தலைக்கு வந்த கண்டம்..

காலையில் ஜோசியரைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே எனக்குப் பதட்டமாக இருந்தது. போதாகுறைக்கு அம்மா வேறு புலம்பி அவனைக் கூடுதலாக தன்பங்கிற்குப் பயமுறுத்திக் கொண்டு இருந்தாள்.

” நீ எங்களுக்கு ஒரே புள்ள ராசா.. ஏற்கனவே ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நாம பட்டது போதும்பா. அந்த ஜோசியர் சொல்றத கேளு செல்வா.. காளியாத்தா நீ தான் எம்புள்ள கூட துணையா இருக்கணும்..”
கண்ணை கசக்கிக் கொண்டே எழுந்து அடுப்படிக்குப் போனாள்.

அம்மாவின் பயமும் நியாமானது தான். ”இன்னும் அறுபது நாட்களுக்கு உங்கள் பிள்ளையின் தலைக்கு கண்டம் இருக்கிறது.. கவனமாக இருக்கச் சொல்லுங்கள்..” என்று குடும்ப ஜோசியர் ஆணித்தரமாகச் சொன்னால் எந்தத் தாய் தான் பயப்பட மாட்டாள்.

என் குடும்பத்தைப் பொறுத்தவரை அவ்வப்போது அவர் வாக்கு எங்களுக்கு அப்படியே பலித்துவிடும், ரெண்டு வருடத்திற்கு முன் அவர் சொன்னது போலவே என் அப்பாவிற்கு விபத்து நடந்து நூலிலையில் உயிர் தப்பினார். அதற்க்குப் பின் அந்த ஜோசியர் தான் எஙகள் கடவுள்.

அப்பா என்னையே கவலையாகப் பார்த்துக்கொண்டிருந்தார், ”நா சொல்றத கேளு செல்வம். இன்னும் 60 நாளைக்கு நீ எங்கயும் போக வேண்டாம். ஆபீசுக்கு லீவு சொல்லிடு. வெளியவே போகாம வீட்லயே இரு. வீணா விஷப்பரிட்சை வேண்டாம்பா” ஆலோசனை கூறியபடி நகர்ந்தார்.

எனக்கும் அது சரி என்றே பட்டது. ஆனாலும் 60 நாட்கள் என்பது நான்கு சுவற்றிற்குள் கழிக்க முடியாது, அது மட்டுமல்லாது ஒரு ஜோசியதிற்க்கு பயந்து கொண்டு வீட்டுக்குள் ஓடி ஒளிவது எனக்குப் பிடிக்கவில்லை.
தலைக்கு தானே ஆபத்து என்றார்.
தலையில் அடிபடாமல் பாதுகாத்துக்கொண்டால்..
பளிச்சென எனக்கு யோசனை தோன்றியது.

வாகனத்தில் செல்லும்போது போடும் ஹெல்மெட்டை தலையில் மாட்டிக்கொண்டால் என்ன? அது என் தலையைக் காப்பாற்றிவிடுமே..
ஒரு வழியாக யோசித்து முடிவெடுத்தேன்.

இப்போது நானும் என் ஹெல்மெட்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையராகி விட்டோம். எப்போதும் அதை அணிந்து கொண்டே திரிந்தேன். சாப்பிடும்போது.. அலுவலகத்தின்போது, ஏன் உறங்கும்போது கூட அணிந்து கொண்டேன். அம்மாவிற்கும் பயம் குறைந்தது.

வெற்றிகரமாக கண்டம் இருந்த காலம் முடிந்து விட்டது. நாளையிலிருந்து ஹெல்மெட்டை கழட்டிவிட்டு சுதந்திரமாக வெளியே செல்லலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்றைக்கு தான் நிம்மதியாக உறங்கினேன் (ஹெல்மெட்டோடு).

”டேய் செல்வம்.. கண்டம் முடியட்டும்னு வேண்டிகிட்டு இருந்தேன். அந்த சாமி தான் உன்ன காப்பாத்திடுச்சு. சாயந்திரம் உனக்கு பொண்ணு பாக்கப்
போகணும்டா. ஆபீசுல இருந்து சீக்கிரம் வந்துடுப்பா.” – மறுநாள் காலை குளியலறைக்கு வெளியே அம்மா சொல்வது காதில் விழுந்தது.

மகிழ்ச்சியாக தலையாட்டிவிட்டு முதல்முறையாக ஹெல்மெட்டை கழற்றிய நான்.... அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்..
கண்டம் எனக்காக காத்து நின்றது..

முழு வழுக்கை என்ற பேரில்.
**
**
அவ்வவ்வ்வ்வ்வ்

Comments

உங்க போட்டோ நல்லா இருக்குங்க. கதைக்கேத்த போட்டோ. கதை அருமை.
மிகவும் அருமை கதை சொன்ன
விதமும்.. கதையின் முடிவும்...
கதை நல்ல இருக்கு முடிவு தான் அவ்வ்வ்வ்..
sariyaana mokkaa !!! mudiyaladaa saami ...kadavule intha aniyaayatha thatti ketkka yaarume illayaa....

*mokkaiyaa irunthaalum eluththunadai nalla irukku. eluthirathukku karupporulaa illa naattula..
kalai said…
kathai super thrilera erunthuchupak
:))))))))))))))))))) சூப்பர்
நல்லாயிருக்குது கதை!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நல்ல கிளைமேக்சுங்க :)

நின்னுகிட்டு யோசிச்சிருப்பீங்களா :)
இரண்டு மாசம் , விடாம ஹெல்மெட் போட்டா.. இப்படியாகுமா?..
சொல்லவேயில்ல...
வர.. வர...
"இந்திராவின் கிறுக்கல்கள்" மெருகேரிக்கிட்டே இருக்கு...!

அப்பல்லாம்.... மாசமொரு தடவ பதிவு போடறதே... பெரிய விஷயம்...!

இப்பல்லாம்... தினமும் ஒரு பதிவில்ல வருது...
அதுவும் different... differentடா...
மிக்க மகிழ்ச்சி...

Good girl and Good blog..! keepit up...!

இப்பதிவு...
அந்த ஹெல்மட் போட்ட போட்டோ சூப்பர்...!
கதையும் சுப்பரோ... சூப்பர்...!

வாழ்த்துக்கள் தோழி...!


நட்புடன்...
காஞ்சி முரளி...
இதை வேற மாதிரியும் பார்க்கலாம். வழுக்கையால கல்யாணம் என்கிற கண்டத்துலேர்ந்து தப்பி விட்டீர்கள்

தலைவர்
"My glass is half full" என்போர் சங்கம்
//கொல்லான் said...
உங்க போட்டோ நல்லா இருக்குங்க. கதைக்கேத்த போட்டோ. கதை அருமை.//

நன்றி கொல்லான்.. என் போட்டோ இத விட காமெடியா இருக்கும்..


//வெறும்பய said...
மிகவும் அருமை கதை சொன்ன விதமும்.. கதையின் முடிவும்...//

பாராட்டியதற்கு நன்றி நண்பரே..


//சௌந்தர் said...
கதை நல்ல இருக்கு முடிவு தான் அவ்வ்வ்வ்..//

அவ்வ்வ்....
நன்றி சௌந்தார்..
//ப்ரின்ஸ் said...
sariyaana mokkaa !!! mudiyaladaa saami ...kadavule intha aniyaayatha thatti ketkka yaarume illayaa....
mokkaiyaa irunthaalum eluththunadai nalla irukku. eluthirathukku karupporulaa illa naattula..//

ஹா ஹா ஹா... நன்றி நண்பரே ..


//kalai said...
kathai super thrilera erunthuchupak//

வாங்க கலை.. நன்றி..


//☀நான் ஆதவன்☀ said...
:))))))))))))))))))) சூப்பர்//


நன்றி ஆதவா..
//வால்பையன்//

//ஜில்தண்ணி - யோகேஷ்//

//ப்ரியமுடன் வசந்த்//

நன்றி நண்பர்களே
//பட்டாபட்டி.. said...
இரண்டு மாசம் , விடாம ஹெல்மெட் போட்டா.. இப்படியாகுமா?..
சொல்லவேயில்ல...//

நீங்க வேணும்னா முயற்சி செய்து பாத்துட்டு மத்தவங்களுக்கு சொல்லுங்களேன் பட்டா..


//காஞ்சி முரளி said...
வர.. வர...
"இந்திராவின் கிறுக்கல்கள்" மெருகேரிக்கிட்டே இருக்கு...!
அப்பல்லாம்.... மாசமொரு தடவ பதிவு போடறதே... பெரிய விஷயம்...!
இப்பல்லாம்... தினமும் ஒரு பதிவில்ல வருது...
அதுவும் different... differentடா...
மிக்க மகிழ்ச்சி...
Good girl and Good blog..! keepit up...!
இப்பதிவு...
அந்த ஹெல்மட் போட்ட போட்டோ சூப்பர்...!
கதையும் சுப்பரோ... சூப்பர்...!
வாழ்த்துக்கள் தோழி...!
நட்புடன்...
காஞ்சி முரளி...//


நன்றி முரளி..
உங்கள் பாராட்டுக்குளம் கருத்துக்களும் என்னை மேலும் ஊக்கமளிக்கின்றன..
//R Gopi said...
இதை வேற மாதிரியும் பார்க்கலாம். வழுக்கையால கல்யாணம் என்கிற கண்டத்துலேர்ந்து தப்பி விட்டீர்கள்
தலைவர்
"My glass is half full" என்போர் சங்கம்//

அட.. இது எனக்குத் தோன்றவில்லையே..
மூக்கு பொடப்பா இருந்தா இப்படி தான் யோசிக்கத் தோணும்..
அது சரி.. அந்த சங்கம் எங்கப்பா இருக்கு..??
HariShankar said…
mmm ... கதை + narration நல்ல தான் இருக்கு .. நீங்க வழக்கமா குடுக்குறே ட்விஸ்ட் தான் ட்விச்டஎ... ஆவ்வ்வ்வ்வ்

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..