அபசகுனமாகவும் நினைக்கப் பழகு..



பொதுவா ஏதாவதொரு விசயம் நடக்கணும்னு நெனச்சு, ரொம்ப நம்பிக்கையா அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கும்போது, அந்த விசயம் நடக்காதுங்குற மாதிரி யாராவது பேசினா நமக்கு எவ்ளோ கோவம் வரும்??? “ஏய்.. அபசகுனமாப் பேசாதே“னு அவங்கள திட்டுவோம். சகுனம் பாக்குற பழக்கம் தவறுங்குறது பலருடைய கருத்து. ஆனா அப்டி நெனைக்கிறவங்க கூட, அபசகுனமா பேசுறத விரும்புறதில்லை. ஆனா நா இங்க சொல்ல வர்றது என்னனா.. அபசகுனமான எண்ணங்களும் நமக்குள்ள வேணும்குறது தான்.

நமக்குள் பாசிட்டிவான எண்ணங்கள் இருப்பது நல்லதுதான், ஆனா எப்போதும் அதுவே பழக்கமாகிவிடும் பட்சத்துல, நெகடிவ்வாக நடக்கும் சம்பவங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் பலருக்கு இருப்பது கிடையாது. “ஓவர் கான்ஃபிடன்ட், உடம்புக்கு ஆகாது“னு சொல்வாங்க.. அது கிண்டலுக்கு சொல்றதுனு தோணலாம். ஆனா அதுதான் உண்மையும் கூட. அளவுக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு வைக்கும்போது, ஒருவேளை அது ஏமாற்றம் குடுத்துவிட்டால், அதைத் தாங்கும் மன வலிமை நமக்கு ஏற்படுவதில்லை.

அதுக்காக தன்னம்பிக்கை இருக்கக் கூடாதுனு சொல்ல வரல. எந்த விதமான மாற்றத்துக்கும் மனதைப் பழக்கப்படுத்திக்கணும்னு சொல்ல வர்றேன். நமக்குப் பிடிச்சமாதிரியான சூழல்கள்ல மட்டுமே நம்மள பொருத்திப் பாக்குறது தான் மனித நடைமுறை. நமக்குப் பிடிக்காத அல்லது நமக்கு எதிரான ஏதாவது சம்பவம் நடந்துருச்சுனா உடனே.. “எனக்கு மட்டும் ஏன் தான் இப்டி நடக்குதோ“னு நொந்துக்குறது தான் மனுஷங்களோட இயல்பு.

உதாரணத்துக்கு ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு, அந்த வேலை கட்டாயம் தனக்கு கிடைக்கும்னு அபாரமான நம்பிக்கைல, முதல் மாசம் வாங்கப்போற சம்பளத்துல என்னென்ன செலவு பண்ணலாம்குறது வரைக்கும் திட்டம் போட்டு வச்சிருப்பாங்க. சட்டுனு அந்த வேலை அவங்களுக்கு கிடைக்காதுங்குற சூழ்நிலை வரும்போது, அந்த ஏமாற்றத்த அவங்களால தாங்கிக்க முடியிறதில்ல. தனக்கு இனிமே வேலையே கிடைக்கப் போறதில்லையோங்குற மாதிரியான விரக்தி நிலைக்குப் போயிட்றாங்க.

ஒரு விசயம் நடக்கணும்னு நெனைக்கலாம்.. ஆனா அதே விசயம் நடக்கலனா மேற்கொண்டு என்ன பண்றதுன்னும் முன்கூட்டியே யோசிக்கணும். நேர்மறையாவே யூகம் பண்ணிட்டு, ஒருவேளை எதிர்மறையா நடக்கும்போது அந்த நேரத்துல என்ன செய்றதுனு தெரியாம முழிக்க கூடாது.

ஆனா.. அடுத்தவன் ஏதாவது காரியத்துக்கு முயற்சி செஞ்சுகிட்டு இருக்கும்போது லூசு மாதிரி “இதெல்லாம் நடக்காதுடா, விட்டுடு“னு சொல்லி அடி வாங்கிடாதீங்க.. நா சொல்றது உங்களோட தனிப்பட்ட உணர்வுகளப் பத்தி மட்டும் தான்.

இன்னும் தெளிவா சொல்லணும்னா... உதாரணத்துக்கு காதல் விசயத்த எடுத்துக்கலாம். (இப்ப படிப்பீங்களே..). ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணும்போது ரொம்பவே நம்பிக்கையோட அவகிட்ட சொல்லலாம். ஆனா உங்க லவ்வ அந்தப் பொண்ணு ஒருவேளை நிராகரிச்சுட்டா, மனசுடஞ்சு போய்டாம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும். மறுபடியும் அவளுக்குப் (பிடிச்ச மாதிரி) புரிய வைக்க முயற்சி பண்ணணும். இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். (லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்).

காதல், வேலை வாய்ப்புனு மட்டுமில்ல.. நம்மளோட சின்னச் சின்ன விசயத்துல கூட ஏதாவதொரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டு தான் இருக்கும். குறிப்பிட்ட சம்பவம் நடக்கும்னு நாம எந்தளவு நம்புறோமோ.. அதே அளவு, அந்த சம்பவம் நடக்காமலும் போகலாம்.. அப்ப அடுத்தகட்ட நடவடிக்கையா என்ன பண்றதுணும் யோசிச்சு வைக்கணும். அப்படி எதிர்மறையான விளைவுகளப் பத்தியும் முடிவெடுத்து வைக்கிறது, நம்மல தோல்வியால ஏற்பட்ற பாதிப்புல இருந்து மீட்கும்.

அதுக்காக எப்ப பாத்தாலும், தோத்துடுவோம்னு நெனச்சுகிட்டே எந்த முயற்சியும் பண்ணாம இருக்குறது முட்டாள் தனம். நம்மளால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணணும். அது நடக்காத பட்சத்துல அந்த முடிவ ஏத்துகிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைய எடுக்கணும். அந்த ஏமாற்றத்தோட பாதிப்புலயே மூழ்கிடக் கூடாது.

ஆல் த பெஸ்ட்.

.

Comments

Chitra said…
நம்மளால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணணும். அது நடக்காத பட்சத்துல அந்த முடிவ ஏத்துகிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைய எடுக்கணும். அந்த ஏமாற்றத்தோட பாதிப்புலயே மூழ்கிடக் கூடாது.


...well-said!
குட் போஸ்ட் :)

ஆனா எல்லாத்துக்கும் காதலோட தான் முடிச்சு போடனுமா :)
அருமையான பதிவு, நல்ல சிந்தனை மற்றும் வழிகாட்டக் கூடிய கருத்துக்கள்.
>>>(லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்).

ennai என்னை தாக்குவதற்காகவே பதிவில் இந்த லைனை சேர்த்த இந்திராவை நான் வன்மையாக...


ஹி ஹி பாராட்டுகிறேன்
siva said…
பிடித்தால் இந்த போஸ்டுக்கு கமெண்ட் போடணும் இல்லையா அடுத்த போஸ்டுக்கு :)

நல்ல பதிவு...
Lakshmi said…
ரொம்ப கரெக்ட் நம்ம முயற்சி கண்டிப்பா இருக்கனம்.
S Maharajan said…
ஆனா உங்க லவ்வ அந்தப் பொண்ணு ஒருவேளை நிராகரிச்சுட்டா, மனசுடஞ்சு போய்டாம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும். மறுபடியும் அவளுக்குப் (பிடிச்ச மாதிரி) புரிய வைக்க முயற்சி பண்ணணும். இல்லனா உருப்படியா வேறு ஏதாவது//.....

பெண்ணை பார்க்கனும் அப்படிதானே சொல்லவரீங்க...

//(லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்)//.

அப்போ எனக்கு இது செட் ஆகாது....
hehehehhee

//எதிர்மறையான விளைவுகளப் பத்தியும் முடிவெடுத்து வைக்கிறது, நம்மல தோல்வியால ஏற்பட்ற பாதிப்புல இருந்து மீட்கும//

தன்னம்பிக்கை வார்த்தை....
நல்ல பதிவு
//இன்னும் தெளிவா சொல்லணும்னா... உதாரணத்துக்கு காதல் விசயத்த எடுத்துக்கலாம். (இப்ப படிப்பீங்களே..). ஒரு பொண்ண சின்சியரா லவ் பண்ணும்போது ரொம்பவே நம்பிக்கையோட அவகிட்ட சொல்லலாம். ஆனா உங்க லவ்வ அந்தப் பொண்ணு ஒருவேளை நிராகரிச்சுட்டா, மனசுடஞ்சு போய்டாம அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கணும். மறுபடியும் அவளுக்குப் (பிடிச்ச மாதிரி) புரிய வைக்க முயற்சி பண்ணணும். இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். (லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்).//



ரொம்ப நல்ல அட்வைஸ்..
Arun Prasath said…
இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். //

அடடா வேற வழி இல்லீங்களா
//Speed Master said...

Nice//



டாங்க்ஸ்ங்க..
//Chitra said...


...well-said!//


நன்றி சித்ரா.. வடை உங்களுக்குத் தான்.
//siva said...

பிடித்தால் இந்த போஸ்டுக்கு கமெண்ட் போடணும் இல்லையா அடுத்த போஸ்டுக்கு :)

நல்ல பதிவு...//


ஹிஹி எனக்கேவா??????
//☀நான் ஆதவன்☀ said...

குட் போஸ்ட் :)

ஆனா எல்லாத்துக்கும் காதலோட தான் முடிச்சு போடனுமா :)//



பிடிச்ச தலைப்புல உதாரணம் சொன்னா டக்குனு புரிஞ்சுக்குவோம்ல..
//சி.பி.செந்தில்குமார் said...

>>>(லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்).

ennai என்னை தாக்குவதற்காகவே பதிவில் இந்த லைனை சேர்த்த இந்திராவை நான் வன்மையாக...


ஹி ஹி பாராட்டுகிறேன்//


புரிஞ்சிடுச்சுங்க.. அவங்களோட தங்கச்சிய நலம் விசாரிச்சேனு சொல்லுங்க..
//அரபுத்தமிழன் said...

அருமையான பதிவு, நல்ல சிந்தனை மற்றும் வழிகாட்டக் கூடிய கருத்துக்கள்.//



அரபுத்தமிழனின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
//சமுத்ரா said...

நல்ல பதிவு//



நன்றி சமுத்ரா
//Lakshmi said...

ரொம்ப கரெக்ட் நம்ம முயற்சி கண்டிப்பா இருக்கனம்.//


சரியா சொன்னீங்க லெக்ஷ்மி.. கருத்துக்கு நன்றி.
//S Maharajan said...


பெண்ணை பார்க்கனும் அப்படிதானே சொல்லவரீங்க...//


ஹிஹி.. சொல்லலனாலும் அத தான செய்வீங்க மஹாராஜன்??


//(லவ் பண்ற பொண்ணு செட் ஆகலனா, அவளோட தங்கச்சிக்கு ரூட் போட்றவங்களப் பத்தி நா பேசல.. நா சொன்னது சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்கு தான்)//.
அப்போ எனக்கு இது செட் ஆகாது....
hehehehhee//



ஆமாங்க.. அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டீங்க..



//எதிர்மறையான விளைவுகளப் பத்தியும் முடிவெடுத்து வைக்கிறது, நம்மல தோல்வியால ஏற்பட்ற பாதிப்புல இருந்து மீட்கும//

தன்னம்பிக்கை வார்த்தை....//


கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
//வெட்டிப்பேச்சு said...


ரொம்ப நல்ல அட்வைஸ்..//



நன்றிங்க..
(இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே..)
//Arun Prasath said...

இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். //

அடடா வேற வழி இல்லீங்களா//



நா தான் பதிவுலயே சொல்லிருக்கேன்ல.. சின்சியரா ஒரே பொண்ண லவ் பண்றவங்களுக்குனு..
R.Gopi said…
//அபசகுணமாகவும் நினைக்கப் பழகு..//

அபசகுனமாகவும் நினைக்கப் பழகு

சகுனம் பார்க்க ஆரம்பித்து விட்டாலே இந்த அபசகுனம் என்ற விஷயமும் அங்கே வந்து விடும்...

பதிவில் அனைத்து இடங்களிலும் “சகுணம்” என்பதை “சகுனம்” என்று மாற்றுங்கள் இந்திரா...
//R.Gopi said...

//அபசகுணமாகவும் நினைக்கப் பழகு..//

அபசகுனமாகவும் நினைக்கப் பழகு

சகுனம் பார்க்க ஆரம்பித்து விட்டாலே இந்த அபசகுனம் என்ற விஷயமும் அங்கே வந்து விடும்...

பதிவில் அனைத்து இடங்களிலும் “சகுணம்” என்பதை “சகுனம்” என்று மாற்றுங்கள் இந்திரா...//


கருத்துக்கு நன்றி கோபி..
பிழையைத் திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
karthikkumar said…
Arun Prasath said...
இல்லனா உருப்படியா வேறு ஏதாவது வேலையிருந்தா போய்ப் பாக்கணும். //

அடடா வேற வழி இல்லீங்களா///



வேற வழி இருக்கு மச்சி உன்ன மாதிரி எப்பவுமே சும்மா இருந்துக்கலாம் சரிதானே ஹி ஹி .....
karthikkumar said…
@ இந்திரா
பிடிச்ச தலைப்புல உதாரணம் சொன்னா டக்குனு புரிஞ்சுக்குவோம்ல..////


ஹி ஹி நல்ல பதில் அக்கா :)
கொஞ்சம் மாத்தியும் யோசிக்கணும் இல்லையா மக்கா....
பிடித்தால் இந்த போஸ்டுக்கு கமெண்ட் போடணும் இல்லையா அடுத்த போஸ்டுக்கு :))))
அருமை வாழ்த்துக்கள்
Ramani said…
யதார்தமான நேர்மையான சிந்தனை
எளிமையான சொற்கள்.
வலுவூட்டும் உதாரணங்கள்.
ஒரு நல்ல பதிவைப் படித்த திருப்தி
தொடர வாழ்த்துக்கள்
பாசிட்டீவா திங்க் பண்றவன்
கண்டுபிடிச்சது ஏரோபிளேன்..

நெகட்டீவா திங்க் பண்றவன்
கண்டுபிடிச்சது பாராசூட்..

வான் பயணத்துக்கு இது ரெண்டும்
எப்படி முக்கியமோ.. அப்படித்தான்
வாழ்க்கை பயணத்துக்கு நீங்க சொன்ன
ரெண்டும் முக்கியம்..

:)
karthikkumar said…
@ வெங்கட்
தங்கள் கவிதை மிகவும் அருமை. பின்னூட்டதிலேயே கவிதையா! நன்றி ....
நல்ல பதிவு.
இந்த பதிவு நல்லா இல்லை
இந்த ப்ளாக் ரொம்ப மோசம்
இந்திரா பதிவு எழுதுறதே வேஸ்ட்

இதெல்லாம் அபசகுனமா?
//karthikkumar said...

@ இந்திரா
பிடிச்ச தலைப்புல உதாரணம் சொன்னா டக்குனு புரிஞ்சுக்குவோம்ல..////


ஹி ஹி நல்ல பதில் அக்கா :)//



தாங்ஸ்பா தம்பி..
//Karthick Chidambaram said...

பிடித்தால் இந்த போஸ்டுக்கு கமெண்ட் போடணும் இல்லையா அடுத்த போஸ்டுக்கு :))))//


அட.. எனக்கேவா????
//MANO நாஞ்சில் மனோ said...

கொஞ்சம் மாத்தியும் யோசிக்கணும் இல்லையா மக்கா....//


அதேதானுங்க..
//Ramani said...

யதார்தமான நேர்மையான சிந்தனை
எளிமையான சொற்கள்.
வலுவூட்டும் உதாரணங்கள்.
ஒரு நல்ல பதிவைப் படித்த திருப்தி
தொடர வாழ்த்துக்கள்//


தங்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..
//யாதவன் said...

அருமை வாழ்த்துக்கள்//


நன்றிங்க..
//சே.குமார் said...

நல்ல பதிவு.//


நன்றி குமார்
//வெங்கட் said...

பாசிட்டீவா திங்க் பண்றவன்
கண்டுபிடிச்சது ஏரோபிளேன்..

நெகட்டீவா திங்க் பண்றவன்
கண்டுபிடிச்சது பாராசூட்..

வான் பயணத்துக்கு இது ரெண்டும்
எப்படி முக்கியமோ.. அப்படித்தான்
வாழ்க்கை பயணத்துக்கு நீங்க சொன்ன
ரெண்டும் முக்கியம்..

:)//


சரியா சொன்னீங்க வெங்கட்..
இது தான் யதார்த்தம்.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவு நல்லா இல்லை
இந்த ப்ளாக் ரொம்ப மோசம்
இந்திரா பதிவு எழுதுறதே வேஸ்ட்

இதெல்லாம் அபசகுனமா?//


வாங்க ரமேஷ்.. என்னடா இன்னும் எதுவும் நடக்கலையேனு பாத்தேன்.. வந்துட்டீங்க.. இப்ப நீங்க என்ன சொல்ல வறீங்க???? பதிவு நல்லாருக்கா இல்லையா??? குயப்பாதீங்கப்பா..
மிகவும் நல்ல பதிவு சகோதரி..

நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.. எதிர்ப்பார்ப்புகள் இருக்க வேண்டியது தான், ஆனால் எதிர்பார்ப்புகளோடு மட்டுமே இருக்க கூடாது...
கருத்து சொல்றாங்களாமாம்...
//வெறும்பய said...
மிகவும் நல்ல பதிவு சகோதரி..

நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.. எதிர்ப்பார்ப்புகள் இருக்க வேண்டியது தான், ஆனால் எதிர்பார்ப்புகளோடு மட்டுமே இருக்க கூடாது...//

இததான் நானும் சொல்ல வந்தேன் பரவாயில்ல எங்க அண்ணனே சொல்லிட்டாரு... :)))
Thanglish Payan said…
Plan B , its worked out..

Nalla irunthathu... :)
Travis Bickle said…
Negative Post.

You are confusing confidence,belief with expectations.

As in gita,the process is in your hand not the result.

You need confidence/belief to do the
process not expectations about the outcome/result
Travis Bickle said…
You are saying you should plan B if your expectations are not met,what i am saying is that,you need not think anything at all,just concentrate on the process thats it,if you plan for plan B then your subtly saying i am not confident that i will make plan A a success.Losers only will think about winning or losing,winners never think winning or losing,they are too busy in working not thinking.
ஹேமா said…
வாசித்த எத்தனையோ பேருக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்திருக்கும் இந்தப் பதிவு !
உங்களுடைய பர்சப்ஷன் வியக்க வைக்கிறது... உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்...
இந்திரா ரொம்ப தெளிவா யோசிக்கிற..
//தம்பி கூர்மதியன் said...

கருத்து சொல்றாங்களாமாம்...//


கமெண்ட் சொல்றாங்களாமாம்...
//வெறும்பய said...

மிகவும் நல்ல பதிவு சகோதரி..

நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.. எதிர்ப்பார்ப்புகள் இருக்க வேண்டியது தான், ஆனால் எதிர்பார்ப்புகளோடு மட்டுமே இருக்க கூடாது...//


சரியாகச் சொன்னீங்க..
கருத்துக்க நன்றி
//Thanglish Payan said...

Plan B , its worked out..

Nalla irunthathu... :)//


நன்றிங்க..
//vinu said...

presenttttu//


ஓகே... அட்டெண்டன்ஸ் போட்டாச்சு.
//மாணவன் said...

//வெறும்பய said...
மிகவும் நல்ல பதிவு சகோதரி..

நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.. எதிர்ப்பார்ப்புகள் இருக்க வேண்டியது தான், ஆனால் எதிர்பார்ப்புகளோடு மட்டுமே இருக்க கூடாது...//

இததான் நானும் சொல்ல வந்தேன் பரவாயில்ல எங்க அண்ணனே சொல்லிட்டாரு... :)))//


வாங்க மாணவன்.. வருகைக்கு நன்றி.
//Travis Bickle said...

Negative Post.

You are confusing confidence,belief with expectations.

As in gita,the process is in your hand not the result.

You need confidence/belief to do the
process not expectations about the outcome/result//


நான் பாசிடிவ்வாக நினைக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே.. எதிர்மறையான விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தானே சொல்லியிருக்கிறேன். நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பெரும்பாலும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகிறது. அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தால் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது, அதனால் அதற்காக மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் என் கருத்து.



//You are saying you should plan B if your expectations are not met,what i am saying is that,you need not think anything at all,just concentrate on the process thats it,if you plan for plan B then your subtly saying i am not confident that i will make plan A a success.Losers only will think about winning or losing,winners never think winning or losing,they are too busy in working not thinking.//


ஏற்றுக்கொள்ளப்படும் வெற்றியும் தோல்வியும் அவரவர் மனதைப் பொறுத்ததுதான். இதை நான் மறுக்கவில்லை. முயற்சி செய்யாதீர்கள் என்று சொல்லவில்லையே நண்பரே.. ஒருவேளை தோல்வியடைந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட முயற்சியில் ஈடுபடுங்கள் என்று சொல்கிறேன். இந்த கருத்து ஒருவரை பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது.
//Philosophy Prabhakaran said...

உங்களுடைய பர்சப்ஷன் வியக்க வைக்கிறது... உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்...//


நண்பருக்கு என் நன்றிகள்.
//ஹேமா said...

வாசித்த எத்தனையோ பேருக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்திருக்கும் இந்தப் பதிவு !//


நன்றி ஹேமா.. எனக்கும் உங்கள் கருத்துக்கள் நம்பிக்கை கொடுக்கிறது.
//தமிழரசி said...

இந்திரா ரொம்ப தெளிவா யோசிக்கிற..//


வாங்க தமிழரசி.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
//tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.//


சரிங்க.. வருகைக்கு நன்றிங்க
unaku vera work a irukatha??? irunthalum paravaillai,, eatho try paniruka,,,,athukaga ivlo pariya kathai thavai illai eanbatha ean karuthu,,,
//மழலைப் பேச்சு said...

unaku vera work a irukatha??? irunthalum paravaillai,, eatho try paniruka,,,,athukaga ivlo pariya kathai thavai illai eanbatha ean karuthu,,,//

வாங்க மழலை.. முதல் தடவையா வர்றீங்க... வந்தவுடனே ஆரம்பிச்சுட்டீங்களா????
கதை மாதிரியா இருக்கு??? அப்படினா எனக்கும் கதையெழுத வருதா???? ரொம்ப சந்தோசமுங்க.
guna said…
நல்ல பதிவுங்க.. தன்னம்பிக்கை ஊட்டுற மாதிரி..
நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்.. வலையுலகத்துல புதுசா பிறந்திருக்கிறேன். அதுனால எனக்கு வாழ்த்து சொல்ல எல்லாரையும் வரவேற்கிறேன்.
mahavijay said…
plan B ரொம்ப முக்கியம்தான்

நல்ல பதிவு
//சட்டுனு அந்த வேலை அவங்களுக்கு கிடைக்காதுங்குற சூழ்நிலை வரும்போது, அந்த ஏமாற்றத்த அவங்களால தாங்கிக்க முடியிறதில்ல.//

கண்டிப்பா எப்பவுமே ஒரு செயலை செய்யத்தொடங்கும் முன்னர் அது வெற்றி பெறனும் அப்படின்னு நினைக்கணும் .. அதுக்காக கண்டிப்பா வெற்றி அடைவோம் அப்படின்னு நினைக்கரதுலையும் தப்பு இல்ல.. ஆனா தோற்றுப் போனா அடுத்து என்ன பண்ணலாம் அப்படிங்கிற பிளான் கண்டிப்பா இருக்கணும் .. அதாவது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா எடுத்துக்கணும் ..
yes..!
yes....!

it's true...!

Vazthukkal...! Nanbi..!

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்