உங்கள் காதலிக்குப் பிடித்தமானவரா நீங்கள்??நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (அபத்தமானதாக இருந்தாலும் சகித்துக்கொள்ளுங்கள்).

 1. அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.

 1. அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்

 1. இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்

 1. அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.

 1. அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா காலையில் எழுந்தவுடனேயும் தூங்கும் முன்னும் மறக்காம அனுப்புங்க.. (அதாவது உங்கள் நாளின் ஆரம்பமும் முடிவும் அவர்களுடன் தான் என்பதை உணர்த்துங்கள்)

 1. கேட்ட கேள்விக்கு மட்டுமோ அல்லது வெறும் ‘K’ (OK) என்று ஒற்றை வார்த்தையிலோ ரிப்ளை செய்தால் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

 1. போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்)

 1. அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்கு டாப்அப் பண்ணி விடுங்க.

 1. ஏதாவது ஒரு டாபிக் அவர்களுக்கு பிடிக்கலனா அதுபற்றி பேசாதீங்க.

 1. கருத்துவேறுபாடு வந்து பேசாம இருந்தாங்கனா 'மிஸ் யூ' மெசெஜா வரிசையா அனுப்புங்க. அவங்க கோபத்தை குறைக்கும்.

 1. நீங்க சாப்பிட்றீங்களோ இல்லையோ, எவ்ளோ வேலை இருந்தாலும் 3 வேளையும் கரெக்ட்டா போன் (இல்லனா மெசெஜ்) பண்ணி சாப்டியா?னு அவங்கள கேளுங்க.

 1. அவங்களோட பிறந்தநாள், முதல் சந்திப்பு இப்படி முக்யமான நாளையெல்லாம் ஞாபகம் வச்சு சர்ப்ரைஸா கிப்ட் கொடுத்து அசத்துங்க. (அவங்களுக்கு ஞாபகத்துல இருந்தாலும் உங்களுக்கு நினைவிருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க.. அதுனால ஜாக்கிரதை)

 1. அவங்க எங்கயாவது வெளில போனாங்கனா அவங்களுக்கு முன்னாடி அங்க போய் நில்லுங்க.. உன்ன பாக்கணும்போல இருந்தது, அதான் வந்தேனு சொல்லுங்க.

 1. எந்த சூழ்நிலையா இருந்தாலும் பாக்கவே முடியலைனாலும் தினமும் தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மணிநேரமாவது அவங்க கிட்ட மனசு விட்டுப் பேசுங்க.

 1. சண்டை வந்ததுனா ஆண்கள் தான் இறங்கி வந்து தங்கள சமாதானப்படுத்தணும்னு பொண்ணுங்க நெனப்பாங்க..

 1. ரொமான்ஸா பேசுறோம்னு கண்டபடி எதையாவது உளறி, வளிஞ்சு சொதப்பிடாதீங்க.. டீசன்ட்டா அப்ரோச் பண்ணுங்க.

 1. பொதுவா பெண்கள் கோபத்தையோ பிடிக்காததையோ வெளிப்படையா சொல்லமாட்டாங்க. ஆண்கள் தானாக புரிந்துகொள்ளனும்னு நெனப்பாங்க. அதுனால எதுனாலும் அவங்கள கலந்துகிட்டு முடிவெடுங்க.

 1. அவர்களது தோழிகளிடம் பேசும்போது அளவோடு பேசுங்கள். இதுவே பெரும்பாலான சண்டைக்கு வழிவகுக்கும். கவனம் தேவை..

 1. இன்டர்நெட்டிலோ மொபைலிலோ சாட் பண்ணும்போது வேறு புதிய பெண் அறிமுகமானால் கவனமாகப் பேசுங்கள். அது உங்கள் காதலியாகவே கூட இருக்கலாம். உங்களை சோதிக்கும் முயற்சியாக இருக்கும்.

 1. அவர்களுக்கு ஏதாவது தனித் திறமையிருந்தால் (உங்களுக்குப் பிடிக்கலனாலும்) அதனைப் பாராட்டுங்கள்.

 1. ஏற்கனவே தெரிந்த விசயமானாலும் 'அதுதான் எனக்குத் தெரியுமே'னு அசட்டை செய்யாதீர்கள். ஆர்வமாய் அவர்கள் பேச்சை கேளுங்க.

 1. அவர்களிடம் பேசும்போது அதிகாரமோ அட்வைஸோ செய்து அறுக்காமல் கொஞ்சலும் கெஞ்சலுமாகப் பேசுங்கள்.

 1. எங்காவது வெளியூர் சென்றுவந்தால் எல்லாருக்கும் வாங்குவதுபோல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர்களுக்கென ஸ்பெஷலாக ஏதாவது பரிசு வாங்கிவந்து கொடுங்கள்.

 1. உனக்காக நானிருக்கிறேன் என்றும், நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது என்றும் அவர்களது உள்ளங்கை பிடித்து அடிக்கடி நம்பிக்கையுடன் சொல்லுங்கள்.

இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது, கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்.


.

Comments

ஏய் ஜில்லு ஓடி வா உனக்காக ஒரு ஜொள்ளு. நோட் பண்ணிக்கோ. அப்புறம் வந்து அந்த பொண்ணு அண்ணான்னு சொல்லிடுச்சுன்னு அழக்கூடாது. ஓகே வா?
//அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.//


சொல்லிட்டா போச்சு!
//அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்//


பன்னிக்குட்டின்னு சொன்னா கோவிச்சிகிறாங்களே, என்ன செய்ய?
//அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.//

எனக்கு பிடிக்கனும்னு அவசியமில்லையா?
//இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்//

சுருக்கமா நிறையா பொய் சொல்லனும்னு சொல்லியிருக்க வேண்டியது தானே
//கேட்ட கேள்விக்கு மட்டுமோ அல்லது வெறும் ‘K’ (OK) என்று ஒற்றை வார்த்தையிலோ ரிப்ளை செய்தால் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்//


மைண்ட்ல வச்சிகிறேன்!
//அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா காலையில் எழுந்தவுடனேயும் தூங்கும் முன்னும் மறக்காம அனுப்புங்க..//


இது பிரச்சனையில்ல, எனக்கு எஸ்.எம்.எஸ் ஃப்ரீ தான்!
//போன் பேசும்போது சண்டை வந்தால் எக்காரணம் கொண்டும் நீங்களா கட் பண்ண கூடாது.. (அத அவங்க செய்யலாம்)//


இதையும் மைண்ட்ல வச்சிகிறேன்
//ஏதாவது ஒரு டாபிக் அவர்களுக்கு பிடிக்கலனா அதுபற்றி பேசாதீங்க.//

என்ன தான் பிடிக்கும்னு எப்படி தெரிஞ்சிகிறது?
//அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்கு டாப்அப் பண்ணி விடுங்க.//

வந்துருச்சு பர்ஸுக்கு வேட்டு!
//கருத்துவேறுபாடு வந்து பேசாம இருந்தாங்கனா 'மிஸ் யூ' மெசெஜா வரிசையா அனுப்புங்க. அவங்க கோபத்தை குறைக்கும்//


ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ”கிஸ் யூ” ன்னு அனுப்பினா என்ன நடக்கும்?
//நீங்க சாப்பிட்றீங்களோ இல்லையோ, எவ்ளோ வேலை இருந்தாலும் 3 வேளையும் கரெக்ட்டா போன் (இல்லனா மெசெஜ்) பண்ணி சாப்டியா?னு அவங்கள கேளுங்க//


லவ் பண்றதுகுள்ள நமக்கு தாவூ தீந்துரும் போலயே!
நான் சென்ற பதிவில் சொன்னத்துதான்... இப்பதிவுக்கும் நண்பியே...!

அடடே...! அடடே...!
நோட் பண்ணுங்கப்பா ...! (தேவையானவங்க மட்டும்..)

நட்புடன்...
காஞ்சி முரளி...
//அவங்க எங்கயாவது வெளில போனாங்கனா அவங்களுக்கு முன்னாடி அங்க போய் நில்லுங்க.. உன்ன பாக்கணும்போல இருந்தது, அதான் வந்தேனு சொல்லுங்க.//


ஓவரா பொய் சொன்னா சோறு கிடைக்காதுன்னு சொன்னாங்களே, அது உண்மையில்லையா?
//அவங்களோட பிறந்தநாள், முதல் சந்திப்பு இப்படி முக்யமான நாளையெல்லாம் ஞாபகம் வச்சு சர்ப்ரைஸா கிப்ட் கொடுத்து அசத்துங்க. (அவங்களுக்கு ஞாபகத்துல இருந்தாலும் உங்களுக்கு நினைவிருக்கானு டெஸ்ட் பண்ணுவாங்க.. அதுனால ஜாக்கிரதை)//


ஆணியே புடுங்க வேணாம்னு தோணுது!
//சண்டை வந்ததுனா ஆண்கள் தான் இறங்கி வந்து தங்கள சமாதானப்படுத்தணும்னு பொண்ணுங்க நெனப்பாங்க//

அப்படி இல்லைனா பூரிகட்டையில அடிப்பாங்க, அதை விட்டுடிங்க!
//எந்த சூழ்நிலையா இருந்தாலும் பாக்கவே முடியலைனாலும் தினமும் தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மணிநேரமாவது அவங்க கிட்ட மனசு விட்டுப் பேசுங்க.//

அதான் ஏற்கனவே மனசை விட்டாச்சே, திரும்பவும் எங்க விடுறது!
//பொதுவா பெண்கள் கோபத்தையோ பிடிக்காததையோ வெளிப்படையா சொல்லமாட்டாங்க. ஆண்கள் தானாக புரிந்துகொள்ளனும்னு நெனப்பாங்க. அதுனால எதுனாலும் அவங்கள கலந்துகிட்டு முடிவெடுங்க//


எதையுமே சொல்ல மாட்டாங்க, நாமளா கண்டுபிடிக்கனும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்!

இதுக்கு நாம போலீஸ்நாயா பொறந்திருக்கலாம்!
//ரொமான்ஸா பேசுறோம்னு கண்டபடி எதையாவது உளறி, வளிஞ்சு சொதப்பிடாதீங்க.. டீசன்ட்டா அப்ரோச் பண்ணுங்க.//


நம்ம ஊர்ல அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டாலும்! விளங்கிடும்!
//அவர்களது தோழிகளிடம் பேசும்போது அளவோடு பேசுங்கள். இதுவே பெரும்பாலான சண்டைக்கு வழிவகுக்கும். கவனம் தேவை.//

அறிமுகப்படுத்தி வச்சா தானே அளவா பேசுறதுக்கு!
//இன்டர்நெட்டிலோ மொபைலிலோ சாட் பண்ணும்போது வேறு புதிய பெண் அறிமுகமானால் கவனமாகப் பேசுங்கள். அது உங்கள் காதலியாகவே கூட இருக்கலாம். உங்களை சோதிக்கும் முயற்சியாக இருக்கும்//


அடப்பாவிகளா, இப்படியெல்லாமா சோதனை பண்ணுவாங்க!
//ஏற்கனவே தெரிந்த விசயமானாலும் 'அதுதான் எனக்குத் தெரியுமே'னு அசட்டை செய்யாதீர்கள். ஆர்வமாய் அவர்கள் பேச்சை கேளுங்க//


லவ் மிஸ்ஸானாலும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு உறுதி!
//அவர்களுக்கு ஏதாவது தனித் திறமையிருந்தால் (உங்களுக்குப் பிடிக்கலனாலும்) அதனைப் பாராட்டுங்கள்//


திரும்பவும் பொய்யா!
//எங்காவது வெளியூர் சென்றுவந்தால் எல்லாருக்கும் வாங்குவதுபோல பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர்களுக்கென ஸ்பெஷலாக ஏதாவது பரிசு வாங்கிவந்து கொடுங்கள்//


ஒரு ஸ்பெஷல் தோசை ஒகேங்களா?
//அவர்களிடம் பேசும்போது அதிகாரமோ அட்வைஸோ செய்து அறுக்காமல் கொஞ்சலும் கெஞ்சலுமாகப் பேசுங்கள்//


கால்ல விழுந்திருங்கன்னு சொல்லாம சொல்றிங்களா மேடம்!
//இதெல்லாம் செய்தாலும் அவங்க உங்கள புரிஞ்சுக்கலனா அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது, கடவுள் தான் உங்கள காப்பாத்தனும்//


புரிஞ்சிக்கலைனா கடவுள் காப்பாத்திட்டாருன்னு அர்த்தம்னு ஒரு ஃப்ரெண்டு சொல்றான்!
//உனக்காக நானிருக்கிறேன் என்றும், நீயில்லாமல் என்னால் இருக்க முடியாது என்றும் அவர்களது உள்ளங்கை பிடித்து அடிக்கடி நம்பிக்கையுடன் சொல்லுங்கள்//


இது நல்லாயிருக்கு!
ம்ம்ம் காதலின்னு ஒன்னு கிடைச்சத்துக்கப்புறம் இத பயன்படுத்திக்குறேன் :)

ரைட்டு :)
idea எல்லாம் நல்லா இருக்கு ஆனா எங்க Apply பண்றதுன்னுதான் தெரியல்ல
அப்ப மொத்தத்துல ஒரு அடிமையா இருக்கனும்ன்னு ஒத்த வரியில சொல்லுங்க நான் புரிஞ்சிக்கிரேன்..ஹி..ஹி....
இதெல்லாம் படிக்கும்போதே, கண்ண கட்டுதே!!
அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்

//

முதல் ஐ லவ் யூ சொன்னதுக்கு வாங்குன அடி இன்னும் நினைவுல இருக்குங்க...
அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்

//

அனிமல்ஸ் பாவங்க...
இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு, நீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்//

இதென்ன ஜுஜுபி இன்னும் எவ்வளவோ சொல்லியிருக்கோம்..
//அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.//

//

பாட்டென்ன பாட்டு அவ பேசினதையே ரெகார்ட் பண்ணி வச்சிருக்கோம்...
ஆக மொத்தம் பொய் மட்டும் சொல்லனும்னு சொல்றீங்க... ஐயோ ஐயோ... மக்களே மக்களுக்கு மக்களே, இத எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமும் எதிர் பாப்பாங்க.... அதனால யோசிச்சு செய்ங்க...
S.Nithya said…
வால் பையன் அவர்களே! உங்கள் பின்னூட்டமும் வால் தனமா இருக்கு. ரசிக்கும்படியாவும் இருக்கு. உங்களின் குணத்திற்கு உங்களுக்கு ஒரு நல்ல காதலி கிடைக்க வாழ்த்துகள்.
// உங்களின் குணத்திற்கு உங்களுக்கு ஒரு நல்ல காதலி கிடைக்க வாழ்த்துகள். //


ஏற்கனவே வாங்குற அடி பத்தாதா எனக்கு!
சுருக்கமா சொன்னா காதலிக்கு பிடிக்கிற மாதிரி காதலரின் குணநலன்களை மாற்றிக்க சொல்றீங்க சரிதானே!!
//அவங்க கேக்கலனாலும் அப்பப்போ அவங்க போனுக்கு டாப்அப் பண்ணி விடுங்க//

எல்லா மேட்டரும் ஓகே.. பட் இந்த பாயிண்ட் மட்டும் கொஞ்சம் உதைக்குது.
எங்க பிடிச்சீங்க இந்த லிஸ்ட்ட? ஒர்க் அவுட் ஆகுங்க.நான் தான் ரொம்ப லேட்டா இதைப் பார்த்தேன் போல.. சுவாரஸ்யமான பதிவு!
siva said…
hahaha..sirichu vairu ellam valikuk akka..
siva said…
50..
akka neenga chonathu polavey 50 comments potuvitten..
nalla vera nalla idea etachum eruntha cholunga..okva..
kalai said…
love pandravangaluku nalla help panitinga
HariShankar said…
இதே மாதிரி பெண்களுக்கும் ஒரு பதிவு போடுங்களேன்.. ப்ளீஸ்

டிப்ஸ் குடுகுரதுலே உங்கள அடிசுகே ஆளே இல்லை ....
உங்கள மாதிரி டிப்ஸ் குடுகே இனி ஒருத்தர் பிறந்து தான் வரணும் போல..

"எனக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி / நல்லவன்'நு "அவுங்க நினைக்கணும் / சொல்லணும் . அப்படி நடக்கணும்... அது தானே சொல்ல வரீங்க ...... ??? :) :)
HariShankar said…
S.Nithya said... வால் பையன் அவர்களே! உங்கள் பின்னூட்டமும் வால் தனமா இருக்கு. ரசிக்கும்படியாவும் இருக்கு. உங்களின் குணத்திற்கு உங்களுக்கு ஒரு நல்ல காதலி கிடைக்க வாழ்த்துகள்.

Thala. unga comment'um arumai... he.he.he.... paarunga nenga innum neraiya adi vanganum'nu yaaro aasai paduranga.. enjoy enjoy..

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்