அழகாய் ஒரு ' அ '


வெகு நேரம் ஆகியும் ஓயவில்லை
பக்கத்து வீட்டுச் சிறுவனின் அழுகைச் சத்தம்.
பொறுக்க முடியாமல் பெற்றவளிடம் வினவினேன்.
கோபத்தில் அடித்ததாக சிடுசிடுத்தாள்..
பதிலேதும் பேசாமல் திரும்பி வந்தேன்.

மறுநாளும் தொடரவே மறுபடியும் பதறினேன்..
அடுத்து வந்த நாளும் அப்படியே தொடரவே
பொறுக்கமுடியாமல் துலாவினேன் காரணியை.
சிலேட்டில் ”அ” போடவில்லையாம்.
இதற்கா இப்படி என அங்கலாய்த்தேன்..
தொடர்கிறதே!! என சலித்துக்கொண்டாள்.

பொறுப்பேற்று அழைத்து வந்தேன் அழுபவனை.
விசும்பல் ஓய காத்திருந்து
விளையாட்டுச் சிறுவனிடம் சிலேடெடுத்தேன்.
”யூ டூ புரூட்டஸ்” என்பது போல் பதுங்கினான்.

அடுத்த நாளும் கூட்டி வந்தேன்
முறைத்த தாயை கவனியாதது போல..
ஒருவழியாய் கரம் பிடித்து “அ” முயன்றேன்.
அழகாய் வரவே அடுத்ததாய் அவன் முறையென
தனியே எழுதச் சொன்னேன்..
மழங்க மழங்க விழித்தவன் ௦௦மெதுவாய் கிறுக்கினான்..
முட்டை மட்டும் போட்டுவிட்டு
முழுதாய் தப்பித்தான்.

மறுண்ட விழிகளுடன்
மறுநாளும் அதே பாடு தான்..
மயக்கமே வந்ததாய் மறுபடியும் தொடர்ந்தேன்..
ம்ஹும்...
மாறவே இல்லை அவன் பிடிவாதம்.

நாட்கள் தொடரவே
நானும் திகைத்தேன்..
இன்று மட்டுமென
இளிப்புடன் சலுகை கேட்டேன்..
இனி முடியாது என அனுப்பி வைத்தாள்.

செய்வதறியாது செயல் மறந்து
குழம்பியபடி எழுதியதால்
கோணலானது என் ”அ”வும்..
பார்த்துக் கொண்டிருந்தவன் பட்டென பிடுங்கி
”அய்யே.. இப்டியா போடுவாங்க.. மக்கு..” என்று
எழுதிக் காட்டினான்.. அழகாய் ஒரு ”அ”.

.

Comments

அழகாய் ஒரு க(தை)விதை!!
ஹி ஹி அய்யோ அய்யோ
dharumi said…
குறும்பு ...

யாருக்கு? - உங்களுக்கா, பையனுக்கா?
kalai said…
nice nalla eruku
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க...கடைசி ஐந்து வரிகள் சூப்பர்.
ரொம்ப அருமை இந்திரா... பல நேரங்களில் குழந்தைகள் நம்மை விட சாமர்த்தியசாலிகள்...
ஏகதேசம் எல்லா வாண்டுகளும் இப்படி தான் போல என் தங்கை மகன் உட்பட...
Chitra said…
படமும் கவிதையும் - குழந்தையின் குறும்பை ரசிக்க வைத்தது.
ரசிக்கும்படியான நல்ல கதைக்கவிதை..!

நட்புடன்...
காஞ்சி முரளி...
புதுமையான கவிதை.மிகவும் நன்றாக இருக்கிறது!
R.Gopi said…
ஹா...ஹா...ஹா...

குழந்தையின் குறும்பே குறும்பு...

அதை நாள் முழுதும் காண உற்சாகமாய் இருக்கும்....

நல்லா எழுதி இருக்கீங்க இந்திரா... ஒரு சில எழுத்துப்பிழைகளை தவிர...
Ravi kUMAr said…
hey,,,, nanum periyavan aakittennnnnnnnnnnnnn
HariShankar said…
ரொம்ப அருமையா இருக்கு ... "அழகாய் ஒரு அ" . அழகாய் ஒரு கதைக்கவிதை..!

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்