இன்டர்வியூக்குப் போறீங்களா? இதோ சில டிப்ஸ்..



இன்டர்வியூல என்னென்ன கேள்விகளெல்லாம் பொதுவா கேப்பாங்கனு ஒரு பதிவுல சொல்லியிருந்தேன். இன்டர்வியூக்குப் போகும்போது நம்மளை எப்படி தயார் படுத்திக்கணும்னு, அதாவது எந்தமாதிரி போகணும்னு நிறைய பேருக்குத் தெரியிறதேயில்ல. ஒருத்தருடைய பதில்களை வச்சுமட்டும் அவரை வேலைக்கு செலக்ட் பண்றதில்ல. தோற்றத்தை வைத்தும், பதில் சொல்லும் விதத்தை வைத்தும் முதலில் எடைபோட்டதுக்குப் பிறகுதான் சொல்லப்டுற பதில்களை வைத்து தேர்வுசெய்யலாமா வேணாமானு முடிவெடுப்பாங்க.
என்னோட அலுவலகத்துல நடந்த ஆள்தேர்வின்போது ஏற்பட்ட அனுபவத்தின்படி சில ஆலோசனைகளை இங்கே பகிர்ந்துக்குறேன்.
1. First impression is the best Impressionனு சொல்வாங்க. அதுக்கு முதல் அடிப்படையா அமையிறது உடைகள் தான். ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போகும்போது எந்தமாதிரி உடுத்தணும்குறதுல தெளிவிருக்கணும். கண்ணைப் பறிக்கிற மாதிரியான வண்ணங்கள்ல உடுத்தாம, பார்த்தவுடனேயே ஒரு நிதானத்தை உணர்த்துற மாதிரி உடுத்தணும். சினிமாவில் டான்ஸ் ஆடப்போறதுமாதிரி ஜிகுஜிகுனு உடுத்தக்கூடாது. பெண்களாயிருந்தா இன்னும் கவனமாயிருக்கணும். தவறான அபிப்ராயம் வராதபடி நாகரிகமா உடையணியனும்.
2. கமகமனு, அறையே மணக்குற மாதிரி கண்டகண்ட சென்ட் அல்லது Body Spray போட்டுகிட்டுப் போகக்கூடாது. மெலிதான, தனித்துத் தெரியாதபடியான Spray உபயோகிச்சுக்கலாம்.
3. உட்காரும்போதும் எழுந்திரிக்கும்போது தடாலடியா நாற்காலிய இழுத்துப்போட்டுகிட்டு சத்தமெழுப்பக்கூடாது. அது அநாகரிகமா நெனப்பாங்க. (இத ஒரு காரணமா சொல்லி என் ஆபீசர் ஒருத்தர நிராகரிச்சாரு.. அவ்வ்வ்)
4. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களைத் தெளிவா சொல்லணும். சந்தேகமாவோ.. இல்ல தயக்கமாவோ பதில் சொல்லக்கூடாது. தன்னுடைய பதில்களில் உறுதியாக இருக்குறதா காட்டிக்கணும். உள்ளுக்குள்ள பயமிருந்தாலும், வெளியே தெனாவெட்டா இருக்கணும். வாய்க்குள்ளயே முனங்காம, தீர்க்கமா பதில் சொல்லணும்.
5. இன்டர்வியூ நடக்கும்போது நடக்கும் உரையாடல்களில் நேருக்குநேராகப் பார்த்து பதில் சொல்லணும். மொபைலைப் பார்த்தோ, தரையைப் பார்த்தோ, நகத்தை ஆராய்ந்துகிட்டோ பதில் சொல்லக்கூடாது. Eye Contact ரொம்ப முக்கியமானது. அதுக்காக திருதிருனு முழிக்கக்கூடாது. திடமான பார்வை வேணும்.
6. ஏதாவது எதிர்மறையா கேள்வி கேட்டா, அதாவது வேலைக்கான தகுதி உங்களிடம் இல்லைங்குற மாதிரி ஏதாவது சொன்னா, உடனே சோகமா பேசக்கூடாது. எதையும் ஏத்துக்குற மாதிரியான பக்குவத்துல இருக்குறதா காட்டிக்கணும்.
7. ஸ்டைல்ங்குற பேர்ல தலைக்கு கோமாளி மாதிரி கலரிங்கெல்லாம் பண்ணிகிட்டு போகாதீங்க. ஜீன்ஸ் டீசர்ட்னு போடாம, Casual உடைகள் உடுத்துங்க. பார்க்குறதுக்கு ப்ளேபாய் மாதிரி தோற்றத்தக் கொண்டுவந்துடாதீங்க.
8. சர்ட்டிபிகேட்களை ஃபைல்ல ஒரு கோர்வையா அடுக்கி வச்சுக்கங்க. கல்வித்தர வரிசைப்படி இருக்கணும். ஒவ்வொண்ணா அவங்க பார்க்கும்போது தேடும்படி இருக்கக்கூடாது.
9. உங்க RESUMEஐ ஏனோதானோனு இல்லாம ஒழுங்கா டைப் பண்ணி வச்சுக்கங்க. அது, உங்களைப்பற்றிய எல்லா விபரங்களும் சர்ட்டிபிகேட்டைப் பார்க்கவே தேவையில்லாதபடி அமைந்திருக்கணும்.
10. முன் அனுபவம் ஏதாவது இருக்கும்பட்சத்துல, பழைய அலுவலகத்தைப் பத்தி ஏதாவது கேள்விகேட்டா சொதப்பாம தெளிவான, அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமான பதில்களை அளிக்கணும்.
11. முடிஞ்சவரைக்கும் இன்டர்வியூக்கு வீட்டிலிருந்து துணைக்கு ஆளைக் கூட்டிகிட்டுப் போகக்கூடாது. தெரியா இடங்களாயின் பெண்களுக்கு இத தவிர்க்க முடியாது. அப்படியே துணைக்கு யாராவது வந்தாலும் அலுவலக கட்டிடத்தின் வெளியே நிற்கச் செய்யலாம். (இது சாதாரண காரணமாகத் தெரியலாம். ஆனா தனித்தன்மை, ஆளுமை, தைரியம் மாதிரியான விஷயங்களை இதைவைத்து யூகிக்க வாய்ப்புண்டு. என் அலுவலத்தில் மூன்று பெண்களை நிராகரித்ததற்கு சொல்லப்பட்ட காரணமிது.)
இன்னும் ஏதாவது டிப்ஸ் தோணினா அடுத்த பதிவுகள்ல சொல்றேன்.
கலந்துக்கப்போற இன்டர்வியூக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
.
.

Comments

எனக்கு முன்ன நேர்ந்த சில இண்டர்வியூ அனுபவங்களை வெச்சுப் பாக்கறப்போ... நீங்க சொல்லியிருக்கறது எல்லாமே மிக அருமையான சரியான டிப்ஸ்தாங்க இந்திரா. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Admin said…
உபயோகப்படக்கூடிய டிப்ஸ்தான்.பயன்படும்..
Avainayagan said…
மிக மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறீர்கள் நாங்கள் எம் பி ஏ மாணவர்களுக்கு சொல்வது போல இருக்கிறது பாராட்டுக்கள்
ஐந்தாவது மிக மிக முக்கியம்...
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
டிப்ஸ் நல்லாத்தான் இருக்கு...!

ஆனா...
இங்கே வரவுங்க எல்லாரும்???????????????
அருமையான பயன் மிக்க பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
மிகவும் உபயோகமான தகவல்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





MARI The Great said…
வேலை கிடைக்கும் வரை நீட்டாக இருந்துவிட்டு அதன் பிறகு நம் வேலையை காட்டிட வேண்டியதுதான்! அதாவது கலர்கலராக ராமராஜன் போல் ட்ரெஸ் போடுவது...ஊரையே தூக்குவது போல் சென்ட் அடிப்பது... எப்போதும் பிசியாக வேலை செய்வது போல் காட்டிக்கொண்டு சும்மாயிருப்பது போன்ற இன்னபிற.... :D

BTW, நல்ல பயனுள்ள டிப்ஸ்!! :)
Jayadev Das said…
\\Casual உடைகள் உடுத்துங்க. \\என்ன மேடம் சொல்றீங்க?
CS. Mohan Kumar said…
நமக்கு இந்த தகவல் கொஞ்சம் (பத்து வருஷம்) லேட்டா கிடைக்குது
// பால கணேஷ் //

//வியபதி //

//திண்டுக்கல் தனபாலன் //

//Ramani //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
// காஞ்சி முரளி said...

டிப்ஸ் நல்லாத்தான் இருக்கு...!

ஆனா...
இங்கே வரவுங்க எல்லாரும்???????????????//


இவங்க மூலமா யாரையாவது இந்த ஆலோசனைகள் சென்றடைந்தாலும் சந்தோசம் தானே முரளி??

வருகைக்கு நன்றிங்க.
:-)
// இராஜராஜேஸ்வரி //

// suresh //

//வரலாற்று சுவடுகள் //


கருத்துக்கு நன்றிங்க..
// Jayadev Das said...

\\Casual உடைகள் உடுத்துங்க. \\என்ன மேடம் சொல்றீங்க?//


Casual wear
டீ-சர்ட் இல்லாம சாதாரண சட்டை பேண்ட்னு சொன்னேன்.

வருகைக்கு நன்றி ஜெயதேவ்.
// மோகன் குமார் said...

நமக்கு இந்த தகவல் கொஞ்சம் (பத்து வருஷம்) லேட்டா கிடைக்குது //


ஹஹா..
நம்ம மூலமா யாருக்காவது உபயோகப்பட்டா சந்தோசம் தான்.
வருகைக்கு நன்றிங்க..
// இரா.மாடசாமி said...

Good one !//


நன்றிங்க..

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..