மரணம் – கலவரங்கள் மூலம் திணிக்கப்படும் வருத்தங்கள் தேவையா?



காலையில் அலுவலகத்திற்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன். வழக்கத்திற்கு மாறாக பயங்கர கூட்டம் நின்றுகொண்டிருந்தது. “பஸ் எதுவும் வராது, ஏதோ கலவரமாம்“ என்று பேசிக்கொண்டிருந்தனர். விசாரித்ததில் குறிப்பிட்ட ஒருவரை வெட்டிக் கொன்றுவிட்டதாகவும் அதனால் பஸ்கள் ஓடாது, கடையடைப்பு என்று கலவரம் நடப்பதாக தெரிந்துகொண்டேன். இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று, சம்பவம் நடந்தது வேறொரு ஊரிலுள்ள ஏதோ ஒரு இடத்தில்.. ஆனால் கலவரம் நடப்பதோ பெரும்பாலான ஊர்களில்.
வேறு வழியில்லாமல் சேர் ஆட்டோ பிடித்து ஆரப்பாளையம் வந்தேன். அங்கும் பஸ் வரவில்லை. மீண்டுமொரு சேர் ஆட்டோவை தேடினேன். அந்தப் பக்கம் சாதாரண ஆட்டோக்காரர்கள் சேர் ஆட்டோ வரக்கூடாது என்று பிரச்சனை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பிழைப்பு கெடுகிறதாம். தாமதமாகிக் கொண்டிருக்கிறதே என்று ஆட்டோவில் ஏற விசாரித்தேன். டிரைவர் இரண்டு மடங்காக பணம் கேட்டார். (அவர்கள் சம்பாதிக்க இது தானே சரியான நேரம்..). அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே.. வேறென்ன செய்ய? சரியென பணம் கொடுத்து வயித்தெறிச்சலோடு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.
இது போன்று கலவரங்கள் நடக்கும்போது சாதாரண மனிதர்களின் நிலைமை ரொம்பவே பரிதாபத்திற்குரியது. வீட்டில் நெருங்கிய உறவினர்கள்.. ஏன்.. குடும்பதில் ஒருவர் இறந்தால் கூட இந்த அளவிற்கு சிரமப்படுவோமா என்பதில் சந்தேகம் தான். யாரோ ஒருவர் ஏதோ ஒரு இடத்தில் இறந்ததற்கு மற்ற இடங்களில் இருக்கும் நாம் அல்லல்படுகிறோம். இறந்தவரின் மேலுள்ள மரியாதையையும் பிரியத்தையும் காட்டுவதற்கு கலவரங்கள் தேவையில்லையே.. நமது வீட்டில் யாரையேனும் இழந்துவிட்டால் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் கட்டாயமாக வருத்தத்தில் இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவது கேவலமானது. அது போல தான் இதுவும்.
இறந்தவர் யாரென்றே கூட பலருக்குத் தெரிவதில்லை. அன்றாடப் பிழைப்பு நடத்தும் அப்பாவிகள் பற்றி இதுபோன்றவர்களுக்கெல்லாம் அறவே கவலை கிடையாது. பொதுவாக இறப்பின்போது அமைதியாக அஞ்சலி செலுத்துவார்கள்.. அதைவிடுத்து அடுத்தவரை கஷ்டப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமென்று தெரியவில்லை.
இவ்வாறான கலவரங்கள் நிஜமான வருத்தங்களை வெளிப்படுத்துவதற்கு பதில் சமூக அந்தஸ்த்தை எதிர்பார்த்தே பெரும்பாலும் நடத்தப்படுகிறது. என்ன செய்தாலும் இறந்தவர்கள் மீளப்போவதில்லை எனும்போது அடுத்தவரை தொந்தரவு செய்யாமலாவது இருக்கலாமே..
இராணுவத்தில் நாட்டுக்காக போராடி உயிர்விடுபவர்களைக் கூட அமைதியான முறையில் கொடி போர்த்தி வழிநடத்தி அடக்கம் செய்கின்றனர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (அதிலும்கூட வான் நோக்கி சுடுவார்களே தவிர யாரையும் கடுகளவு கூட துன்புறுத்துவதில்லையே..)
இறந்தவர் எப்படிப்பட்டவர்? அவர் நல்லவரா கெட்டவரா? அவர் வரலாறு என்ன? என்பதில்லை இந்தப் பதிவு. இது எந்த ஒரு தனி நபரையோ, சாதியையோ, மதத்தையோ குறிப்பிட்டு எழுதப்படவில்லை. இன்றைய அரசியலில் அவர் இவர் என்றில்லை.. யார் இறந்தாலும் இந்த அவதிகள் நமக்கு ஏற்படுகிறது என்ற ஒரு ஆதங்கம் தான் இந்தப் பதிவிற்கு காரணம்.
வருத்தமோ சந்தோஷமோ.. தனக்காய் தானாய் வரவேண்டும். அதை எந்த சூழலிலும் அடுத்தவர் மேல் திணிக்கக்கூடாது என்பதே என் கருத்து.
அடுத்தவரைப் பாதிக்கும் விதத்தில் செய்யப்படும் எந்த செயலும் தவறே.. அது சிறு புன்னகையாக இருந்தாலும் கூட..
பின்னூட்டங்கள் எந்த விதத்தில் வரும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. இருந்தாலும் நான் சொன்னதில் தவறேதுமில்லை என்பதால் மட்டுறுத்தாமல் விடுகிறேன். நண்பர்களின் ஆதரவுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில்..
நன்றி.
.
.

Comments

K.s.s.Rajh said…
///அடுத்தவரைப் பாதிக்கும் விதத்தில் செய்யப்படும் எந்த செயலும் தவறே.. அது சிறு புன்னகையாக இருந்தாலும் கூட..////நல்ல கருத்து
இவ்வாறான சம்பவங்களினால் தேவையின்றி பாதிக்கப்படும் போது இறந்தவரை சிலர் திட்டித் தீர்க்கும்படி நேரிடும். அவர் நல்லவராகவே இருக்கக் கூடும். மற்றவரைப் பாதிக்கும் இந்த வருத்தத் திணிப்புகளின் மீது எனக்குப் பெருங்கோபம் உண்டு. (எதுவும் செய்யத்தான் முடிவதில்லை) உங்கள் கருத்து மிகச்சரியே இந்திரா.
இறந்தவர் யாருன்னு நிறைய பேருக்கு தெரியலைன்னு சொன்னிங்களே, அந்த கவலையை போக்கத்தான் இந்த தர்ணாக்கள் எல்லாம்!

ஆமா இறந்தது யாரு?
Moortthi JK said…
"வருத்தமோ சந்தோஷமோ.. தனக்காய் தானாய் வரவேண்டும். அதை எந்த சூழலிலும் அடுத்தவர் மேல் திணிக்கக்கூடாது என்பதே என் கருத்து." - real words......

கண்டிப்பாக உங்களுக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு. தானே புயல் தாக்கி பதினோரு நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை இன்னும் வழங்காத அரசாங்கத்தை எதிர்த்து இந்த அளவிற்கு போராட்டம் நடக்குமா என்று சந்தேகம் தான். நம் மக்களிடம் ஒற்றுமை இல்லை. :(
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
அடுத்தவரைப் பாதிக்கும் விதத்தில் செய்யப்படும் எந்த செயலும் தவறே.. அது சிறு புன்னகையாக இருந்தாலும் கூட..
மிகவும் சரியான உண்மையே நல்ல பகிர்வு நன்றி
// இறந்தவரின் மேலுள்ள மரியாதையையும் பிரியத்தையும் காட்டுவதற்கு கலவரங்கள் தேவையில்லையே..//

உண்மை.

சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க, இந்திரா.
baleno said…
மிக நியாயமான பதிவு.

நமது வீட்டில் யாரையேனும் இழந்துவிட்டால் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் கட்டாயமாக வருத்தத்தில் இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவது கேவலமானது.
அன்பின் இந்திரா - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - இதற்கெல்லாம் கட்டுப்பாடே இல்லை - ஒரு தலைவரை இன்னொரு கும்பல் கொலை செய்து விட்டால் நாடு முழுவதும் கலவரம் - போக்குவரத்து பாதிப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தவிர்க்க வேண்டியவைகள் இவை. பதிவு நன்று - நட்புடன் சீனா
////பின்னூட்டங்கள் எந்த விதத்தில் வரும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. இருந்தாலும் நான் சொன்னதில் தவறேதுமில்லை என்பதால் மட்டுறுத்தாமல் விடுகிறேன். நண்பர்களின் ஆதரவுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில்..///

உண்மையின்மீது
வெளிச்சக்கதிர்களை வீசி
வெட்டவெளிச்சமாக்கிக் காட்டிட பயமுண்டாகிறது...!
இது..!
உண்மையானது...!
எதார்த்தமானது...!

எல்லோருக்கும் இது...! எனக்கும்தான்...!

தங்கள் வருத்தம் நியாயமானதே...!
என் செய்வது நம் நாட்டவன் இன்னும் குறுகிய வட்டதினுள்தான் உழன்று வருகிறான்...!

தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்..!

அப்போது எனது கிறுக்கலில்...!

"மானிடனே..!
நீ வாழும்போதுதான்
ஆட்டத்துடன்...!
ஆரவாரத்துடன்...!
ஆனால்
நீ வீழ்ந்த பின்புமா..!

மறைந்து
மண்ணுக்கு
இரையாகும் முன் - உன்
இறுதி ஊர்வலத்திலுமா...!
ஆட்டமும்...! ஆரவாரமும்....!"

இப்படி ஆரம்பித்த அந்த கிறுக்கல்
முடிவில்....

"இருந்தபோதுதான்
இரைச்சலோடு...
இறந்த பின்புமா..?
இறுதியாத்திரையிலுமா....?

சரி..! மானிடனே....!

கல்லறையிலாவது
'அமைதி'யுடன் உறங்குவாயா..?
அல்லது
அங்கும் 'ஆரவாரத்'துடன்தானா...?"
என...

சரி..! இதோட நிறுத்திக்குவோம்...!

இப்பதிவில் சொல்லாப்பட்ட
உங்க ஆதங்கம்...
ஏற்புடையதே...!
சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கவேண்டும்...!
//K.s.s.Rajh said...

///அடுத்தவரைப் பாதிக்கும் விதத்தில் செய்யப்படும் எந்த செயலும் தவறே.. அது சிறு புன்னகையாக இருந்தாலும் கூட..////நல்ல கருத்து//


கருத்துக்கு நன்றி நண்பரே..
//கணேஷ் said...

இவ்வாறான சம்பவங்களினால் தேவையின்றி பாதிக்கப்படும் போது இறந்தவரை சிலர் திட்டித் தீர்க்கும்படி நேரிடும். அவர் நல்லவராகவே இருக்கக் கூடும். மற்றவரைப் பாதிக்கும் இந்த வருத்தத் திணிப்புகளின் மீது எனக்குப் பெருங்கோபம் உண்டு. (எதுவும் செய்யத்தான் முடிவதில்லை) உங்கள் கருத்து மிகச்சரியே இந்திரா.//


மிக்க நன்றிங்க..
//வால்பையன் said...

இறந்தவர் யாருன்னு நிறைய பேருக்கு தெரியலைன்னு சொன்னிங்களே, அந்த கவலையை போக்கத்தான் இந்த தர்ணாக்கள் எல்லாம்!

ஆமா இறந்தது யாரு?//


அது தெரிஞ்சு நாம என்ன பண்ணப்போறோம்??? உருப்படியா ஏதாவது வேலையிருந்தா பார்ப்போம்.
//Moortthi JK said...

"வருத்தமோ சந்தோஷமோ.. தனக்காய் தானாய் வரவேண்டும். அதை எந்த சூழலிலும் அடுத்தவர் மேல் திணிக்கக்கூடாது என்பதே என் கருத்து." - real words......

கண்டிப்பாக உங்களுக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு. தானே புயல் தாக்கி பதினோரு நாட்களுக்கு மேலாகியும் மின்சாரம் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை இன்னும் வழங்காத அரசாங்கத்தை எதிர்த்து இந்த அளவிற்கு போராட்டம் நடக்குமா என்று சந்தேகம் தான். நம் மக்களிடம் ஒற்றுமை இல்லை. :(//


உண்மையிலும் உண்மை.
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..
//Rathnavel said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.//


நன்றிங்க..
//sasikala said...

அடுத்தவரைப் பாதிக்கும் விதத்தில் செய்யப்படும் எந்த செயலும் தவறே.. அது சிறு புன்னகையாக இருந்தாலும் கூட..
மிகவும் சரியான உண்மையே நல்ல பகிர்வு நன்றி//



கருத்துக்கு நன்றிங்க
//RAMVI said...

// இறந்தவரின் மேலுள்ள மரியாதையையும் பிரியத்தையும் காட்டுவதற்கு கலவரங்கள் தேவையில்லையே..//

உண்மை.

சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க, இந்திரா.//


நன்றிங்க.. வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும்.
//baleno said...

மிக நியாயமான பதிவு.

நமது வீட்டில் யாரையேனும் இழந்துவிட்டால் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் கட்டாயமாக வருத்தத்தில் இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவது கேவலமானது.//



நன்றிங்க..
//cheena (சீனா) said...

அன்பின் இந்திரா - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - இதற்கெல்லாம் கட்டுப்பாடே இல்லை - ஒரு தலைவரை இன்னொரு கும்பல் கொலை செய்து விட்டால் நாடு முழுவதும் கலவரம் - போக்குவரத்து பாதிப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தவிர்க்க வேண்டியவைகள் இவை. பதிவு நன்று - நட்புடன் சீனா//



இந்த நிலைமை மாற வேண்டும் என்பதே நம் விருப்பம்.
கருத்துக்கு நன்றிங்க.
//காஞ்சி முரளி //


கருத்துக்களுக்கு நன்றி முரளி சார்.

சிந்திப்பவர்கள் சிந்திக்கட்டும்..
அதே.. அதே..
நன்றிங்க.

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்