.. வணக்கம்
ஆண், பெண் நட்பு பற்றி விரிவா சொல்லியிருக்கீங்க. எதிலும் ஒரு கவனம் நல்லது தானே...
நிறைய சமயங்களில் நானும் இந்த கற்புகரசிகளை பார்த்து எரிச்சல் அடைந்து இருக்கிறேன்.அவர்கள் செய்கிற அலட்டல் அய்யோன்னு இருக்கும். யார் சொல்லி திருந்துவார்கள்?
அப்படியே வளர்க்கப்பட்டார்கள். அப்படி தான் இருப்பார்கள். அடுத்த தலைமுறை மாறிவிடும்.
என்னத்த செல்ல ...
dheva said…
ஆண் பெண் உறவ சீர வச்சிக்க்க அறிவும் பரந்து விரிந்த பார்வையும் வேணும் இந்திரா...ஆன நிறைய பேர் பெண்களோட உறவை கொச்சைப்படுத்தி பொசஸிவ்னெஸ் என்ற பெயரில் கொடுக்கும் டார்ச்சர்கள் பற்றியும் நிறைய கேள்விப்படத்தான் செய்கிறோம்..........

மொத்தத்தில் ஆணாய் இருக்கட்டும் அல்லது பெண்ணாய் இருக்கட்டும் அறிவு வேணும் முதலில் எப்படி உறவுகளை பேணுவது என்று........

கட்டுரையோடு ஒத்துப்போகிறேன்!
//dheva said...

ஆண் பெண் உறவ சீர வச்சிக்க்க அறிவும் பரந்து விரிந்த பார்வையும் வேணும் இந்திரா...ஆன நிறைய பேர் பெண்களோட உறவை கொச்சைப்படுத்தி பொசஸிவ்னெஸ் என்ற பெயரில் கொடுக்கும் டார்ச்சர்கள் பற்றியும் நிறைய கேள்விப்படத்தான் செய்கிறோம்..........////

இதையே இன்னொருக்கா தமிழ்ல சொல்லுங்க...


மொத்தத்தில் ஆணாய் இருக்கட்டும் அல்லது பெண்ணாய் இருக்கட்டும் அறிவு வேணும் முதலில் எப்படி உறவுகளை பேணுவது என்று........

கட்டுரையோடு ஒத்துப்போகிறேன்!///
ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..///

எவ்ளோ வருமானம் இன்னிக்கு. கமிசன் எங்க? # பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் கமன்ட் போடுவோர் சங்கம்
//அப்டி பேசியே ஆகணும்குற கட்டாயம் வரும்போது “அண்ணா“னு உறவுமுறை சொல்லிப் பேசுறாங்க. //

இதை முதல்ல தடை பண்ணனும் # இதனால் பயங்கரமாக பாதிக்கப்பட்டோர் சங்கம்
:)
நான் 96 -97 சென்னை வந்த பொழுது பஸ் ல ஏறும் பொழுது பயந்து பயந்து ஏறுவேன் .கூட்டம் அதிகமாக இருக்கும் .எல்லோரும் ஒருவர் மேல் ஒருவர் ஏறி நிப்பது போல தான் இருக்கும் ......எனக்கு பயமாக இருக்கும் ஊர் காட்டான் சொல்லி அடிசிருவான்களோ ன்னு ஒரே பயம் ........அப்போ எல்லாம் பார்த்து இருக்கிறேன் .LK சார் சொன்ன மாதிரி நான் நிறையா பார்த்தேன் ..........இன்னும் தமிழ் நாடு இந்த விசயத்தில் இன்னும் பக்குவம் ஆகலை என்றே தோன்றுகிறது
dheva said…
//இதை முதல்ல தடை பண்ணனும் # இதனால் பயங்கரமாக பாதிக்கப்பட்டோர் சங்கம்//

நீ போலிசுதாண்டா...!
dheva said…
//இதையே இன்னொருக்கா தமிழ்ல
சொல்லுங்க...//

சிரிப்பு போலிஸ்@ டேய் தம்பி இதுக்கு மேல அண்ணன அசிங்கப்படுத்த முடியாதுடா....வெளியிடமா இருக்குனு பாக்குறேன்.. இல்ல உன்ன வெட்டி ரத்தம் குடிக்காம விட மாட்டேன்!
இந்திரா,
சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவுகளையும் பதிவில் உள்ள அனைத்து பின்னூட்டங்களையும் படித்துவிடுங்கள்.

ஆண்கள் என்ற மிருகங்கள்.........
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/01/blog-post.html

கவிதாவின் பதிவில் நீண்ட நெடிய பின்னூட்டங்கள் உண்டு.


ஆண்கள் மிருகங்களா ?
http://araiblade.blogspot.com/2007/01/blog-post_04.html
///எந்த விசயத்தை நாம் தனியே பிரித்து வைக்கிறோமோ
அதன் மீது தான் தனிப்பட்ட ஆர்வமும் எல்லை தாண்டுதல்களும் ஏற்படும்///

இந்த பதிவ படிக்கறப்போவே...
இந்த வரிகள்.. உள்ளுக்குள்ள பிராண்டுபிராண்டுன்னு பிராண்டுச்சு..!


நல்ல தத்துவம்...!
யதார்த்த வரிகள்... நண்பி...!

இந்த பதிவுல நல்லாத்தான் சொல்லியிருக்கீக...!
@பட்டாபட்டி

//நான் சொல்லவந்த கருத்தை, அண்ணனே சொல்லிவிட்டதால்.. எதுவும் சொல்லமுடியாமல்.. திரும்ப செல்கிறேன்.. நன்றி.. வணக்கம் //

நான் சொல்லவந்த கருத்தை, நீ சொல்லிவிட்டதால்.. எதுவும் சொல்லமுடியாமல்.. திரும்ப செல்கிறேன்.. நன்றி.. வணக்கம்.. :)
//இம்சைஅரசன் பாபு.. said...

நான் 96 -97 சென்னை வந்த பொழுது பஸ் ல ஏறும் பொழுது பயந்து பயந்து ஏறுவேன் //

ஓசில பயணம் செஞ்சா பயம் இருக்கதாம்ல செய்யணும். டிக்கெட் எடுக்கணும்..
//மங்குனி அமைச்சர் said...

இன்னும் சிறிது காலம் ஆகும்///

எதுக்கு நீ திருந்துறதுக்கா? இல்லை தமிழ் கத்துக்கிறதுக்கா?
//dheva said...

//இதையே இன்னொருக்கா தமிழ்ல
சொல்லுங்க...//

சிரிப்பு போலிஸ்@ டேய் தம்பி இதுக்கு மேல அண்ணன அசிங்கப்படுத்த முடியாதுடா....வெளியிடமா இருக்குனு பாக்குறேன்.. இல்ல உன்ன வெட்டி ரத்தம் குடிக்காம விட மாட்டேன்!///

ஹிஹி.
//மாணவன் said...

பதிவுக்கு கருத்து சொல்ற அளவுக்கு பக்குவம் இல்ல...

அதனால ஓட்டு மட்டும் போட்டுட்டு போயிடுறேன்...//

சிங்கப்பூர் பஸ்டாண்டுல பக்குவம் விக்கிறாங்களாம். சீக்கிரம் போய் வாங்கிட்டு வா..
//அருண் பிரசாத் said...

ஆண்கள் குலத்தை காக்கவந்த பெண் தெய்வம் இந்திரா வாழ்க வாழ்க


(45 -50 வயசு ஆனா வயசான பெரியவராங்க... அவ்வ்வ்வ்வ்.... இது ஓவர்...)/

அருண் உங்களுக்கு 50 வயசுன்னு இப்படியா பப்ளிக்கா சொல்றது?
//TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டாபட்டி

//நான் சொல்லவந்த கருத்தை, அண்ணனே சொல்லிவிட்டதால்.. எதுவும் சொல்லமுடியாமல்.. திரும்ப செல்கிறேன்.. நன்றி.. வணக்கம் //

நான் சொல்லவந்த கருத்தை, நீ சொல்லிவிட்டதால்.. எதுவும் சொல்லமுடியாமல்.. திரும்ப செல்கிறேன்.. நன்றி.. வணக்கம்.. :)///

ரைட்டு யாராவது ஒருத்தர் மட்டும் இன்னிக்கு சாப்பிடுங்க..
வந்த வேலை முடிஞ்சது. வடைக்கு நன்றி. உங்கள் கட்டுரை மிகவும் அருமை.
//வெறும்பய said...

என்னத்த செல்ல ...///

ஜோதியை பத்தி ஒரு ரெண்டு வரி ஜொள்ளேன்
சிரிப்பதா அழுவதா தெரியலை இது அப்பாவித்தனமா ஆனவமா புரியலை ஒரு வேளை இந்த மாதிரி ஆட்களால் தான் மழை வருது என்பதை நம்பறாங்களோ என்னவோ இந்திரா..

தலைப்பு சூப்பர்ப்பா...
>>>. ரொம்ப தூரம் நின்னுகிட்டே கூட பயணம் செய்வாங்க. ஆனா ஒரு ஆணுக்குப் பக்கத்துல இடம் இருந்தா உக்கார மாட்டாங்க.

because of society
ரொம்ப தூரம் நின்னுக்கிட்டு போறதைக் காட்டிலும், இவங்க பக்கத்தில் உட்காரலாம்ங்கற நம்பிக்கையை தர முடியாத ஆண்கள் இருக்கையில், பெண்கள் பாவம் என்னதான் செய்வார்கள்.

தலைப்பை சற்று மாற்றியிருக்கலாம்.
//எந்த விசயத்தை நாம் தனியே பிரித்து வைக்கிறோமோ அதன் மீது தான் தனிப்பட்ட ஆர்வமும் எல்லை தாண்டுதல்களும் ஏற்படும்.//

//சகஜமான உரையாடல்களையும் நட்புகளையும் ஏற்படுத்திக்கொண்டால் அதிலுள்ள ஈர்ப்பு குறைந்து எல்லாமே புதிரில்லாத நிதானமான நடைமுறையாகிவிடும்//

மிகச்சரி...
சந்ரு said…
உண்மையை சொல்லி இருக்கிங்க... நல்ல பதிவு..
வருண் said…
நீங்க சொன்ன கணக்குப்படி பார்த்தால் அல்ரெடி 6 பேரு இருக்காங்க. நீங்க ஏழாவது ஆள். இதே அதிகம், இப்படியே விட்டா பஸ்ல ஏத்துற அளவு ஆளை ஏத்திடுவான் இந்த ஆட்டோக்காரன்னுகூட அந்த அம்மா ஒரு ட்ராமா போட்டிருக்கலாம்.

ஷேர் ஆட்டோல எத்தனை பேர் அமரலாம்னு எதுவும் லிமிட் இல்லையா?

sorry, எனக்கு அந்த அம்மா செய்தது எதுவும் தவறாத் தெரியலைங்க. If she is uncomfortable she can always say that as it is getting too crowded.
வருண் said…
உங்க எரிச்சலான அனுபவம் எனக்கு நான் எழுதிய ஒரு கதையை ஞாபமூட்டிவிட்டது. இப்போத்தான் தோண்டி எடுத்தேன். :)

http://timeforsomelove.blogspot.com/2009/06/blog-post_09.html
வைகை said…
இதுக்கு விளக்கமா இன்னொரு பதிவே போடலாம்! இருந்தாலும் உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது! இதுக்கு ஆண்களாகிய எங்கள் கருத்தை விட பெண்கள் கருத்தே முக்கியம்! பார்ப்போம்!
//ஒரு பெண் பெண்ணிடம் நட்பாக இருப்பது போல, ஆண் ஆணிடம் நட்பாக இருப்பது போல, ஆணும் பெண்ணும் (உண்மையான) நண்பர்களாக இருப்பதில் தவறில்லை//

தவறில்லை தான், ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது அதீத அன்பின் ஆழத்தில் இழக்க ஒன்றும் இல்லை என்பதும் ஒரு காரணம். எதிர்பாலினர் ஈர்ப்பு என்று ஒன்று இருக்.கு அது உறவு முறைகளைத் தவிர்த்து ஏற்படும் போது விபத்தாக சிக்கலாக மாறிவிடும். ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கும் போது அது காதலாக காமமாக மாற வாய்ப்புகளும் அதிகம். அதற்காக எல்லா நட்புகளும் அவ்வாறு ஆகிவிடும் என்று சொல்லவில்லை, விதிவிலக்குகள் இருக்கு, விதிவிலக்குகள் பொதுவானது இல்லையே.

மற்றபடி ஒரு பெண் ஆணுடன் சேர்ந்து உட்காருவதால் ஒன்றும் கெட்டுப் போவதில்லை என்கிற உங்கள் கருத்தில் உடன்படுகிறேன்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//


உங்க கடமையுணர்ச்சிய நா பாராட்ரேன்..
ரிஷி said…
நல்ல கருத்துள்ள கட்டுரை. உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். அதே நேரம் வருண் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது!!

அதெல்லாம் சரி.. நீங்கள் ஏன் கொஞ்சம் உள்ளே ஏறி அந்த ரெண்டு பெருசுகளுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கக் கூடாது.. அங்கே இடம் இருக்கும்பட்சத்தில்? நம் கருத்தை செயலில் காட்டியதுபோல இருந்திருக்குமல்லவா?
மும்பை, தில்லி போன்ற நகரங்களில் இது போன்ற அலட்டல்ஸ் கிடையாது. சென்னையில் தான் இன்னும் (சில சமயங்களில்) இது போல நிகழ்கிறது. ஒரு வேளை, மும்பை தில்லியை விடவும் சென்னையில் மோசமான ஆண்கள் அதிகமோ என்னமோ? (என்னையும் சேர்த்துத்தான்!) :-)
எனக்கு நிறைய தோழிகள் உண்டு. மிகவும் நட்புடன் கண்ணியமாகவும் இன்று வரை நட்ப்பு தொடர்கிறது.
சமுதாயம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. என்ன கொஞ்சம் மெதுவாக.........................
//வருண்//


முன் உள்ள பலகையில் இருவர் தானே உட்கார்ந்திருந்தாங்க.. இன்னும் ஒரு ஆளுக்கு இடம் இருந்தது.
அதுவும் இல்லாம அந்தப் பெண் நகரவும் இல்லை. எழுந்திரிக்கவும் இல்லை. அதனால் தான் வேற ஆட்டோவில் ஏறினேன்.
///வெறும் நட்பின் அடிப்படைல ஒருவருக்கொருவர் சாதாரணமாப் பேசிக்கிறதுல என்ன தவறு இருக்கிறது? //

தப்பே இல்ல
ஏங்க இப்ப காலம் மாறிகிட்டே இருக்குங்க :)
Srini said…
" உஙக அனுபவம் எளிமையானதுன்னாலும் அதை வெளிப்படுத்திக்கிற விதத்துல அதுக்கொரு பரிமாணம் கொடுத்துடறீங்க.. நல்ல எழுத்து நடை “
HariShankar said…
உங்க தனிப்பட்ட அனுபவம் தான்,சமூக கோபம் .. ஆனா அதையே பதிவா , உண்மையா, எதார்த்தமா, நச்சு'நு உங்க நடைலே சொலீருகீங்க.. தலைப்பு மட்டும் கொஞ்சம் மாதீருகலமோ நு தோணுது...

// தங்களிடம் சகஜமாய்ப் பேசும் பெண்களிடம் கண்ணியமான நட்பைக் கடைபிடித்தாலே ஆண்கள் மீதான நம்பிக்கை தானாக வந்துவிடும்.

ஒரு பெண் பெண்ணிடம் நட்பாக இருப்பது போல, ஆண் ஆணிடம் நட்பாக இருப்பது போல, ஆணும் பெண்ணும் (உண்மையான) நண்பர்களாக இருப்பதில் தவறில்லை. // மிக சரியே .. (ய)

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்