பதிவுகள் அதிக ஓட்டுகள் பெற சில டிப்ஸ்..


பதிவுலகைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட பதிவுகளுக்கு ஓட்டு அதிகமா விழுகுதுன்னே புரியமாட்டிங்கிது. ஓவரா ஜிந்திச்சு (!!!) பொதுநலன், சமுதாய அக்கறைனு சொல்லி மாங்கு மாங்குனு எழுதுற பதிவுகள விட ரெண்டு மொக்கை ஜோக் சொல்ற பதிவுகளுக்கு ஓட்டு போட்டுத் தள்ளிட்றாங்க. ஜாலியா டென்சனில்லாத மொக்கை விசயமா இருந்தா தான் ஓட்டு விழுகுதுபோலனு நெனச்சோம்னா அதுவும் தப்பு. அரசியல், லிவிங் டுகெதர், 18+ , விழிப்புணர்வுப் பதிவு அப்டி இப்டினு சில பதிவுகளுக்கும் ஓட்டு அதிகமா விழுகுது.
பயபுள்ளைங்க.. என்னதான் சொல்ல வறாங்க, எந்த மாதிரி பதிவுகள தான் எதிர்பாக்குறாங்கனே வௌங்கமாட்டிங்கிது.
இப்ப நீ என்னதான் சொல்ல வறேனு கேக்குறீங்களா???
நீங்க எழுதுற பதிவுகளுக்கு, ஓட்டுகள் அதிகமா வாங்குறதுக்கு சில டிப்ஸ் சொல்லப் போறேன்.
பதிவுகள்ள என்ன கருமத்த வேணும்னாலும் எழுதுங்க. ஆனா கடைசியா (அல்லது முதல்லயே) டிஸ்கினு ஒன்னு எழுதுவோம்ல.. அது மாதிரி ஒரு சின்ன முஸ்கிய பதிவுல சேருங்க. அப்புறம் பாருங்க. உங்க ஓட்டுப் பட்டை எப்படி நிரம்பி வழியிதுனு.. என்ன முஸ்கினு கேக்குறீங்களா??
இதோ.. ஓட்டு வாங்குறதுக்கான சில முஸ்கி டிப்ஸ்
முஸ்கி 1
ஓட்டுப் போட்ற ஒவ்வொருத்தருக்கும் உங்களோட அக்கவுண்ட்ல இருந்து தலா ரூ500 கமிஷன் தரப்படும்னு சொல்லிடுங்க. (அக்கவுண்ட்ல மொத்தமே 500 தான் இருக்கா? ஷ்ஷ்ஷ் இதெல்லாம் அப்பாலிக்கா டீல் பண்ணிக்கலாம்)
முஸ்கி 2
முதல் ஓட்டுக்கு மட்டுமில்லாம எல்லா ஓட்டுக்குமே வடை கொடுக்கப்படும்னு அறிவிச்சிடுங்க. (அப்பவாவது செல்வாவின் வடை பைத்தியம் குறையுதானு பாப்போம்)
முஸ்கி 3
ஓட்டுப் போட்ற எல்லாருக்குமே அனுஷ்கா, நமீதா, ரகஷ்யா போன்றவர்களின் புகைப்படங்கள் அவங்க பெர்சனல் செல் நம்பரொட. அனுப்பி வைக்கப்படும்னு சொல்லுங்க. (யாருப்பா அது.. ஓட்டுப்போட க்யூல நிக்கிறது??)
முஸ்கி 4
ஓட்டுப் போட்றவங்களோட ப்ளாக்குக்கு, அடுத்த ரெண்டு வருஷத்துக்கு, மொக்கை பதிவுகளானாலும், தவறாம வந்து அருமை, சூப்பர், பகிர்வுக்கு நன்றி அப்டினு ஏதாவது ஒரு பின்னூட்டமும் ஓட்டும் போடுறேனு ஒப்பந்தம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுங்க. (என்ன பண்ணித் தொலையிறது)
முஸ்கி 5
ஓட்டுப் போடாம போறவங்களோட ப்ளாக்குக்கு சிரிப்பு போலீஸ், மங்குனி, டெரர், பன்னிக்குட்டி போன்ற பதிவுலகின் ஜீனியஸ்களை (என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்) அனுப்பி, கும்மு கும்முனு கும்மியடிக்க சொல்லிடுவேன்னு மிரட்டல் விடுங்க.
முஸ்கி 6
ஓட்டுப் போடாம போறவங்களுக்கு விருதகிரி, மேதை, வீராசாமி போன்ற சூப்பர் ஹிட் காவியத் திரைப்படங்களைக் கட்டாயமாகப் பார்க்கும் தண்டனை வழங்கப்படும்னு சொல்லுங்க. (டெரரான தண்டனையில்ல..)
முஸ்கி 7
ஓட்டுப் போடாம இந்த ப்ளாக்க தாண்டுறவங்க அடுத்த நிமிசம் ரத்தம் கக்கி சாவாங்க.. கை கால் எல்லாம் இழுத்துக்கும்.. தலை சுக்கு நூறா வெடிச்சிடும்.. அவர்களுக்கு பில்லி, சூன்யம், ஏவல் எல்லாம் துல்லியமான நவீனமான முறையில் வைக்கப்படும்னு அறிவிப்பு விடுங்க. (மறந்துபோய் சொந்தக் காசுல சூன்யம் வச்சுக்காதீங்க..)
முஸ்கி 8
மேல உள்ள எல்லா முஸ்கியையும் விட இது ரொம்ப பவர்புல்லானது. கண்டிப்பா இத படிக்கிறவங்களுக்கு ஓட்டுப் போடாம போறதுக்கு மனசே வறாது.
“இந்த பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கும்பட்சத்தில், நான் அடுத்து பதிவுகளே எழுதப்போவதில்லைனு உறுதி கூறுகிறேன்னு சொல்லிடுங்க.
இத விட ஒரு சந்தோசம் அவங்களுக்கு இருக்க முடியுமா என்ன? கண்டிப்பா ஓட்டுப் போட்ருவாங்க.
இன்னும் என்ன பண்றீங்க???
சட்டுபுட்டுனு இந்தப் பதிவுக்கு பின்னூட்டமும் ஓட்டும் போட்டுட்டு போய்ப் பதிவெழுத ஆரம்பிங்க.. முஸ்கி போட மறந்துடாதீங்க.
.
.

Comments

Chitra said…
இதுல எந்த முஸ்கி - இந்த பதிவுக்கு நாங்க வோட்டு போடுறதற்கு என்று நீங்க சொல்லவே இல்லையே..... அவ்வ்வ்வ்......
Mythees said…
உங்க பதிவுக்கு முன்னாடி தமிளிஷ் ல இனச்சா வோட் கிடைக்குமா...
நெசமாலுமே அருமைங்க...

பின்னிட்டீங்க..
இந்த ஓட்டு வாங்கற வித்தை மட்டுமில்ல. .இந்த பதிவுலக சூழலே கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு..

எதுவுமே புரியலீங்க..கூட்டு வெச்சிட்டு ஒட்டுப் போட்டா, நல்ல பதிவு கிடைக்காம போயிடுது.. நல்ல பதிவைத்தேடும் நம்ப நேரமும் வீணாகுது..ஒரு சின்சியரான முறை கூட இப்படி circumvent ஆகிப் போகுதுங்க..

இப்ப நான் கணினி முன்னால உக்கார்ந்து செலவழிக்கற நேரமெல்லாம் வீணாப்போறது போல ஒரு உணர்வு..

I have to rethink my opinion..Any way..thanks for your tips.

God Bless You..
Arun Prasath said…
நீங்க முஸ்கி எழுதவே இல்ல, வோட் போடவா வேணாமா..
karthikkumar said…
எதுக்குங்க வினை வோட்டு போட்டுட்டேன்
//Chitra said...

இதுல எந்த முஸ்கி - இந்த பதிவுக்கு நாங்க வோட்டு போடுறதற்கு என்று நீங்க சொல்லவே இல்லையே..... அவ்வ்வ்வ்......//

அட என்னங்க சித்ரா.. 8 முஸ்கி குடுத்துருக்கேனே.. அதுல உங்களுக்கு பிடிச்ச முஸ்கிய நீங்களே செலக்ட் பண்ணிக்கங்க.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. சூனியம் வச்சிராதீங்க...
//ஓட்டுப் போடாம போறவங்களோட ப்ளாக்குக்கு சிரிப்பு போலீஸ், மங்குனி, டெரர், பன்னிக்குட்டி போன்ற பதிவுலகின் ஜீனியஸ்களை //

முடியல

நான் ஓட்டு போட்டுட்டேன்த்தா ஆள விடுங்க...
//வெட்டிப்பேச்சு said...

நெசமாலுமே அருமைங்க...

பின்னிட்டீங்க..//

நன்றிங்க..
//Mythees said...

உங்க பதிவுக்கு முன்னாடி தமிளிஷ் ல இனச்சா வோட் கிடைக்குமா...//

பின்னாடி இனைச்சாலும் கிடைக்கும்ங்க..
போட்டாச்சு , போட்டாச்சு ............. சே..... என்னமா மிரட்டுறாங்க ....... இனிமே காலைல ஒரு தடவ சாயந்தரம் ஒரு தடவ கண்டிப்பா வந்து ரெண்டு கள்ள ஒட்டு கூட சேத்து போட்டு போயிடுறேன்........
//karthikkumar said...

எதுக்குங்க வினை வோட்டு போட்டுட்டேன்//


ம்ம்.. அந்த பயம் இருக்கட்டும்.
என்ன வெளயாட்டு இது.....??????

(ஒரு பதிவு ஓட்டுக்கே இம்மா பல்டி அடிக்கணும்னா அப்ப கோட்டைய புடிக்க நடக்குறதெல்லாம் ஜுஜுபி போலயே!!!)
//Arun Prasath said...

நீங்க முஸ்கி எழுதவே இல்ல, வோட் போடவா வேணாமா..//

அப்புறம் முஸ்கில சொன்னது மாதிரி சூன்யம் வச்சிடுவேன். பரவாயில்லையா???
இன்னொரு முஸ்கி சேர்த்து இருக்கலாம்... ஓட்டு போடலைனா இந்திராவின் கிறுக்கலகளை ஒரு பதிவு விடாம எல்லாத்தையும் 10 முறை படிக்கனும்னு.... மரண் தண்டனை
//வெறும்பய said...

நான் ஓட்டு போட்டுட்டேன்.. சூனியம் வச்சிராதீங்க...//

ஓட்டுப் போடலனாதான் வப்பேன். நீங்க பயப்படாம போங்க.
//ப்ரியமுடன் வசந்த் said...


முடியல

நான் ஓட்டு போட்டுட்டேன்த்தா ஆள விடுங்க...//


பொழச்சுப் போங்கனு விட்றேன்.
//மங்குனி அமைச்சர் said...

போட்டாச்சு , போட்டாச்சு ............. சே..... என்னமா மிரட்டுறாங்க ....... இனிமே காலைல ஒரு தடவ சாயந்தரம் ஒரு தடவ கண்டிப்பா வந்து ரெண்டு கள்ள ஒட்டு கூட சேத்து போட்டு போயிடுறேன்........//


என்ன ஒரு தாராளமான மனசு அமைச்சருக்கு.. நன்றி மங்குனி.
//வார்த்தை said...

என்ன வெளயாட்டு இது.....??????

(ஒரு பதிவு ஓட்டுக்கே இம்மா பல்டி அடிக்கணும்னா அப்ப கோட்டைய புடிக்க நடக்குறதெல்லாம் ஜுஜுபி போலயே!!!)//

என்ன பண்ணித் தொலையிறது சார்.. காலம் ரொம்ப முன்னேறுது இல்ல..
chelas said…
அருமை
commentsku evlo amount?
ஓட்டுப் போட்ற ஒவ்வொருத்தருக்கும் உங்களோட அக்கவுண்ட்ல இருந்து தலா ரூ500 கமிஷன் தரப்படும்னு சொல்லிடுங்க. (அக்கவுண்ட்ல மொத்தமே 500 தான் இருக்கா? ஷ்ஷ்ஷ் இதெல்லாம் அப்பாலிக்கா டீல் பண்ணிக்கலாம்)

டீல் பண்ணிக்கிலாம்தான் ஆனா அந்த 500 ரூபாயையும் அப்பப்ப நானே வலிச்சுடுவேனே .அதுக்கு எதாவுது ஐடியா சொல்லுங்களேன்
//அருண் பிரசாத் said...

இன்னொரு முஸ்கி சேர்த்து இருக்கலாம்... ஓட்டு போடலைனா இந்திராவின் கிறுக்கலகளை ஒரு பதிவு விடாம எல்லாத்தையும் 10 முறை படிக்கனும்னு.... மரண் தண்டனை//

அட.. இது கூட நல்லா தான் இருக்கு.
எனக்கு ஓட்டுப் போடாதவங்களுக்கு அருண் பிரசாத் பதிவுகள படிக்கிற மரண தண்டனைய அறிவிச்சிட்றேங்க..
நானும் ஓட்டும் போட்டேங்க சூன்யத்தை கீன்யத்தை வச்சுடாதீங்க (வைக்காமலே நா அப்படிதான் சுத்தீக்கிட்டுருக்கேன் அது வேற விஷயம் )
//chelas said...

அருமை//

நன்றி
//LK said...

commentsku evlo amount?//

ஓட்டுக்கும் கமென்டுக்கும் தனித் தனியா அமௌண்ட் வேணுமா???
பொழைக்கத் தெரிஞ்சவர்தான் நீங்க.
//நா.மணிவண்ணன் said...

டீல் பண்ணிக்கிலாம்தான் ஆனா அந்த 500 ரூபாயையும் அப்பப்ப நானே வலிச்சுடுவேனே .அதுக்கு எதாவுது ஐடியா சொல்லுங்களேன்//

என் இனமடா நீ..
அமவுண்ட் மட்டும்ன்னா செல்லாது.. இலவசப்பரிசுகள் எதுனாச்சும் சேர்த்து அறிவிச்சாத்தான் ஓட்டு :-))
வைகை said…
ஓட்டுக்கு "Horlics" பாட்டில் கொடுத்து பாருங்க இன்னும் ஹிட்டடிக்கும்!!! ( நீங்களாவது வாங்கி கொடுங்க!! வாங்கியத கொடுக்காம!!!)
Balaji saravana said…
ஆத்தா மகமாயி, இந்த மதுரை புள்ள இந்த மெரட்டு மெரட்டுதே.. நாங்கல்லாம் வரிசைல வந்து ஓட்டு குத்திட்டு தான் போறோம் தாயி. :)
மங்குனி அய்யா....
ஞாபகம் வச்சுக்கங்க......
கள்ள ஓட்டு போடறவங்களுக்கு ரெண்டு குவாட்டர் இனாமாம்.... சைட் டிஷ்-க்கு அடுத்த பதிவுக்கு ஓட்டுப் போடணும்....
பதறிக்கிட்டு ஓட்டு போட்டுட்டோம்லெ:-)
//வைகை said...

ஓட்டுக்கு "Horlics" பாட்டில் கொடுத்து பாருங்க இன்னும் ஹிட்டடிக்கும்!!! ( நீங்களாவது வாங்கி கொடுங்க!! வாங்கியத கொடுக்காம!!!)//

ரொம்ப நொந்துபோய்ருக்கீங்க போல..
//அமைதிச்சாரல் said...

அமவுண்ட் மட்டும்ன்னா செல்லாது.. இலவசப்பரிசுகள் எதுனாச்சும் சேர்த்து அறிவிச்சாத்தான் ஓட்டு :-))//

இலவசமா பத்து பின்னூட்டம் எழுதுறதுக்கு இடம் தறேங்க. எழுதிட்டுப் போங்க.
//சிவசங்கர். said...

மங்குனி அய்யா....
ஞாபகம் வச்சுக்கங்க......
கள்ள ஓட்டு போடறவங்களுக்கு ரெண்டு குவாட்டர் இனாமாம்.... சைட் டிஷ்-க்கு அடுத்த பதிவுக்கு ஓட்டுப் போடணும்....//

ஆமாங்க.. அதுவும் சிவசங்கர் அக்கவுண்ட்ல தரப்படும். எல்லாரும் வாங்க.
//Balaji saravana said...

ஆத்தா மகமாயி, இந்த மதுரை புள்ள இந்த மெரட்டு மெரட்டுதே.. நாங்கல்லாம் வரிசைல வந்து ஓட்டு குத்திட்டு தான் போறோம் தாயி. :)//

அந்த பயம் இருக்கட்டும். மதுரைக்காரவுக வெவரமா தான் இருப்போம். தெரியும்ல..
//துளசி கோபால் said...

பதறிக்கிட்டு ஓட்டு போட்டுட்டோம்லெ:-)//

பதற்றத்துல மாத்தி வேறாளுக்கு ஓட்டுப் போட்றாதீங்க. அதுக்கும் சூன்யம் உண்டு. ஜாக்க்க்க்க்க்ரதை..
நிஜமா அருமையான திட்டங்கள்..
நல்லா சொன்னீங்க....

ஒருவேல இப்படி இருக்குமோ ...

மவனே.... நான் தேர்தல்ல ஒட்டுபோட்டவனே என்தலையில கல்லை தூக்கி போட்டுபோறான். இதுல இவனுங்களுக்கு ஒட்டு போட்டா எத தூக்கி போடுவானுங்கன்னு நெனைக்கிராங்கலோ என்னவோ!
Madurai pandi said…
மதுரை ல வோட்டுக்கு ஆயிரம் கொடுக்றாங்க.. நீங்க என்னடானா வெறும் ஐநூறு தானா ? பத்தாது .. பத்தாது!!!
//விக்கி உலகம் said...

நல்லா சொன்னீங்க....

ஒருவேல இப்படி இருக்குமோ ...

மவனே.... நான் தேர்தல்ல ஒட்டுபோட்டவனே என்தலையில கல்லை தூக்கி போட்டுபோறான். இதுல இவனுங்களுக்கு ஒட்டு போட்டா எத தூக்கி போடுவானுங்கன்னு நெனைக்கிராங்கலோ என்னவோ!//

அப்படியெல்லாம் நெனைக்க மாட்டாங்க. ஏன்னா இவங்க ரொம்ம்ம்ப நல்லவங்களாச்சே..
//அமுதா கிருஷ்ணா said...

நிஜமா அருமையான திட்டங்கள்..//

நிஜமாவே நன்றிங்க..
//மதுரை பாண்டி said...

மதுரை ல வோட்டுக்கு ஆயிரம் கொடுக்றாங்க.. நீங்க என்னடானா வெறும் ஐநூறு தானா ? பத்தாது .. பத்தாது!!!//

அடுத்த பதிவுக்கு ஓட்டுப் போடும்போது செட்டில் பண்ணிடலாங்க. (இனிமே இந்தப் பக்கமே வரமாட்டேனு சொல்ற மாதிரியிருக்கே..)
ஹரிஸ் said…
நான் 8வது முஸ்கிய நம்பி ஓட்டு போட்டுடேன்கா...
//ஹரிஸ் said...

நான் 8வது முஸ்கிய நம்பி ஓட்டு போட்டுடேன்கா...//

உங்களுக்கு ஏழாவது முஸ்கி தான் சரியா வரும்னு நெனைக்கிறேன் ஹரிஸ்..
என்ன கொடுமைங்க இது ., வெறும் முஸ்கியாவே இருக்குது ..!!
// எழுதுற பதிவுகள விட ரெண்டு மொக்கை ஜோக் சொல்ற பதிவுகளுக்கு ஓட்டு போட்டுத் தள்ளிட்றாங்க. //

என்னைய தானே கிண்டல் பண்ணுறீங்க ..!!
//முதல் ஓட்டுக்கு மட்டுமில்லாம எல்லா ஓட்டுக்குமே வடை கொடுக்கப்படும்னு அறிவிச்சிடுங்க. (அப்பவாவது செல்வாவின் வடை பைத்தியம் குறையுதானு பாப்போம்)
//

ஹி ஹி ஹி ., வடை வாங்குவது ரொம்ப முக்கியம்க .!!
வந்தேன் வடையை வென்றேன் ..!!
/“இந்த பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைக்கும்பட்சத்தில், நான் அடுத்து பதிவுகளே எழுதப்போவதில்லைனு உறுதி கூறுகிறேன்”னு சொல்லிடுங்க.//

ஹி ஹி ஹி ., இதுதான் உங்களோட முஸ்கி ..!!
////ஓட்டுப் போடாம போறவங்களோட ப்ளாக்குக்கு சிரிப்பு போலீஸ், மங்குனி, டெரர், பன்னிக்குட்டி போன்ற பதிவுலகின் ஜீனியஸ்களை //

என்னா ஒரு வில்லத்தனம்...

ஓட்டுப் போட்டாச்சுங்க... இண்ட்லியில் 36 ஆவது ஓட்டு தமிழ்மணத்தில் 15 ஆவது ஓட்டு எப்படி நம்ம கணக்கு...

அப்புறம் ம்ம்ம்ம்... 52 ஆவது

(அய்யா ராசா போதும்டா) நீங்க சொல்றது புரியுது
வந்தது வந்துட்டோம் ஒரு கணக்கா 55ல முடிப்போம்...
கணக்கு தப்பாயிடுச்சு 53
இப்ப 54...
//மாணவன் said...

வந்தது வந்துட்டோம் ஒரு கணக்கா 55ல முடிப்போம்...//

100 வரைக்கும் கூட இருங்க. எனக்கொன்னும் ஆட்சேபணையில்லங்க..
//ப.செல்வக்குமார் said...

வந்தேன் வடையை வென்றேன் ..!!//


அடங்க மாட்டீங்கிறீங்களே செல்வா..
//முதல் ஓட்டுக்கு மட்டுமில்லாம எல்லா ஓட்டுக்குமே வடை கொடுக்கப்படும்னு அறிவிச்சிடுங்க. (அப்பவாவது செல்வாவின் வடை பைத்தியம் குறையுதானு பாப்போம்)///

அப்டின்னா செல்வா 1000 கமெண்ட் போடுவான் பரவா இல்லியா?
ஓட்டுப் போட்ற ஒவ்வொருத்தருக்கும் உங்களோட அக்கவுண்ட்ல இருந்து தலா ரூ500 கமிஷன் தரப்படும்னு சொல்லிடுங்க. (அக்கவுண்ட்ல மொத்தமே 500 தான் இருக்கா? ஷ்ஷ்ஷ் இதெல்லாம் அப்பாலிக்கா டீல் பண்ணிக்கலாம்)//

-- உங்க பதிவா இருந்தா காசு கொடுத்தாலும் வரமாட்டோம்...
//ஓட்டுப் போடாம போறவங்களோட ப்ளாக்குக்கு சிரிப்பு போலீஸ், மங்குனி, டெரர், பன்னிக்குட்டி போன்ற பதிவுலகின் ஜீனியஸ்களை (என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்) அனுப்பி, கும்மு கும்முனு கும்மியடிக்க சொல்லிடுவேன்னு மிரட்டல் விடுங்க.//

Terror போட்டோ ஒன்னு அனுப்பிடலாமா?
/ஓட்டுப் போட்றவங்களோட ப்ளாக்குக்கு, அடுத்த ரெண்டு வருஷத்துக்கு, மொக்கை பதிவுகளானாலும், தவறாம வந்து அருமை, சூப்பர், பகிர்வுக்கு நன்றி அப்டினு ஏதாவது ஒரு பின்னூட்டமும் ஓட்டும் போடுறேனு ஒப்பந்தம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுங்க. (என்ன பண்ணித் தொலையிறது)///

அருமை,
சூப்பர்,
பகிர்வுக்கு நன்றி
/ஓட்டுப் போட்ற எல்லாருக்குமே அனுஷ்கா, நமீதா, ரகஷ்யா போன்றவர்களின் புகைப்படங்கள் அவங்க பெர்சனல் செல் நம்பரொட. அனுப்பி வைக்கப்படும்னு சொல்லுங்க. (யாருப்பா அது.. ஓட்டுப்போட க்யூல நிக்கிறது??)///

என்ன மாதிரி குழந்தைகளுக்கு ஏதாச்சும்?
ஓட்டுப் போடாம இந்த ப்ளாக்க தாண்டுறவங்க அடுத்த நிமிசம் ரத்தம் கக்கி சாவாங்க.. கை கால் எல்லாம் இழுத்துக்கும்.. தலை சுக்கு நூறா வெடிச்சிடும்.. அவர்களுக்கு பில்லி, சூன்யம், ஏவல் எல்லாம் துல்லியமான நவீனமான முறையில் வைக்கப்படும்னு அறிவிப்பு விடுங்க. (மறந்துபோய் சொந்தக் காசுல சூன்யம் வச்சுக்காதீங்க..)////


எனக்கு 18- நான் ஓட்டு போடணுமா?
/ஓட்டுப் போடாம போறவங்களுக்கு விருதகிரி, மேதை, வீராசாமி போன்ற சூப்பர் ஹிட் காவியத் திரைப்படங்களைக் கட்டாயமாகப் பார்க்கும் தண்டனை வழங்கப்படும்னு சொல்லுங்க. (டெரரான தண்டனையில்ல..)///

விருதகிரி கதை அல்ல காவியம்
///ஓட்டுப் போடாம போறவங்களோட ப்ளாக்குக்கு சிரிப்பு போலீஸ், மங்குனி, டெரர், பன்னிக்குட்டி போன்ற பதிவுலகின் ஜீனியஸ்களை (என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்) அனுப்பி, கும்மு கும்முனு கும்மியடிக்க சொல்லிடுவேன்னு மிரட்டல் விடுங்க.///

மேடம்...!
நாங்க உஷாரான.... விவரமான ஆளு...!
உங்களைமாதிரி ஆளுங்க இதமாதிரி கும்மியடிக்க ஆளனுப்பி... களேபரம் பண்வீங்கன்னுதான்...
"பதிவே" போடாம..... பதிவுலகில் வலம்வரோம்...!

இஞ்ச...! உஷாரா இல்லானா... நெஜார கழட்டிடுவாங்கன்னு தெரியாத மொக்கையா நாங்க......!

எப்பிடி...?
//அருண் பிரசாத் said...

இன்னொரு முஸ்கி சேர்த்து இருக்கலாம்... ஓட்டு போடலைனா இந்திராவின் கிறுக்கலகளை ஒரு பதிவு விடாம எல்லாத்தையும் 10 முறை படிக்கனும்னு.... மரண் தண்டனை//

Repeatu..
asiya omar said…
எங்கிட்ட ஓட்டு வாங்கிட்டீங்க.நகைச்சுவை சூப்பர்.
இந்த டீலிங் நல்லாத்தான் இரக்கு செஞ்சிடுவொம்.... (நாம அறிக்கை மட்டும் தான் தொண்டர்களே)

சகோதரி எனது தளத்திற்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்
ஓட்டு போட்டுட்டேன்..
ஒரே டிப்ஸ் மயமா இருக்கே!
இந்த ஓட்டு வாங்கி, எங்க நிலம் வாங்கலாமுனு சொன்னீங்கனா, இன்னும் நன்றியுள்ளவனாக இருப்பேன்..

அட பார்றா.. இன்னொரு ஸ்மைலி!!!...

:-)

..
:) போட்டுட்டேன்
ஹேமா said…
இந்திரா......அடக்கடவுளே உண்மையாவே பயத்தில ஓட்டுப் போட்டிட்டேன் !
siva said…
75...........

mee the first.....
R.Gopi said…
அதெல்லாம் சரி இந்திரா....

எனக்கு ஒரு ஓட்டு போட்டா எவ்ளோ தருவீங்க!!!?
Mathi said…
indhira !!! thanks for ur valuable tips...
Mathi said…
indhira !!! thanks for ur valuable tips...
vinu said…
he he he konjam late aayudichu kovichukkaatheengaa

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..