எங்கு போய் முட்டிக்கொள்வது..??


சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளைப் பாருங்கள்..
திக்கெட்டும் சுதந்திர ஒளி பரவட்டும்..

தொலைக்காட்சியில் அவ்வப்போது காட்டுக் கத்தல் கத்திக்கொண்டிருந்தனர்..
போனால் போகிறதென்று ஒரு அரை மணி நேரம் இந்திய சுதந்திரத்தைப் பற்றியும் மகாத்மாவைப் பற்றியும் ஏதோ பெரிய மனது பண்ணி ஒளிபரப்பினர்.
அதன் பிறகு வந்தவை எல்லாமே சினிமா சினிமா சினிமா தான்..

பெயருக்கு, நாங்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம் போ்வழி என்று, தொலைக்காட்சியின் ஏதோ ஒரு மூலையில் சுதந்திரக் கொடியின் அடையாளத்தை பதித்திருந்தனார்.. அவ்வப்போது எங்கோ ஒரு சேனலில் வந்தே மாதரம் என்று நித்யஷ்ரி மகாதேவணும் லதா மகேஸ்கரும் பாடிக்கொண்டனார்.
ஃபேன்சி சேலையிலும் அயர்ன் செய்த சர்ட்டிலும் தேசியக் கொடியை குத்திக் கொண்டனர்.. மற்றபடி எல்லா நிகழ்ச்சிகளும் முகத்தை சுளிக்க வைக்கும் ஒரே மாதிரியானவைகள் தான்..

பள்ளிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லாமல் தொலைக்காட்சியில் சிறப்புத் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள்.. நினைக்கவே பெருமையாக இருந்தது..
அடிக்கடி கேசத்தைக் கோதிக்கொண்டே ஒரு தொகுப்பாளினி சுதந்திர தின வாழ்த்துக்கள் சொன்னாள்.. அதோடு மட்டுமின்றி நேயர் விருப்பமாக, கெட்ட ஆட்டம் போடும் நடிகையின் பாடலினை டெடிகேட் செய்தார்.
எந்திரன் உருவான விதமும், நமீதாவின் உடையிறங்கிய தமிழ்ப் (!!!!) பேட்டியும், சிறப்புத் திரைப்படம் என்ற பெயரில் போடப்பட்ட இன்றைய திரைப்படங்களும் நன்றாகவே (!!!) சுதந்திர ஒளியைப் பரப்பியது...

எங்கு போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை..
இவர்கள் இதனைக் கொண்டாடாமல் விட்டிருந்தாலே சுதந்திர தினம் நன்றாக இருந்திருக்கக் கூடும்..

எங்கோ படித்த வாரிகள் நினைவுக்கு வருகின்றன..

”ஆகஸ்ட் 15..
ஹய்யா..
சுதந்திரம் கிடைத்துவிட்டது..
இனி யாருக்கு வேண்டுமானாலும் அடிமையாக இருக்கலாம்..”
**
மகாத்மா மன்னிப்பாராக..
**

Comments

R.Gopi said…
ஹலோ...

நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்...

சுதந்திர தினம் போன்று அனைத்து விடுமுறை தினங்களிலும் அனைத்து சேனல்களும் கல்லா கட்டுவதிலேயே மும்முரமாக இருக்கும் இந்த நாளில் ஏதோ அரை மணி நேரமாவது காந்தியை நினைத்தார்களே... அதுவே பெரிய விஷயம் என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்...

வாழ்க பாரதம்... வாழ்க தாய்த்திருநாடு...
Chitra said…
///அதன் பிறகு வந்தவை எல்லாமே சினிமா சினிமா சினிமா தான்..///

....ஒரு தோழியின் தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. " வெள்ளைக்காரன் இருந்த காலத்தில், இப்படி தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகள் இருந்திருந்தா, யாரும் போராட்டத்துக்கு வந்திருக்க மாட்டாங்க போல....." அவ்வவ்வ்வ்வ்!
Jey said…
//அதோடு மட்டுமின்றி நேயர் விருப்பமாக, கெட்ட ஆட்டம் போடும் நடிகையின் பாடலினை டெடிகேட் செய்தார்.
எந்திரன் உருவான விதமும், நமீதாவின் உடையிறங்கிய தமிழ்ப் (!!!!) பேட்டியும், சிறப்புத் திரைப்படம் என்ற பெயரில் போடப்பட்ட இன்றைய திரைப்படங்களும் நன்றாகவே (!!!) சுதந்திர ஒளியைப் பரப்பியது...
//

ஒரு நிகழ்ச்சி விடாம பாத்திருக்கீங்க..., என் வீட்டு பாப்பா, சுட்டி,போகோ-ன்னு எதயும் பாக்கவிடாம பண்ணிட்டா...நீங்க குடுத்து வச்சவங்க..., சுதந்திரமா பாத்துருக்கீங்க..:)
நீங்கெல்லாம் பேசுறது மிட்டாய் குடுக்கிற நாள பற்றி தானே....பாத்தீங்களா எப்படி கண்டுபிடிச்சேன்னு...
ஆகா..சரியாச் சொன்னீங்க போங்க!
எனக்குத் தோன்றிய இடுகை!
முந்திக்கிட்டீங்க!
வாழ்த்துகள்!
நான் போட வேண்டிய இடுகை. நல்ல கருத்து. தேச பக்தியாவது வெங்காயமாவது..
நல்லா சொன்னீங்க :)

நான் எங்க வீட்டு செவுத்தலயே முட்டினேன்(டீவி பாத்த என் நண்பனை)
நியாயமான ஆதங்கம்.

@சித்ரா :))))))))
///பெயருக்கு, நாங்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம் போ்வழி என்று, தொலைக்காட்சியின் ஏதோ ஒரு மூளையில் சுதந்திரக் கொடியின் அடையாளத்தை பதித்திருந்தனார்..///

எல்லாம் காசு... காசு... காசு...! தான்...
"கடவுளை மனிதன் காட்டிக்கொடுக்க மனிதன் வாங்கினான் காசு..!" என்ற வைர வரிகளின்படி...
இங்கே..
இந்தியாவில்
"எங்கும்...
எதிலும்...
எல்லாமே காசுமயம்"தான்....

மனிதமும்... மனிதநேயமும்... மனிதாபிமானமும் மறந்ததும்...

வன்முறையும்... சாதிச்சண்டையும்... மதச்சண்டையும்.. சமூக அவலங்களும்... உருவாக்கியதும்... அதனை பெருக்கியதும்... நாம் பெருமையோடு அறிவியல் முன்னேற்றம் என சொல்லிக்கொள்ளும் mediaவினால்தான் என்றால் அது 100க்கு 1000 சதவீதம் உண்மை... இதனை யாரும் மறுக்க முடியாது...

தங்கள் இந்தப் பதிவில் சொல்வதை 100க்கு 1000 சதவீதம் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் தோழி...

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.. நான் சிலநேரம் நினைப்பதுண்டு...
நாம் சுதந்திரம் வாங்காமலேயே இருந்திருக்கலாமோ என...!

காரணம்... யாரோ ஓர் கவிஞர் சொன்னதைப்போல "சுதந்திரம் வந்தது யாருக்கு? அட... யாரோ பத்து பேருக்கு".. இதுதான் இன்று இங்கு நடப்பது...

அதோடு... தன்னுயிரையும் ஈந்த...
வீடு..சொத்து...சுகங்களை இழந்து சுதந்திரம் பெற பாடுபட்ட...
அத்துணை பெரியோர்கள் மட்டும் இன்றைய இந்தியாவை கண்டால்...
"கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்.... சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்..." என்று பாடிய பாரதி இன்று மட்டும் இருந்திருந்தால்... அவரோடு இந்நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் அனைவரும்... இன்றைய இந்தியாவை கண்ணுற்றால் வெட்கித்தலைகுனிந்து... தாங்களே தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வர்... தூக்கிலிட்டுக் கொள்வர்...

பெரும்பான்மையோரின் உள்ளக்கிடக்கைதான்... தங்கள் இந்த பதிவு...!
உண்மையை... ஊருக்கு உரைத்த தங்களுக்கு பாராட்டுக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
guru said…
நல்ல கருத்து
ஒரு ரிமோட்டிற்கு இரண்டு பெண் குழந்தைகள் அடித்துக்கொண்டது எங்கள் வீட்டில். அனேகமாக எல்லா இடங்களிலும் அதுதான் - வாழ்த்துக்கள் பொட்டிலறைந்த சுதந்திர தின விமர்சனத்திற்கு
siva said…
:))
வாங்க வாங்க.. நல்லா இருக்கீங்களா??
--ethuvarikum unga blog pakkam varatha varaikum erunthom...enimey therialai...
நல்ல பதிவு...சுதந்திரம் சம்பந்தமாவே தொடர்ந்து நிகழ்ச்சி போட்டா...பாக்கறதுக்கு யாரும் இருக்க மாட்டாங்க..தப்பு நம்ம மேலயும் இருக்கு..பொதிகைன்னு ஒரு சேனல் இருக்கு..அதுல கண்டிப்பா சுதந்திரம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் வந்திருக்கும்..அதைப்பத்தி நமக்கு அக்கறை இல்லை..ஆனா..இந்த மாதிரி நல்லா ரீச் ஆயிருக்கற சேனல்கள்..அந்த வேலையை செஞ்சிருந்தா...நல்லாதான் இருந்திருக்கும்...


http://rameshspot.blogspot.com/
என் குழந்தை தூங்கு வரை சுட்டி , போகோவை தவிர வேறு வைக்க முடியாது ..நீங்க பாருங்க... பாருங்க.. !!
:-)
dharumi said…
//அடிக்கடி கேசத்தைக் கோதிக்கொண்டே ... (!!!) சுதந்திர ஒளியைப் பரப்பியது... //

அட .. எல்லாம் பாத்துட்டீங்களா?

ஜெய்ஹிந்த்
HariShankar said…
உங்க கோபம் நியாயமானதே.. என்னத்த சொல்ல இன்னைக்கு நிலைமை இப்படி தன் இருக்கு ...

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்