எல்லோர்க்கும் ஏதாவதொரு..




எல்லோருக்கும் ஏதாவதொரு கோழைத்தனம்
இருக்கத்தான் செய்கிறது..
தூக்கு மாட்டியவன் ஊன்று முயன்று
தோற்றுப்போன பெருவிரல் போல...

எல்லோருக்கும் ஏதாவதொரு நம்பிக்கை
இருக்கத்தான் செய்கிறது..
வெளிச்சென்ற மூச்சு அடுத்த நொடி
உள்வரும் என்பதைப் போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு ஏமாற்றம்
இருக்கத்தான் செய்கிறது..
சப்பி வந்த குச்சி மிட்டாயைத் தவறவிட்ட
குழந்தை மனம் போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு சந்தோசம்
இருக்கத்தான் செய்கிறது..
ஒப்பாரியின் நடுவிலும் கவனம் ஈர்க்கும்
மழலைச் சிரிப்பு போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு கோபம்
இருக்கத்தான் செய்கிறது..
இயலாமையின் போது கண்ணாடிமுன்
திட்டிக்கொள்ளும் ஆற்றாமை போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு காதல்
இருக்கத்தான் செய்கிறது..
அடைத்த கதவின் இடுக்கிலும் கசியும்
சாரல் மழை போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு வெறுமை
இருக்கத்தான் செய்கிறது..
புறப்பட்ட பயணத்தில் பெறப்பட்ட
கடைசி கையாட்டல் போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு காரணங்கள்
இருக்கத்தான் செய்கிறது..
வாழ்வின் நொடிகளை நகர்த்துவதற்கான
சமாளிப்பு நடிப்புகள் போல..
.
.

Comments

எல்லோருக்கும் எல்லாம் இருக்கிறது, என்பதை அழகாக சொல்லிறது கவிதை!
இயலாமைதான் கோபமாக வெடிக்கிறது இல்லையா, அருமை...!!!
எல்லாருக்கும் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது

செல்லகிறுக்கல்கள் ...ம்...ஹிம்

பாராட்டுக்கள் கவி சொன்ன விதம்
Unknown said…
எனக்கும் ஏதோவொரு காரணம்
இருக்கத்தான் செய்கிறது...
நல்ல கவிதையை எழுதிய
தோழிக்கு வாழ்த்துச்சொல்ல
மறுமொழி இடுவதைப்போல...

வாழ்வின் எதார்த்தங்களையும், ஏமாற்றங்களையும் ஒன்றாய் எடுத்துக்கொண்டோ, இல்லை நடித்துக்கொண்டோ, வாழ்க்கையை
நகர்த்துகிறோம் என்ற எதார்த்தக்கவிதை நன்றாக இருந்தது இந்திரா :)
Unknown said…
உரைநடையில்
எல்லோருக்கும் ஏற்ற கவிதை
மற்றும் ஒரு பாரதி (இந்திராவை)
வந்து விட்டார்
வாழ்க வளமுடன்
கோழைத்தனம் , நம்பிக்கை , ஏமாற்றம் ,சந்தோசம் ,கோபம் , காதல் , வெறுமை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது இல்லை என்றாலும் சலிப்பு .
எல்லோருக்கும் ஏதாவதொரு கவிதை எழுதும் திறன்

இருக்கத்தான் செய்கிறது..

"இந்திராவின் கிறுக்கல்கள்" பதிவில்

இந்திரா எழுதும் கவிதை போல..!



எப்புடி...!

நாங்களும் "ஈ அடிச்சா" காப்பி அடிப்போமுல்ல...!


உண்மையில்..
நல்ல கவிதை...!

வாழ்த்துக்கள்...!
பாராட்டுக்கள்...!


ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கறேன்...!


நட்புடன்...!
எல்லோருக்கும் ஏதாவதொரு கவிதை எழுதும் திறன்
இருக்கத்தான் செய்கிறது..
"இந்திராவின் கிறுக்கல்கள்" பதிவில்
இந்திரா எழுதும் கவிதை போல..!


எப்புடி...!
நாங்களும் "ஈ அடிச்சா" காப்பி அடிப்போமுல்ல...!


உண்மையில் நல்ல கவிதை...!

வாழ்த்துக்கள்...!
பாராட்டுக்கள்...!


ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கறேன்...!


நட்புடன்...
உங்களது கவிதைகளில் ஆகச்சிறந்ததாக இது இருக்கிறது.ஆனால் அடுத்த படைப்பு இதை ஒவர்டேக் செய்ய வாழ்த்துகிறேன்.
ஆம், இருக்கத்தான் செய்கிறது!
//நம்பிக்கைபாண்டியன் said...

எல்லோருக்கும் எல்லாம் இருக்கிறது, என்பதை அழகாக சொல்லிறது கவிதை!//

நன்றிங்க..
//MANO நாஞ்சில் மனோ said...

இயலாமைதான் கோபமாக வெடிக்கிறது இல்லையா, அருமை...!!!//


ஆமாம் மனோ சார்..
கருத்துக்கு நன்றிங்க..
//மனசாட்சி™ said...

எல்லாருக்கும் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது

செல்லகிறுக்கல்கள் ...ம்...ஹிம்

பாராட்டுக்கள் கவி சொன்ன விதம்//


தங்களின் பாராட்டுக்களுக்கு என் நன்றிகள்..
//ரேவா said...

எனக்கும் ஏதோவொரு காரணம்
இருக்கத்தான் செய்கிறது...
நல்ல கவிதையை எழுதிய
தோழிக்கு வாழ்த்துச்சொல்ல
மறுமொழி இடுவதைப்போல...

வாழ்வின் எதார்த்தங்களையும், ஏமாற்றங்களையும் ஒன்றாய் எடுத்துக்கொண்டோ, இல்லை நடித்துக்கொண்டோ, வாழ்க்கையை
நகர்த்துகிறோம் என்ற எதார்த்தக்கவிதை நன்றாக இருந்தது இந்திரா :)//


நன்றி ரேவா..
கருத்துக்கும் வருகைக்கும்..
//siva sankar said...

உரைநடையில்
எல்லோருக்கும் ஏற்ற கவிதை
மற்றும் ஒரு பாரதி (இந்திராவை)
வந்து விட்டார்
வாழ்க வளமுடன்//


ஹிஹி.. நன்றி சிவா..
//சசிகலா said...

கோழைத்தனம் , நம்பிக்கை , ஏமாற்றம் ,சந்தோசம் ,கோபம் , காதல் , வெறுமை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது இல்லை என்றாலும் சலிப்பு //


ம்ம்ம்.. அதுவும் சரிதான்.
கருத்துக்கு நன்றி சசிகலா..
//காஞ்சி முரளி said...

எல்லோருக்கும் ஏதாவதொரு கவிதை எழுதும் திறன்
இருக்கத்தான் செய்கிறது..
"இந்திராவின் கிறுக்கல்கள்" பதிவில்
இந்திரா எழுதும் கவிதை போல..!

எப்புடி...!
நாங்களும் "ஈ அடிச்சா" காப்பி அடிப்போமுல்ல...!
உண்மையில்..
நல்ல கவிதை...!
வாழ்த்துக்கள்...!
பாராட்டுக்கள்...!
ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கறேன்...!
நட்புடன்...!//


நன்றி முரளி சார்...
கருத்துக்கள் தொடரட்டும்..
//ஸ்ரீராம். said...

அருமை.//


நன்றிங்க..
//உலக சினிமா ரசிகன் said...

உங்களது கவிதைகளில் ஆகச்சிறந்ததாக இது இருக்கிறது.ஆனால் அடுத்த படைப்பு இதை ஒவர்டேக் செய்ய வாழ்த்துகிறேன்.//


கண்டிப்பாக முயல்கிறேன் நண்பரே..
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
வருகைக்கும் தான்.
:-)
//வால்பையன் said...

ஆம், இருக்கத்தான் செய்கிறது!//


ம்ம்ம்..
அதையே தான் நானும் சொன்னேன்.
கருத்தக்கு நன்றி அருண் சார்..
ஆனால் 'எல்லோரிடமும்' இப்படியொரு அழகான கவிதை இல்லையே? பிரமாதம்!
ஆனால் 'எல்லோரிடமும்' இப்படியொரு அழகான கவிதை இல்லையே? பிரமாதம்!
- kbjana.blogspot.com
மாலதி said…
எல்லோருக்கும் ஏதாவதொரு காரணங்கள்
இருக்கத்தான் செய்கிறது..
வாழ்வின் நொடிகளை நகர்த்துவதற்கான
சமாளிப்பு நடிப்புகள் போல..//அருமை
Arun said…
na ippo than first time unga padaippugala paakuren.... avlo arumaiya irukku.. ungalal namma maduraikku permai....
தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
arul said…
nice post

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..