ராசிப்பொண்ணுக்கு ஒரு வாழ்த்து..
இப்படி வாழ்த்துப் பதிவு போட்றதுலயும் ஒரு வசதி இருக்குங்க.. பின்னூட்டம் போட்றவங்களுக்கு சிரமமே இருக்காது. தங்களோட கருத்துனு தனியா சொல்றதுக்கு எதுவும் இருக்காது.. மிஞ்சிப்போனா ரெண்டு வரில ஏதாவது வாசகம், இல்லேனா வெறுமனே “வாழ்த்துக்கள்“, ”பிறந்தநாள் வாழ்த்துக்கள்“னு மட்டும் போடலாம்.. அதுவும் கூட முந்தின பின்னூட்டத்துல இருந்து Copy பண்ணி paste பண்ணிடலாம்.. சரிதானே???? (அதாவது தயவு செஞ்சு வாழ்த்திடுங்க ப்ளீஸ்..னு சொல்ல வரேன். ஏன்னு, பதிவப் படிச்சா உங்களுக்கே புரியும்.)
சரி விஷயத்துக்கு வரேன்...
எனக்கு ரெண்டு தங்கைனு ஏற்கனவே சொல்லிருக்கேன். (எப்ப“னு கேட்டு பல்பு குடுக்காதீங்க.. முந்தின ஏதோ ஒரு பதிவுல சொல்லிருக்கேங்க.) அதுல ரெண்டாவது தங்கைக்கு, அதாவது எங்க வீட்டு கடைக்குட்டிக்கு, வர்ற ஞாயித்துக் கிழமை (27.02.2011) பிறந்தநாள். (அதுக்கென்ன இப்ப“னு கேட்டும் பல்பு குடுத்துடாதீங்க). அவளுக்கு வாழ்த்து சொல்லுங்க.. தயவு செஞ்சு சொல்லிடுங்க ப்ளீஸ்.. “எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பதிவு போடு“னு திரும்ப திரும்ப போன் பண்ணி அவளே கேட்டுகிட்டதால இத நா சொல்லல.. (ஐய்யயோ.. உண்மைய உளறிட்டேனோ..!!) எனக்கு அவ மேல பாசம் ஜாஆஆஆஆஸ்தி.. அதுனால சொல்றேன். (ஹிஹிஹி).
அவளோட உண்மையான பேர் வேற. அவ ரொம்ப ராசியான பொண்ணுனு அப்பா அடிக்கடி சொல்றதுனால அவளுக்கு செல்லமா “ராசிப்பொண்ணு“னு பேர் வச்சிட்டோம். (கிண்டலுக்காகவும் தான்). இந்தப் பேர சொன்னா அவ பயங்கரமா டென்சனாயிடுவா.. பின்ன?? அவளோட காலேஜ்ல போய் பிரபலமாக்கிட்டோம்ல.. இப்ப அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டிருக்கோம். அந்த முகம் தெரியாத பலியாடு எங்க சுத்திகிட்டிருக்கோ தெரில.. எப்படியும் இந்த வருஷம் பிரியாணிக்கு சிக்கிடும். அதுனால ராசிப்பொண்ணுக்கு நாம எல்லாரும் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்தும், பலியாடு சிக்கிறதுக்கு வாழ்த்தும் சொல்வோம்.
குறிப்பா வாழ்த்து சொல்ற எல்லாரும் அவளோட செல்லப்பேர சொல்லி வாழ்த்து சொல்லணும்னு கேட்டுக்குறேன்.. (அடுத்தவங்கள கடுப்பாக்கிப் பாக்குறதுலயும் என்னா ஒரு ஆனந்தம்..).
ரெண்டு நாள் இந்தப் பக்கம் வர முடியாது. அதுனால தான் இன்னைக்கே பதிவுல சொல்லிட்டேன்.
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.. (இத Copy பண்ணுவீங்களே..!!!)
.
.
Comments
அதிக பாசம் ஜலதோசம் பிடிக்குமாம்...
வேண்டாம்னு சொன்னா விடவாப்போறீங்க...
உண்மைய வெளிய சொல்லாக்கூடாது...
ராசிக்கல்லு கேள்விப்பட்டு இருக்கேன் ராசிப்பொண்ணு வித்தியாசமா இருக்கு...
பல்பு வாங்குறது உங்களுக்கு புதுசா...
அடுத்து திருமண அழைப்பு என ஒரு பதிவு போடுங்க அந்த பலி ஆட்டுக்கு இத மெயில் அனுப்புறோம்...
வாழ்த்துக்கள்... ராசிப்பொண்ணுக்கு..
உங்களுக்கு கண்டனம் அந்த பாசக்கார பொண்ண பாடாப் படுத்தியதற்கு...
http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html
Happy Birthday Astrological sign
:-))))))
ஒவ்வொருவரும்
தேடிக்கொண்டிருக்க,
ராசியே தானாய் உன்னில்
வந்தமர்ந்தமைக்கு
இந்த ரசிகனின் வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியாய் இருக்க
ஒரே ஒரு ஜீவன் மட்டும்
வருத்தமாய்...
உன்னைவிட்டு நீங்கும்
உன் வயது...
மச்சி சீக்கிரம் வாழ்த்து சொல்லிடு.. அப்பத்தான் இந்திரா நம்பர் கொடுப்பாங்க..ஹி..ஹி..
ஆமா..ஆமா.. குரங்குங்களுக்கு தங்காச்சி மேல ரொம்ப பாசமாம்.. கேள்விபட்ருக்கேன்.
ஹிஹி..
இத நாங்க காப்பி பண்ணவே இல்ல.
( சொந்தமா டைப் பண்ணோமாக்கும் )
Ha ha
ஒவ்வொருவரும்
தேடிக்கொண்டிருக்க,
ராசியே தானாய் உன்னில்
வந்தமர்ந்தமைக்கு
இந்த ரசிகனின் வாழ்த்துக்கள்...
நன்றி - கவிதைக்காதலன்
இத நாங்க காப்பி பண்ணவே இல்ல.
( சொந்தமா டைப் பண்ணோமாக்கும்
மகிழ்ச்சியாய் இருக்க
ஒரே ஒரு ஜீவன் மட்டும்
வருத்தமாய்...
உன்னைவிட்டு நீங்கும்
உன் வயது.
நன்றி - கவிதைக்காதலன்
உங்களுக்கு இந்திரா சொன்ன மாதிரி சொன்னா கோபம் வருமாம்ல.. சரி சரி.. பேர் தெரியாத தோழிக்கு வாழ்த்துக்கள்.. நான் ரொம்ப நல்லவள்ங்க..
யாடு மாட்டவும் வாழ்த்துக்கள்.
காப்பி பண்ணிட்டோம்ல ஹா ஹா ஹா ஹா
கை ராசி பொண்ணுக்கு ஒரு கை ராசி பையன் கிடைக்க வாழ்த்துகிறேன்....
அதே போல பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள்....
......அவ மேல பாசம் ஜாஆஆஆஆஸ்தி..னு தெரியுது.... பதிவில வேற வரிகள் காப்பி பேஸ்ட் பண்ணிட்டோம்ல... ஹி,ஹி,ஹி,ஹி...
உங்கள் ஆருயிர் தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இந்த வருடமே குடும்ப இஸ்திரியாக வாழ்த்துக்கள். ஹி ஹி ஹி... யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்...:)))
மனம் விரும்பும் வண்ணம் மாலை சூடிட மணாளன் அமையட்டும் விரைவில்...
அடப்பாவிகளா வீட்டுக்கு வர மாப்பிள்ளைய பலியாடாக்கி பிரியாணி போடுறீங்காளா. யாரு பெத்த புள்ளயோ உங்ககிட்ட பலியாகப்போகுது. வாழ்த்துக்கள்.
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.
நன்றி.. நன்றி.. நன்றி..