அதை மட்டும் திருப்பிக்கொடு.. (படித்ததில் பாதித்தது)

ஒவ்வொரு முறையும் மறக்கத்தான் நினைக்கிறேன்.. கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைத்த பின் … காதலை எந்த வடிவில் கண்டாலும், மறுபடியும் கண்ணீர் வருவதை ஏன் என்னால் தடுக்க முடிவதில்லை ? மெமரி கார்டில் என்னை அழித்துவிட்டாய்.. என் மெமரியை என்ன செய்ய முடிந்தது உன்னால் ? யாருக்கெல்லாமோ கால் செய்தேன். உனக்கு மட்டுமே காதல் செய்தேன். கால் கொண்டு எட்டி உதைத்தாய்.. அட , எட்டி உதைத்தாலும் உன்னிலே ஒட்டிக்கொள்ளும் ஒட்டுண்ணியாய் வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல். நீ வாழ தொடங்கிவிட்டாய் உன் வாழ்க்கையை.. அதில் தவறேதும் இல்லை. என் வாழ்க்கையை ஏன் என்னிடம் தர மறுக்கிறாய் ? எடுத்துக்கொள் என்று இயல்பாக சொல்கிறாய். வர மாட்டேன் என அடம்பிடிக்கும் இதயத்தை சிலுவையிலா அறைய முடியும் ? அதுவும் சரிதான். நேற்று என் இதயத்தை சிறையில் வைத்தாய்.. இன்று சிலுவையில்.... எப்போதும் இல்லாமல் விழித்திரை இப்போதெல்லாம் அதிகநேரம் வேலை செய்கிறது. தூக்கத்தை விடவும் துடிப்பதைதான் அவைகள் அதிகம் விரும்புகின்றன போலும். கண்ணில் விழுந்த தூசியை முன்பெல்லாம் ஊதி எடுத்தாய். இப்போதெல்லாம் ஊசி கொண்டு ...