சிம்பிளா இருக்காங்களாம்..


நா ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டேன். இன்னும் இருபது நிமிஷத்துல அங்க வந்துடுவேன், நீ ரெடியா இரு.. வந்ததும் போகலாம்

அருண் போன் செய்து தன் மனைவி புஷ்பாவிடம் சொன்னதுதான் தாமதம்.. உடனே ரெடியாக ஆரம்பித்தாள்.

முதலில் பீரோவைத் திறந்து எந்தப் புடவையை கட்டுவது என்பதை யோசித்தாள்.

தனக்குத் தானே மனதுக்குள் பேசிக்கொண்டபடி ரெடியாக ஆரம்பித்தாள்...

ஜரிகை வச்ச சேலை கட்டலாமா???..

வேணாம் வேணாம் க்ராண்டா தெரியும்... ம்ம்ம் காட்டன் சேலையே கட்டலாம். அது தான் சிம்பிளா இருக்கும்

ரி.. காட்டன்ல எந்த கலர் கட்றது??

ம்ம்ம் பிங்க், ரெட், மஞ்சள்.. எல்லாமே பளிச்சுனு இருக்கும். சிம்பிளா தெரியாதே..

அப்டினா க்ரே கலர் கட்டலாம்.. அதுதான் பளிச்சுனு கண்ண உறுத்தாது. பாக்குறதுக்கும் நீட்டா இருக்கும்

நினைத்தபடியே அந்த புடவையை கட்டிக்கொண்டாள். அதன் பின்..

ஹேர் ஸ்டைல் எந்த மாதிரி சீவலாம்???? லூஸ் ஹேர் விடாட பின்னிக்கலாம். அதுதான் நல்லா இருக்கும். பூ கூட வேணாம். சிம்பிளா இருக்கட்டும்.

வளையல்... கல்லு வச்சது வேணாம். சாதாரண தங்க வளையல் போதும்.. அதுவும் நாலு வேணாம். ரெண்டு போதும். அது தான் சிம்பிளா தெரியும்

வளையலை அணிந்து கொண்டாள்.

கல்லு மோதிரம் வேணாம். எப்பவும் போட்றதோட சேர்த்து அந்த வளைவு மோதிரம் மட்டும் போட்டுக்கலாம். அது தான் சிம்பிளா இருக்கும்.

வாட்ச்... கோல்டு ப்ரேம் வேணாம். ஸ்ட்ராப் வச்சது போதும்.

செயின் எது போடலாம்??? டாலர் வச்சது வேணாம்.. க்ராண்டா இருக்கும். சாதாரண செயின் போடலாம். அதுவும் ரெண்டு வேணாம்.. தாலி செயின் இருக்குறதுனால ஒன்னு மட்டும் போட்டுக்கலாம். அது தான் சிம்பிளா இருக்கும்

அட.. தோடு மறந்துட்டேனே.. கல்லு வச்ச ஜிமிக்கி வேணாம். மாட்டல் கூட வேணாம். சாதாரண குடை ஜிமிக்கி மட்டும் போட்டுக்கலாம். அது தான் க்ராண்டா தெரியாது.

லிப்ஸ்டிக்> ஐ-ஷாட் எதுவும் வேணாம். பவுடர் போட்டு ஐ-ப்ரோ மட்டும் போட்டுக்கலாம். டிசைன் பொட்டு கூட வேணாம். சாதாரண வட்டப் பொட்டு வச்சுக்கலாம். அப்பதான் சிம்பிளா இருக்கும்.

செருப்பு எதைப் போட்றது??? ஹீல்ஸ் வச்சது போடலாமா??? ம்ஹூம்.. வேணாம் வேணாம் ஃப்ளாட் போட்டுக்கலாம். சிம்பிளா இருக்கட்டும்.

ஒரு வழியாக எல்லாம் முடித்து ரெடியாகிவிட்டாள்.

அருண் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. சொன்ன நேரத்திற்குள் கிளம்பிய திருப்தியில் ஓடிச் சென்று கதவைத் திறந்தாள் புஷ்பா..

ரெடியாகி நிற்கும் தன் மனைவியை ஏறஇறங்கப் பார்த்த அருண்...

வீடே அதிறும்படி கத்தினான்..

சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?

.

.

Comments

இந்த மாதிரி ஆட்களும் இருக்காங்க
ஃஃஃஃஃஃசனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”ஃஃஃஃ

யாராச்சும் செத்த கிழிக்கா சிங்காரம் பண்ணுவாங்க...
ஹ..ஹ...ஹ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10
சத்தியமா சொல்லுறேன்.....

சூப்பர்....
இது உண்மைதான்...
:)

(இப்புடி ஸ்மைலி போட்டா 1000 ரூவா அனுப்புவீன்களா? அக்கவுண்டு நம்பர் தரட்டுமா?)
சூப்பர்......
எழவு வீட்டுக்கு போகும் போது எப்படிங்க போகனும்.
அதுக்கு எதாவது dress code இருக்கா.

எங்க அம்மாவோட பேரும் இந்திராதான்.
Kousalya said…
//சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”//

எல்லாம் சரிதான்.

ஆனா ஒரு மனைவிக்கு போன் பண்ணி கிளம்ப சொல்ற கணவன், எங்கே போகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் என்ன...??

எந்த மனைவிக்கும் தன் கணவன் கூட வெளியில் கிளம்புகிறோம் என்றாலே தனி சந்தோசம் வந்து விடும். அதனால் அலங்காரத்தில் தனி கவனம் வைப்பதில் தவறு என்ன இருக்கிறது...?
Kousalya said…
@@LK said...
//இந்த மாதிரி ஆட்களும் இருக்காங்க//

எந்த மாதிரி வீட்டுக்கு போகிறோம்னு தெரிஞ்சா இந்த மாதிரி அலங்காரம் எந்த பெண்ணும் பண்ணமாட்டாங்க.
//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”///
இது யாருன்னு எனக்கு தெரியும். எவ்ளோ கிறுக்கினாலும் சொல்ல மாட்டேன்.
விஜய் said…
ஹா ஹா ஹா
Arun Prasath said…
ஏங்க இதுக்கு என் பேரு தானா கெடச்சது.... யாராச்சும் அருண் உண்மை சம்பவம்ன்னு கமெண்ட் போடுவாங்க பாருங்க.... :)
karthikkumar said…
Arun Prasath said...
ஏங்க இதுக்கு என் பேரு தானா கெடச்சது.... யாராச்சும் அருண் உண்மை சம்பவம்ன்னு கமெண்ட் போடுவாங்க பாருங்க.... :)//
சரி சரி விடு மச்சி இதெல்லாம் சகஜம்.
//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”//

ஹா ஹா ஹா :)
வைகை said…
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”///
இது யாருன்னு எனக்கு தெரியும். எவ்ளோ கிறுக்கினாலும் சொல்ல மாட்டேன்/////////////

ஆமா.. அடிச்சு கூட கேளுங்க அப்பவும் சொல்ல மாட்டாரு!
//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”//

யாருங்க அப்படி கேட்டது....

ஹிஹிஹி
logu.. said…
ha..ha.. ponnunga manasa apdiye sollirukeenga..
தவறு அருண் மேல தான்....


(அந்த அருண் நான் இல்லைங்கோ)
உண்மையை ஒத்துக்கிட்ட உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
Balaji saravana said…
*#$%^&
எட்கப்ற்ற்ஹுக் ஹ்ன்சஜ்த்தட்ப்ந்து
ஜ்க்ஸ்டப்ஹஜ்ட்ப் க்ஜ்ட்ஜப்ஹச்ஜ்க்ப்;அக்ல்ப்விருவிப்ய்பிஎர்யு
"அஹம் பிரம்மாஸ்மி" ;)
சிம்பிளா நல்லாத்தான் சொல்லிட்டீங்க.

ஆனா....ஃபிஜித் தீவுகளில் இந்தியர் வீட்டு மரணங்களில் இப்படி சிம்பிளாத்தான் எல்லோரும் வருவாங்க. நான் முதல் சாவுக்கு நம்ம இந்திய ஸ்டைலில் கருப்புப்புடவை கட்டி முகத்தை சோகமா வச்சுக்கிட்டுப்போனேன்.

அங்கே பார்த்தா...... கொண்டாட்டமா இருந்தாங்க எல்லோரும்!!!!!!!
இந்த கதையின் நாயகி மாதிரி ஆட்களும் இருக்காங்க...எழவு வீடும் சில அழுவது கூட அநாகரீமென்று மெளனம் சாதிப்பது ஒரு கலாச்சாரமாகவும் இருக்கு இந்திரா..
siva said…
என்ன விட்டு போயிட்டயே ராசாவே...
அப்படி எல்லாம் அலறத பாக்கறது ரொம்ப கம்மியாதான் ஆய்ட்டு..:(
//LK//

//ம.தி.சுதா//

கருத்துக்கு நன்றி
//சங்கவி said...

சூப்பர்......//

நன்றிங்க
//வெளங்காதவன் said...

:)

(இப்புடி ஸ்மைலி போட்டா 1000 ரூவா அனுப்புவீன்களா? அக்கவுண்டு நம்பர் தரட்டுமா?)//


இப்டி எடக்குமடக்கா கேள்வி கேக்குறவங்களுக்கு 2000 ரூபாய் அபராதம்
சூப்பர்......

December 20, 2010 1:28 AM
Delete
//கமெண்ட் மட்டும் போடுறவன் said...

எழவு வீட்டுக்கு போகும் போது எப்படிங்க போகனும்.
அதுக்கு எதாவது dress code இருக்கா.

எங்க அம்மாவோட பேரும் இந்திராதான்.//


அப்படியா??? சந்தோசமுங்க..

உங்க பெயரை “சம்மந்தமில்லாத கமெண்ட் போட்றவன்“னு வைக்கணும்னு நெனக்கிறேன்..
//Kousalya //

இந்தப் பதிவு நகைச்சுவையாக எழுதப்பட்டதுங்க.. ஒருவேளை அது தவறாகப் புரியப்பட்டிருக்கலாம்..

வார்த்தைக்கு வார்த்தை சிம்பிளா கிளம்பணும்னு சொல்லிக்கிறதுலயே நமக்குத் தெரியுமே.. அவங்களுக்கு ஏற்கனவே போகப்போகும் இடம் தெரியும்னு..

கருத்துக்கு நன்றிங்க..
//விஜய் said...

ஹா ஹா ஹா//


சிரிச்சதுக்கு நன்றிங்க..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...


இது யாருன்னு எனக்கு தெரியும். எவ்ளோ கிறுக்கினாலும் சொல்ல மாட்டேன்.//


ம்ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்..
//Arun Prasath said...

ஏங்க இதுக்கு என் பேரு தானா கெடச்சது.... யாராச்சும் அருண் உண்மை சம்பவம்ன்னு கமெண்ட் போடுவாங்க பாருங்க.... :)//


“இது உண்மை சம்பவம் அல்ல“னு அருண் போட சொன்னாருனு எழுதிடலாமா?
//வேங்கை said...

//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”//

ஹா ஹா ஹா :)//


பெரிய்ய்ய்ய்ய கருத்துக்கு நன்றிங்க..
//☀நான் ஆதவன்☀ said...

:(

:))//


2 ஸ்மைலி...
2000 ரூபாய் அபராதம்..
//வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”///
இது யாருன்னு எனக்கு தெரியும். எவ்ளோ கிறுக்கினாலும் சொல்ல மாட்டேன்/////////////

ஆமா.. அடிச்சு கூட கேளுங்க அப்பவும் சொல்ல மாட்டாரு!//

எட்றா அந்த அருவாள... பிடிங்கடா அந்த ரமேஷ..
//karthikkumar said...

Arun Prasath said...
ஏங்க இதுக்கு என் பேரு தானா கெடச்சது.... யாராச்சும் அருண் உண்மை சம்பவம்ன்னு கமெண்ட் போடுவாங்க பாருங்க.... :)//
சரி சரி விடு மச்சி இதெல்லாம் சகஜம்.//


ஆமா அருண்.. அடுத்த பதிவுல கூட கார்த்திக்குமார்னு ஒரு கதாபாத்திரம் இருக்கு.
//logu.. said...

ha..ha.. ponnunga manasa apdiye sollirukeenga//


நன்றிங்க லோகு..
//மாணவன் said...

//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”//

யாருங்க அப்படி கேட்டது....

ஹிஹிஹி//

பதிவ நல்லா படிங்க..
புஷ்பாகிட்ட அருண் தான் கேக்குறாரு..
R.Gopi said…
எழவு வீட்டுக்கு தான் போறோம்ங்கற அந்த “எழவ” சொல்லி தொலைச்சா தான் என்ன?

இப்படி நிறைய பேர் இருக்காங்க... ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது!!?
//philosophy prabhakaran said...

உண்மையை ஒத்துக்கிட்ட உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...//


கற்பனைக் கதைங்கிற உண்மைய ஒத்துக்கிட்டத தான சொல்றீங்க..
டாங்க்ஸ்ங்க..
//அருண் பிரசாத் said...

தவறு அருண் மேல தான்....


(அந்த அருண் நான் இல்லைங்கோ)//


நம்பிட்டோம்ங்க..
//Balaji saravana said...

*#$%^&
எட்கப்ற்ற்ஹுக் ஹ்ன்சஜ்த்தட்ப்ந்து
ஜ்க்ஸ்டப்ஹஜ்ட்ப் க்ஜ்ட்ஜப்ஹச்ஜ்க்ப்;அக்ல்ப்விருவிப்ய்பிஎர்யு
"அஹம் பிரம்மாஸ்மி" ;)//

எயளடதகழைறதநசழெஎரைளக
ளனகதடனளகழரைறதநச
யளசைரறந
றழரைசந
//siva said...

:)//


1000 ரூபாய்
//தமிழரசி said...

இந்த கதையின் நாயகி மாதிரி ஆட்களும் இருக்காங்க...எழவு வீடும் சில அழுவது கூட அநாகரீமென்று மெளனம் சாதிப்பது ஒரு கலாச்சாரமாகவும் இருக்கு இந்திரா..//


உண்மை தான் தமிழ்
//துளசி கோபால் said...

சிம்பிளா நல்லாத்தான் சொல்லிட்டீங்க.

ஆனா....ஃபிஜித் தீவுகளில் இந்தியர் வீட்டு மரணங்களில் இப்படி சிம்பிளாத்தான் எல்லோரும் வருவாங்க. நான் முதல் சாவுக்கு நம்ம இந்திய ஸ்டைலில் கருப்புப்புடவை கட்டி முகத்தை சோகமா வச்சுக்கிட்டுப்போனேன்.

அங்கே பார்த்தா...... கொண்டாட்டமா இருந்தாங்க எல்லோரும்!!!!!!!//


தகவலுக்கு நன்றிங்க..
//siva said...

25...//


ட்ரீட் எங்க???
//siva said...

என்ன விட்டு போயிட்டயே ராசாவே...
அப்படி எல்லாம் அலறத பாக்கறது ரொம்ப கம்மியாதான் ஆய்ட்டு..:(//


அது இழப்பை ஏற்றுக்கொள்பவரின் மனப்பக்குவத்தைப் பொறுத்தது சிவா
//R.Gopi said...

எழவு வீட்டுக்கு தான் போறோம்ங்கற அந்த “எழவ” சொல்லி தொலைச்சா தான் என்ன?

இப்படி நிறைய பேர் இருக்காங்க... ஹ்ம்ம்.. என்னத்த சொல்றது!!?//


அவர் சொல்லிருப்பார்ங்க.. அவங்க சிம்பிளா கிளம்பினதுலருந்தே தெரியலயா??
ஜீ... said…
சூப்பர்! :-)
சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!
சூப்பர்!சூப்பர்!சூப்பர்!
ரொம்ப சிம்பிளா முடிச்சிட்டீங்களே!
veerabaagu said…
மேற்குலகில் கல்யாணம், மற்றும் சாவு வீட்டிற்கு செல்லும் பொழுது நேர்த்தியாகதான் ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல, கருப்பு நிற கோட் சூட்டில் செல்ல வேண்டும்.
நல்லா இருக்கு தோழி...

புருஷன் வீட்டுல இருந்து வெளியில் போனா எங்க போறீங்கனு கேட்கும் தாய்மார்களே... புருஷன் போன் பண்ணி வெளியில போறோமுனு சொன்னா... எந்த இடத்துக்கு போறோமுனு கேட்க கூடாதா?

ஆண்கள் எங்களுக்கு தான் புத்தி இல்லனா.. பெண்கள் உங்களுக்குமா?

ஒகோ... சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வா இது?
//சைவகொத்துப்பரோட்டா said...

ரொம்ப சிம்பிளா முடிச்சிட்டீங்களே!//

அத தலைப்பிலயே சொல்லிட்டேனே அண்ணாத்தை..
//ஜீ... //

//காஞ்சி முரளி //

நன்றி நன்றி
//விக்கி உலகம் said...

சூப்பர்!//


நன்றி
//veerabaagu said...

மேற்குலகில் கல்யாணம், மற்றும் சாவு வீட்டிற்கு செல்லும் பொழுது நேர்த்தியாகதான் ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போல, கருப்பு நிற கோட் சூட்டில் செல்ல வேண்டும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
//தஞ்சை.வாசன் said...

நல்லா இருக்கு தோழி...

புருஷன் வீட்டுல இருந்து வெளியில் போனா எங்க போறீங்கனு கேட்கும் தாய்மார்களே... புருஷன் போன் பண்ணி வெளியில போறோமுனு சொன்னா... எந்த இடத்துக்கு போறோமுனு கேட்க கூடாதா?

ஆண்கள் எங்களுக்கு தான் புத்தி இல்லனா.. பெண்கள் உங்களுக்குமா?

ஒகோ... சமீபத்தில் உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வா இது?//

அவங்க வார்த்தைக்கு வார்த்தை சிம்பிளா இருக்கணும் சிம்பிளா இருக்கணும்னு சொல்லிக்கிறதுலயே தெரியலயா வாசன்???? அவங்களுக்கு எங்க கிளம்பிட்டு இருக்கோம்ணு நல்லாவே தெரியும்..

//ஆண்கள் எங்களுக்கு தான் புத்தி இல்லனா//

உங்க தன்னடக்கத்தை நான் பாராட்ரேன் வாசன்..
மங்குனி அமைச்சர் said…
கில்லாடிங்க நீங்க ...ஒரே நேரத்துல ரெண்டு பயலுகளா கோர்த்து விட்டிங்களே ???
நல்லாயிருந்தது!

ஆனாலும் அவங்க அழகுபடுத்திக்க நினைக்கிறது தப்பில்லையே! சிலரின் குணம் அப்படி!
//”செயின் எது போடலாம்??? டாலர் வச்சது வேணாம்.. க்ராண்டா இருக்கும். சாதாரண செயின் போடலாம். அதுவும் ரெண்டு வேணாம்.. தாலி செயின் இருக்குறதுனால ஒன்னு மட்டும் போட்டுக்கலாம். அது தான் சிம்பிளா இருக்கும்”//

எப்பூடிஎல்லாம் சிம்பிளா இருக்காங்க ..?!
//”சனியனே.... எழவு வீட்டுக்கு போகும்போது கூட இப்டி ஆடம்பரமா ட்ரஸ் பண்ணிக்கணுமா?”/

அட ச்சே .. என்னங்க இது ..? இவ்ளோ சிம்பிள் ஆ ரெடி ஆனா கூட இப்படி கத்துறாங்க ..?!
சும்மா போட்டத போட்டபடி போகவேண்டாம்? எழவு வீட்டை பற்றி மேலும் தகவலுக்கு http://paadhasaary.blogspot.com/
:-)

p.s: ஸ்மைலி மட்டும் போடலை :-)
நல்லா கத விடுறீங்க.....!
HariShankar said…
சிம்பிள்ah சொல்லீடீங்க இந்திரா.. :) உங்க கதைகள் எல்லாம் கொஞ்சம் படிசுடதலா தலைப்பும் பாதி படிச்சதும் கொஞ்சம் உசாரா ஆயிட்டேன்.. ஹி.ஹி.ஹி.ஈ..... இனி நன் ஏமாற மாட்டேன் :)

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..