எல்லாரும் கணக்கு நோட்ட எடுங்க..

ஒண்ணுல இருந்து பத்துக்குள்ள ஒரு நம்பர நெனச்சுக்கங்க..
(எங்கிட்ட ஒன்னும் சொல்ல வேணாம்)

இப்போ நீங்க நெனச்ச நம்பர அதோட மறுபடியும் கூட்டுங்க..
(விரல் கடன் தரமாட்டேன்..)

வந்த விடையோட ஆற (6) கூட்டுங்க..
(கூட்டுன்னா சாப்பிட்ற கூட்டு இல்ல..)


என்ன கூட்டியாச்சா??
கடைசியா விடையா வந்த நம்பர இப்ப சரிபாதியா பிரிங்க..
(சொத்தையா பிரிக்க சொல்றேன்.. சீக்கிரம் பிரிங்கப்பா..)

இப்ப நீங்க மொதல்ல நெனச்ச நம்பர கழிங்க..
(முழிக்க சொல்லல.. கழிக்க சொன்னேன்..)


இருங்க இருங்க.. நீங்க விடை சொல்ல வேணாம்..
நான் தான் சொல்வேனாக்கும்..


மூணு (3).


என்ன சத்தத்தையே காணோம்..
(முறைக்குறீங்களா?? கண்ண நோண்டிடுவேன்..)

எப்படினு கண்டுபிடிச்சுட்டீங்களா??
(சரி சரி இது நமக்குள்ளயே இருக்கட்டும்..)

இத சொல்லிக்குடுத்தது என்னோட பக்கத்து வீட்டு குட்டிப்பொண்ணு..
(”அதான பாத்தேன்”னு சொல்லுவீங்களே..)

Comments

ஐயோ அறிவுக் கொழுந்து, திருஷ்டி சுத்தி போடுங்க.
அறிவு ரொம்ப பெருகிடுச்சி.
ஏங்க இந்திரா காந்தி, நம்ம கடை பக்கம் வந்தா சூரியன் காணாமலா போயிடும்?
இப்டியெல்லாம் டைட்டில வச்சி பயமுறுத்த கூடாது ஆமாம் :)

நல்லா கணக்கு பண்ணிய அந்த குட்டி பொண்ணுக்கு வாழ்த்துக்கள் :)

நடத்துங்க நடத்துங்க :)
அடுத்த தடவை இந்த பக்கம் வந்தாதானே...அவ்வவ்....
:( அவ்வ்வ் இன்னைக்கு நாங்க தான் சிக்கினோமா? :)
கால்குலேட்டரை மட்டும் காக்கா தூக்கிட்டு போகாமிருந்திருந்தா.. பதில் கண்டுபிடிச்சிருக்கலாம்.. அவ்வ்வ்வ்...
kalai said…
manda muula kolambunathuthan micham sappa matterkalam en braina salavu panitene
ஐயையோ ... எப்படிங்க இப்படியெல்லாம்...

சான்சே இல்ல... உங்க அறிவுக்கு முன்னால அத்தன பயலுகளும் சரண்டர்...
என்னோட தங்கை ஏற்கனவே இதை எனக்கு சொல்லிக் குடுத்துருக்காங்களே!
ஆனாலும், மறுபடியும் ஞாபகப்படுத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸுங்கோ!
Maduraimohan said…
ஆமா நீங்க பத்தாவது பெயில் தான :)
தப்பு தப்பா கணக்கு போட்டா இப்படி தான்!
இதுக்குதான் நான் ஸ்கூலுக்கே போறதில்ல ...இப்ப இங்கேயுமா..((தலைப்பு))
ஆனா...!
இது கொஞ்சம் ஓவர்தான்.... தோழி...!

என்னையே... விரல எண்ண வச்சுட்டீங்கள...!

கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டிருக்கு...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
siva said…
முறைக்குறீங்களா?? கண்ண நோண்டிடுவேன்..)

--hahaha..
nan nanganu kutividuven..
HariShankar said…
நீங்க பக்கத்து வீட்டு சின்ன பொண்ணு கிட்டே இந்த சின்ன கணக்குக்கு பல்பு வாங்கீடீங்க தான ? hah.ha...ha...

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..