ஞாபகம் வருதே.. (மொக்கை) ஞாபகம் வருதே..
ஒன்ஸ் அபான் எ டைம்...
நா ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி (மொக்கை போடாம இருந்த காலகட்டத்துலனு சொல்ல வரேன்), ஒரு தடவை, ராசிப்பொண்ணோட காலேஜ்ல கவிதைப் போட்டி வச்சாங்க. அதுக்கு கட்டாயம், எல்லாரும் ஆளுக்கொரு தலைப்புல கவிதை எழுதிட்டு வரணும்னு சொல்லி நாலஞ்சு தலைப்பையும் குடுத்துட்டாங்க. அவ வந்து என்கிட்ட உதவி கேட்டா. பாசமலர் அளவுக்கு இல்லேனாலும் ஓரளவுக்கு பாசக்கார புள்ளையாச்சே.. அதுனால நானும் ஒரு தலைப்புல எழுதிக் குடுத்தேன். (எழுதிக்குடுத்தா ஐஸ்கிரீம் வாங்கித் தரேன்னு அவ சொன்னத நா சொல்லமாட்டேனாக்கும்..)
இதுல என்ன கொடுமைனா, இந்த கவிதைக்கு ரெண்டாவது பரிசு கெடச்சுச்சு. அப்டினா மத்த பயபுள்ளைங்க எல்லாம் எந்த அளவுக்கு மொக்கையா எழுதியிருக்கும்னு பாத்துக்கங்க.
அப்படி நா மொத மொத எழுதின மொக்கை கவிதை தான் இது.
மௌன மொழி
உருகும் பனிக்குத் தெரியும்...
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்.
புழுதி மண்ணிற்குத் தெரியும்....
வீசிச் சென்ற புயலின் வேகம்.
வாடும் மலருக்குத் தெரியும்....
கடந்துபோகும் பொழுதின் நேரம்
விசையெனும் புவியீர்ப்புக்குத் தெரியும்...
சுற்றும் பூமியின் கொள்கனம்.
துடிக்கும் இதயத்திற்குத் தெரியும்...
பாயும் இரத்தத்தின் ஓட்டம்.
பிரகாசிக்கும் ஒளிக்குத் தெரியும்...
உள்வாங்கும் உலகின் யோகம்.
ஆனால் -----------
உன்னையே சுவாசமாய் உணரும் எனக்குத் தெரியவில்லை
உன் மௌனம் எனும் மொழியின் அர்த்தம்.
உன் பார்வையில் நான் தெரிவது
பூ எனறா? புழு என்றா?
உன் சிரிப்பில் நான் தெரிவது
கோபுரம் என்றா? கோமாளி என்றா?
உன் ஜாடையில் நீ சொல்வது
அருகில் வா என்றா? அடைந்து கிட என்றா?
வரமொன்று வேண்டும்
ஏழாவது அறிவு பெற.
திடமொன்று வேண்டும்.
உன் மௌனத்தை மொழிபெயர்க்க.
யாரேனும் கண்டறியுங்கள்..
மௌனத்தை மொழிபெயர்க்கும் அகராதியை.
அது ---------
உலகின் எட்டாவது அதிசயமாகட்டும்.
.
.
Comments
நல்லாத்தானே இருக்கு..
வாழ்த்துக்கள்.
நல்ல சிந்தனைகளும்,ஒப்பனைகளும் சுப்பர்..
இதைப்போய் மொக்கு மொக்கையென்றா சொல்லுறது...hahahaha
அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள்..
http://sempakam.blogspot.com/
யாருங்க மொக்கைனு சொன்னது
ம் கலக்குறீங்க வாழ்த்துக்கள்
..Super! Congratulations!
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்.//
அடிக்கடி வந்து போகும் எங்களுக்கு தெரியும்... வரமறுக்கும் புத்திசாலியின் நோக்கம்... ஹி ஹி ஹி
எனது ப்ளாக் இற்கும் ரசிகர்கள் சேர்க்க நல்ல ஐடியா... ஹா ஹா ..
மொத மொக்க அட்ரா சக்க//
நன்றி செந்தில் சார்..
Super//
டாங்க்ஸ்ங்க...
இது மொக்கை இல்லைங்க..
நல்லாத்தானே இருக்கு..
வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பரே..
நல்லா இருக்கே! இதை யாரு மொக்கைன்னு சொன்னது?//
என்னைத் தவிர எல்லாரும் சொன்னாங்க.. (அவ்வ்வ்வ்)
hey..this is nice...not mokkai//
தாங்க்ஸ்ங்க..
தோழி என்ன அருமையான கவிதை..
நல்ல சிந்தனைகளும்,ஒப்பனைகளும் சுப்பர்..
இதைப்போய் மொக்கு மொக்கையென்றா சொல்லுறது...hahahaha
அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள்..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
இந்த கவிய
யாருங்க மொக்கைனு சொன்னது
ம் கலக்குறீங்க வாழ்த்துக்கள்//
நன்றி சிவா..
வெளுத்து வாங்கிட்டீங்க !//
நன்றிங்க பாலா..
நல்ல கவிதை.//
நன்றி நன்றி நன்றி
இதுல என்ன கொடுமைனா, இந்த கவிதைக்கு ரெண்டாவது பரிசு கெடச்சுச்சு.
..Super! Congratulations!//
நன்றி சித்ரா
மொதல் கவிதையே இவ்ளோ டெர்ரரா....அவ்வவ்.. :))//
ஹிஹிஹி
நன்றிங்க..
//உருகும் பனிக்குத் தெரியும்...
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்.//
அடிக்கடி வந்து போகும் எங்களுக்கு தெரியும்... வரமறுக்கும் புத்திசாலியின் நோக்கம்... ஹி ஹி ஹி//
இதுல ஒரு விசயம் உண்மை. ஒரு விசயம் பொய்.
உண்மை - புத்திசாலினு சொன்னது.
பொய் - வலைப்பக்கம் வரமறுக்குறதா சொன்னது.
நேரமின்மை தான் காரணமுங்க. தப்பா எடுத்துக்காதீங்க. இதோ வந்துட்டேன்.
#இணையாதவங்களுக்கு செய்வினை வைக்கப்படும்.. சொல்லிப்புட்டேன்.##
எனது ப்ளாக் இற்கும் ரசிகர்கள் சேர்க்க நல்ல ஐடியா... ஹா ஹா ..//
யாம் பெற்ற இன்பம்..