உங்கள் காதலிக்குப் பிடித்தமானவரா நீங்கள்??

நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (அபத்தமானதாக இருந்தாலும் சகித்துக்கொள்ளுங்கள்). அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள். அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள் இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும் அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க. அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா காலையில் எழுந்தவுடனேயும் தூங்கும் முன்னும் மறக்காம அனுப்புங்க.. (அதாவது உங்கள் நாளின் ஆரம்பமும் முடிவும் அவர்களுடன் தான் என்பதை உணர்த்துங்கள்) கேட்ட கேள்விக்கு மட்டுமோ அல்லது வெறும் ‘K’ (OK) என்று ஒற்றை வார்த்தையிலோ ரிப்ளை செய்தால் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்) அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்...