Posts

நீ இல்லாத நீ

Image
நீயா இது? என் ஸ்பரிசம் பட்டவுடன் உன் கன்னங்கள் சிவக்கவில்லையே.. எனைப் பார்த்த பரவசத்தில் உன் கண்கள் படபடக்கவில்லையே.. நான் பற்றியவுடன் வெட்கப்பட்டு உன் கைகள் உதறவில்லையே.. நான் கண்டுகொண்டதை அறிந்து நாணி உன் கால்கள் ஓடவில்லையே.. முத்தம் கேட்டவுடன் உன் இதழ்கள் வெட்கப்படவில்லையே.. என்னதான் நான் காதலை வெளிப்படுத்தினாலும் சலனமே இல்லாமல் இருக்கிறாயே.. கண்டிப்பாக இது நீ இல்லை. நீயே வைத்துக்கொள் உன் புகைப்படத்தை.

தாய்மை

Image
என் தாயின் ஸ்பரிசம் உன் தீண்டலில் உணர்ந்தேன். தனிமைச் சிறையில் விடுதலை பெற்றேன். தத்தித் தத்தி மழலை கொஞ்சும் குழந்தையாய் உன்னை நித்தம் நித்தம் ரசிக்கிறேனடி ஆவலாய்.. விரல் பிடித்து நடந்து செல்லும்போதும் உன் குரல் கேட்டு லயித்து நிற்கும்போதும் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.. இனி ஒரு சொர்க்கம் வேண்டுமோ?

ஏமாற்றங்களால் ஆனது காதல்

Image
எங்கு தான் மறைத்து வைத்திருக்கிறாய்? பெயரில்லா பறவையின் கூடுகளிலும் உருவில்லா மலர்களின் மகரந்தங்களிலும் இருக்கக் கூடுமோ உன் காதல்? மௌனங்களால் ஆனதா காதல் எப்போதும்? வலிகளால் ஆனதா காதல் எப்போதும்? ஏமாற்றங்களால் ஆனது தான் காதல் எப்போதும்.

உன்னுள் என் நினைவுகள்

Image
தென்றல், மழை, வெயில், ஞாயிறு, நிலவு காலை, மாலை - இப்படி இயற்கை என்னைக் கடக்கும்போதெல்லாம் நீ தான் நினைக்கப்படுகிறாய். நீ என்னை நினைப்பது எப்போதடி? எதாவது இறுதி ஊர்வலம் உன்னைக் கடக்கும்போதா? உயிர் விடும் முன்னாவது துளிர் விடுமா? உன்னுள் என் நினைவுகள்..??

படித்ததில் ரசித்தது

Image
எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னை அல்ல என் கவிதைகளை என்று. ஆனால் உனக்குத் தெரியுமா? உன்னை விரும்புவது என் கவிதைகள் அல்ல நான் தான் என்று.. தபால்காரனுக்குக் கூட என் மீது இறக்கம் இருக்கிறது. எவர் வீட்டுக் கடிதத்தையாவது என் வீட்டில் போட்டு தற்காலிக மகிழ்ச்சியாவது தருகிறான். நீ தான் இரக்கமில்லாமலே இருக்கிறாய். எனக்கு வரவேண்டிய கடிதத்தை இன்னும் எழுதத் தொடங்காமல். எழுது எழுது.. எனக்கொரு கடிதம் எழுது.. என்னை நேசிக்கிறாய் என்றல்ல. நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று. ---- வைரமுத்து

உருகுகிறேன்

Image
உன் பார்வை மின்சாரத்தால் என் பனித்துளி இதயம் உருகுகிறது.. உடைந்தொடும் துளிகளில் கூட புரியவில்லையா.. என் காதல் உனக்கு?

உன் காதல்

Image
எனக்கான உன் ஒற்றைத் துளி நீர் உன்னையும் அறியாமல் உணர்த்தி விட்டுப் போனது என் மீதான உன் காதலை..