உலகின் மிகச் சிறந்த காதலர்கள் - ஒரு வாழ்த்துப் பதிவு..
ரெண்டு நாளைக்கு முன்னாடி சொல்ல வேண்டிய வாழ்த்துப் பதிவு.. கொஞ்சம் வேலையா இருந்ததால இந்தப் பக்கம் வர முடியல. அதான் கொஞ்சம் லேட்டாய்டுச்சு.
என்னப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துலயே மிகச் சிறந்த காதலர்கள்னா அது என்னோட அப்பா, அம்மா தான். “மேட் ஃபார் ஈச் அதர்“ங்குற வாக்கியமே இவங்களுக்காகத் தான் படச்சிருக்காங்களோனு நா பலமுறை நெனச்சிருக்கேன். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு நடந்துக்குறதும், கேலியா கிண்டல் பண்ணிக்கிறதும், ஆறுதலா பேசிக்கிறதும், எண்ணங்களப் பகிர்ந்துக்குறதும்.. ஈகோ பாக்காம விட்டுக்குடுக்குறதும்னு..... கணவன் மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்னு பல தடவை நானே அவங்களப் பாத்து கண்ணு வச்சிருக்கேன்.
இந்த அளவுக்கு ஒருத்தர ஒருத்தர் உயிரா காதலிக்க முடியுமானு ஆச்சர்யப்பட வைக்கிற காதலர்கள். அவங்களுக்குள்ள இருக்குற காதல், வார்த்தைகளால வர்ணிக்க முடியாதது.
தலைமுறை இடைவெளினு தள்ளிவச்சுப் பாக்காம நண்பர்கள் மாதிரி எங்களோட அரட்டை அடிக்கும்போதெல்லாம் சந்தோசத்துக்கு அளவே இருக்காது. ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சுக்கும்போதும், எங்களோட சரிக்கு சரியா ஆட்டம் போடும்போதும் இத விட சிறந்த நட்பு இருக்க முடியாதுனு தோணும்.
தங்களோட மூணு பொண்ணுங்கதான் இவங்களோட உலகமே... 24 மணி நேரமும் எங்களுக்காகவே வாழ்ற இவங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன் (22.01.2012) திருமண நாள்..
என்னோடு சேர்ந்து நீங்களும் இவங்கள மனசார வாழ்த்துங்க...
என் முதல் நண்பர்களான அப்பா, அம்மாவுக்கு..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
என்னைய மாதிரி ஒரு இம்சைய சகிச்சுகிட்டு இருக்குறதுக்கே இவங்கள ஸ்பெஷலா வாழ்த்தணும். (அப்பாடா இனிமேயாவது மூத்த பொண்ணா பொறுப்பா நடந்துருக்கியானு அடிக்கடி திட்டமாட்டாங்க..)
அப்புறம் ஒரு விசயம்.. இவங்களோட திருமண நாள் அன்னைக்கு தான் இவங்க மூத்த பொண்ணுக்கும் பிறந்த நாள். அவங்க ஒரு மொக்கைப் பதிவர். (புரியுதா??)
(பதிவ முழுசாப் படிக்காதவங்க யாருனு இப்ப தெரிஞ்சிடும்.. ஹிஹிஹி மாட்டிக்கிட்டீங்களா.. மாட்டிக்கிட்டீங்களா..)
.
(போன வருஷமும் இதையே தான் சொன்னேன். அதுனால என்ன? வாழ்த்துறது தானே முக்கியம்.)
அடுத்த பதிவுல சந்திக்கலாம்.
.
.
Comments
எதிர்பாத்த அளவு ஒன்னும் மொக்கையா இல்லை. நீங்க திருந்திட்டே வரீங்கன்னு தெரியுது ((:
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!
உங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
//இந்த அளவுக்கு ஒருத்தர ஒருத்தர் உயிரா காதலிக்க முடியுமானு ஆச்சர்யப்பட வைக்கிற காதலர்கள். அவங்களுக்குள்ள இருக்குற காதல், வார்த்தைகளால வர்ணிக்க முடியாதது.//
கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
இனிய திருமண நாள் கொண்டாடிய அந்த தம்பதியினர் நீடூழி வாழவும், நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கவும், எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
அவர்களுக்கு நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்...
வாழ்த்த எனக்கு வயதில்லை...
அவர்களின் மூத்த மகளுக்கும் மகிழ்ச்சி பொங்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நான் முழு பதிவையும் சரியாத்தான் படிச்சிருக்கேனா?
பிறந்த நாள் அதுவும் உண்மைய பேசணும் நினைச்சு இருக்கீங்க...
அதுக்கு முதல் பாராட்டுகள்...
அம்மா அப்பாவிற்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..
அந்த மொக்கை பதிவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
:))
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
appo vaalthaiyum mealsssaaavey potturuvom......
உங்கள் பெற்றோருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
காதலர்களின் மனம் கவர்ந்த தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சுத்திப்போடுங்க... கண்ணு பட்டிருக்கும்...
உங்களுக்கும், உங்கள் பெற்றோருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
எதிர்பாத்த அளவு ஒன்னும் மொக்கையா இல்லை. நீங்க திருந்திட்டே வரீங்கன்னு தெரியுது ((://
நா மொக்கை போடலயா?? நீங்க ஒருத்தராவது சொல்றீங்களே.. சந்தோசம்.
(இது வஞ்சப் புகழ்ச்சி இல்லேல??)
வாழ்த்துக்கு நன்றிங்க.
உங்களின் பெற்றோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி !//
நன்றிங்க..
அப்பா அம்மாவுக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...//
நன்றிங்க..
//காஞ்சி முரளி //
//வை.கோபாலகிருஷ்ணன் //
//கவிதை வீதி... // சௌந்தர் //
//dhanasekaran .S //
//Balasenthil//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
//தமிழ்வாசி பிரகாஷ்//
//சௌந்தர்//
//sasikala //
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..
yyyyyyyyyyyyyyyyy meals pottu irrukeeenga......
appo vaalthaiyum mealsssaaavey potturuvom......
//
போன வருஷமும் இதையே தான் சொன்னேன். அதுனால என்ன? வாழ்த்துறது தானே முக்கியம்னு பதிவுலயே சொல்லிருக்கேன்ல..
(என்ன பண்றது வினு?? கொஞ்சம் பிஸி..)
//K.s.s.Rajh //
//Ramani //
//RAMVI //
//பட்டிக்காட்டான் //
//கே. பி. ஜனா... //
//Rathnavel //
//வியபதி //
//மனசாட்சி //
வாழ்த்துக்கு நன்றிங்க..
நன்றிங்க..
happy birthday to you indira.
முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு...