பெண்ணுரிமை வாழ்க..! ஆண்கள் ஒழிக..!!



பெண்ணுரிமையைப் பாதுகாப்போம். பெண்களுக்கு உரிமை கிடைக்கப் போராடுவோம். வாருங்கள் பெண்களே.. நமக்கு முதல் எதிரி ஆண்கள் தான். ஆண்களை எதிர்த்துப் போராடுவோம். பெண்ணுரிமை வாழ்க! ஆண்கள் ஒழிக! ஆண்கள் ஒழிக!!
இன்னைக்கு இதுதான் பெண்ணுரிமைக்காக போராடும் பெரும்பாலான இயக்கங்களின் கோஷமா இருக்குது. பெண்ணுரிமைனாலே அது ஆண்களுக்கு எதிரானதுங்குற விளக்கம் தான் கொடுக்கப்படுது. இந்தவகையான தவறான புரிதல் தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான கருத்துவேறுபாட்டையும் அதிகார மனப்பான்மையையும் அதிகரிக்குது. அதாவது சமுதாயத்துல பெண்களின் உரிமைகளுக்காக போராடனுமேயொழிய, ஆண்களை எதிரியா நெனச்சுப் போராடுறதுல தான் அடிப்படைத் தவறே இருக்கு.
ஆண்களுக்கு சாதகமா பேசுறதுக்காக சொல்லவரல.. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் பெண்களை சக மனுஷியா நடத்துற, அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குற ஆண்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. அதே சமயம் பொண்ணுங்கனாலே தாழ்ந்துதான் இருக்கணும்னு சொல்லிச் சொல்லியே அவங்கள அடிமைப்படுத்துற பெண்களும் சமூகத்துல இருக்குறாங்க.
இங்க பெண்ணுரிமைப் போராட்டம்குறது யாரை எதிர்த்துங்குறதுல இல்ல. எந்த அடிப்படைலங்குறதுல தான் இருக்கு. ஆண்கள் மாதிரி உடையணிஞ்சுகிட்டு, தலைமுடிய வெட்டிவிட்டுகிட்டா அது பெண்ணுரிமை கிடையாது. அவங்கள மாதிரியே சிகெரெட் பிடிச்சுகிட்டு ஆல்கஹால் குடிச்சுகிட்டு இருக்குறதுக்கு பேரு உரிமைப் போராட்டம் இல்ல. வார்த்தைக்கு வார்த்தை விதண்டாவாதம் பண்ணி சண்டைபோடுறதும் எதிர்த்துப்பேசுறதும் பெண்ணுரிமை கிடையாது. இந்த மாதிரி செய்யுறதுனால, இருபாலினருக்கும் நடுவுல இருக்குற அடிப்படை விரிசல் என்னைக்குமே அழியாது. தவறுகளைத் திருத்தனுமேதவிர, அதே தவறைத் தானும் செய்து, சளைத்தவள் அல்லனு நிரூபிக்குறதுல எந்தப் பெருமையும் ப்ரயோஜனமும் இல்ல.
சமுதாயத்துல கல்வித் தகுதிய மேம்படுத்திகிட்டு, வெளியேறி அலுவலகத்துல வேலை பார்த்து, தனக்கான தன் குடும்பத்துக்கான முன்னேற்றத்துக்கு பாடுபடுறதுல ஆண் பெண் ரெண்டுபேருக்குமே சம பொறுப்பு இருக்கணும்.  நீ பெரியவனா.. நா பெரியவளாங்குற வாக்குவாதம் வலுப்பெறும்போது அந்த இடத்துல சமநிலை வரவே வராது.
அதே மாதிரி, பெண்கள்னாலே கவர்ச்சிக்காகவும், தங்களுடைய உள்மன இச்சைகளைப் புகுத்துறதுக்காகவும், தங்களைவிட தாழ்ந்திருக்கவும் படைக்கப்பட்டவங்கங்குற நினைப்பு, பெரும்பாலான ஆண்கள்கிட்டயிருந்து விலகணும். தனக்கு சொந்தமானவள்ங்குற எண்ணம் வந்தாலே, அவளை சொந்தம் கொண்டாடி ஆதிக்கம் செலுத்தணும்குற எண்ணம் வரும். அவளும், சராசரி உணர்வுகளும் உணர்ச்சிகளும் நிறைந்த தனிப்பட்ட, சக மனுஷிங்குற புரிதல் வேணும். தனக்குரிய எல்லா உரிமைகளும் கடமைகளும் அவளுக்கும் உண்டுங்குற உண்மையை ஏத்துக்கணும். குறை சொல்லியும் தாழ்த்தியும் பெண்களை மட்டப்படுத்தாம சகஜமா ஏத்துக்குற பக்குவம் பரவலா ஆண்கள்கிட்ட வரணும்.
பெண்ணுரிமை, ஆணுரிமைங்குறது தனிப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்கு நடுவுல மட்டும் நடக்குற சண்டை கிடையாது. அது ஒரு சமூகம் சார்ந்தது. சமூக அங்கீகாரம்குறது இருவருக்குமே கிடைக்கணும். அடிமைப்பட்டுக்கிடக்குறதுல ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு. யாரிடம், எதனிடம் என்பதுல தான் இருக்கு கேள்வி. சிலர் எதிர்பாலினரிடமாக இருக்கலாம். சிலர் பொதுவான ஏதாவதொரு விஷயத்திலிருக்கலாம். அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காகவும் ஜாதி.. மதம்.. குடும்பப் பின்னணி.. சுயநிரூபனம்.. கல்வி.. தொடர்பான உரிமைகளுக்காகவுமாக இருக்கலாம்.
அடிப்படைப் புரிதல் சரியானதாக இருக்கும்பட்சத்தில், பெண்ணுரிமையோ ஆணுரிமையோ.. இருபாலினருமும் தாராளமாக இணைந்து போராடலாம்.
பெண்ணுரிமை வாழ்க.. ஆணுரிமையும் வாழ்க!!
அடுத்த பதிவுல சந்திக்குறேன்.
.
.

Comments

எக்ஸலண்ட் இந்திரா! சில சமயங்கள்ல பெண்கள் கிட்டயிருந்தே பெண்கள் பெண்ணுரிமையை போராடி வாங்கற நிலையும் இருக்கு. அடக்குமுறையில குடும்பத் தலைவிய வெச்சிருக்கற ஆண்களையும் பாத்த்திருக்கேன். (நிஜமா நான் அப்டி இல்லீங்கோ...) சரியான புரிதல் தான் வேண்டும். அதை அழகாச் சொன்ன உங்களுக்கு ஒரு சல்யூட்!
MARI The Great said…
>>>பெண்களை சக மனுஷியா நடத்துற, அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்குற ஆண்களும் இருக்கத்தான் செய்யுறாங்க<<<

நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே! புரிதலுக்கு நன்றி :) :) :)
ஆணோ பெண்ணோ புரிதல் ஒன்றே நலம் . சிந்திக்க வைக்கும் பதிவு.
மனங்கள் இணைந்தால் எப்போதும் இனிமையே... நல்லதொரு அலசலுக்கு வாழ்த்துக்கள்...


தலைப்பில்

//பெண்ணுரிமை வாழ்க..! ஆண்கள் ஒழிக..!! //

முடிவில்

//பெண்ணுரிமை வாழ்க.. ஆணுரிமையும் வாழ்க!!//

அப்படி போடு - அடிப்படையில் புரிதல் வேண்டும்
Admin said…
பெண்ணுரிமை, ஆணுரிமைங்குறது தனிப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்கு நடுவுல மட்டும் நடக்குற சண்டை கிடையாது. அது ஒரு சமூகம் சார்ந்தது..

சரியான கருத்தை மையத்துல வச்சீங்க..
நடக்கட்டும்.., நடக்கட்டும்.,
நாம் கொடுக்கவேண்டியவர்கள் என்கிற எண்ணம்
ஆணைவிட்டுப் போகனும்
கொடுத்துப் பெறுவதில்லை உரிமை
என்கிற எண்ணம் பெண்ணுக்குள் தானாய் மலரனும்
என்பது என் கருத்து
சிந்திக்கத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நாம் கொடுக்கவேண்டியவர்கள் என்கிற எண்ணம்
ஆணைவிட்டுப் போகனும்
கொடுத்துப் பெறுவதில்லை உரிமை
என்கிற எண்ணம் பெண்ணுக்குள் தானாய் மலரனும்
என்பது என் கருத்து
சிந்திக்கத் தூண்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அடிப்படைப் புரிதல் சரியானதாக இருக்கும்பட்சத்தில், பெண்ணுரிமையோ ஆணுரிமையோ.. இருபாலினருமும் தாராளமாக இணைந்து போராடலாம்.//
well said indhira
Robin said…
//தவறுகளைத் திருத்தனுமேதவிர, அதே தவறைத் தானும் செய்து, சளைத்தவள் அல்லனு நிரூபிக்குறதுல எந்தப் பெருமையும் ப்ரயோஜனமும் இல்ல.// நல்ல கருத்து.

//அதே மாதிரி, பெண்கள்னாலே கவர்ச்சிக்காகவும், தங்களுடைய உள்மன இச்சைகளைப் புகுத்துறதுக்காகவும், தங்களைவிட தாழ்ந்திருக்கவும் படைக்கப்பட்டவங்கங்குற நினைப்பு, பெரும்பாலான ஆண்கள்கிட்டயிருந்து விலகணும்.// அதே மாதிரி பெண்களும் தங்களை கவர்ச்சி பொருளாக நினைக்கக்கூடாது. இன்றைக்கு பெண்கள் பலர் அணியும் உடைகளைப் பார்த்தாலே தெரியும்.

//தனக்கு சொந்தமானவள்ங்குற எண்ணம் வந்தாலே, அவளை சொந்தம் கொண்டாடி ஆதிக்கம் செலுத்தணும்குற எண்ணம் வரும்.// தனக்கு சொந்தமானவள் என்ற நினைப்பு அன்பின் வெளிப்பாடு.


//ஆண்கள் மாதிரி உடையணிஞ்சுகிட்டு, தலைமுடிய வெட்டிவிட்டுகிட்டா அது பெண்ணுரிமை கிடையாது. அவங்கள மாதிரியே சிகெரெட் பிடிச்சுகிட்டு ஆல்கஹால் குடிச்சுகிட்டு இருக்குறதுக்கு பேரு உரிமைப் போராட்டம் இல்ல. வார்த்தைக்கு வார்த்தை விதண்டாவாதம் பண்ணி சண்டைபோடுறதும் எதிர்த்துப்பேசுறதும் பெண்ணுரிமை கிடையாது. இந்த மாதிரி செய்யுறதுனால, இருபாலினருக்கும் நடுவுல இருக்குற அடிப்படை விரிசல் என்னைக்குமே அழியாது. தவறுகளைத் திருத்தனுமேதவிர, அதே தவறைத் தானும் செய்து, சளைத்தவள் அல்லனு நிரூபிக்குறதுல எந்தப் பெருமையும் ப்ரயோஜனமும் இல்// அருமையான கருத்துகள் தோழி.. வாழ்த்துக்கள்..! :)
அழகாகச் சொன்னீர்கள்..

இருபாலரும் சிந்திக்கும்விதமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்..

நன்று.
பெண்ணுரிமை வாழ்க..! ஆண்கள் ஒழிக..!!

//////////////////////////////////////////

எங்க போயி ஒளியனும்ன்னு சொன்னீங்கனா அங்கேயே போய் ஒளிஞ்சிபோம் ..............

ஹி ஹி ......நல்ல அலசல் .........
// தமிழ்வாசி பிரகாஷ் //

//பால கணேஷ் //

//வரலாற்று சுவடுகள் //

// திண்டுக்கல் தனபாலன் //


கருத்துக்கு நன்றிங்க..
// ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

//மனசாட்சி™ //

//மதுமதி //

//சங்கவி //

//Ramani //


கருத்துக்கு நன்றிங்க..
// rufina rajkumar //

//Robin //

//முனைவர்.இரா.குணசீலன்//


கருத்துக்கு நன்றிங்க..
// அஞ்சா சிங்கம் said...

பெண்ணுரிமை வாழ்க..! ஆண்கள் ஒழிக..!!

//////////////////////////////////////////

எங்க போயி ஒளியனும்ன்னு சொன்னீங்கனா அங்கேயே போய் ஒளிஞ்சிபோம் ..............//


ஹி ஹி ......நல்ல அலசல் .........//

ஒளியாம கருத்து சொன்னதுக்கு நன்றிங்க..
ஹிஹி..
பணிகள் அதிகம் காரணமாய் இந்த தாமதமான பின்னுட்டம்....

என்னைப் பொருத்தளவில்...
உரிமையோ...
உரிமையென்று
உரத்தக் குரல் கொடுக்கும்போதுதான்..
ஆதிக்கம் உருவாகும்...

நீங்கள் சொல்வதைப் போல...
விட்டுக்கொடுத்தல்... புரிதல்.. இருந்தால்... அங்கு ஆதிக்கம் நுழையாது...

அது எங்கே இருக்கு... இப்போ...

நீ மட்டும் சம்பாதிக்கிரியா என்ன? நானும்தான்... என்ற உரிமையின் உரிமை ஓங்கி குரல் கொடுக்க ஆரம்பிக்கும்போது ஆதிக்கம் அதிகமாகி... பிரிதல் உருவாகிறது...

இது யதார்ததமான உண்மை...

எனக்குத் தெரிந்து இந்தக்கால இளைஞர்கள்... இளைஞிகள் மத்தியில் இந்த விட்டுக்கொடுத்தல்.. புரிதல் இன்மையால் சென்னை உயர்நீதிமன்ற குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குகள் குவிகின்றன...

'each for made other' என்று வார்தைகளெல்லாம் உதட்டளவில் உதிரும் வார்த்தைகளாகவே இருக்கின்றன... நடைமுறை வாழ்க்கையில்... யதார்த்த வாழ்க்கையில் இதனை பின்பற்றாத காரணத்தால்... பெண்ணுரிமை என்றும்.. ஆணுரிமை என்றும் பிதற்றுகின்றனர்...

ஒரே ஒரு நிமிடம்...
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்...

நம் தாத்தா-பாட்டி காலத்தில்...
நம் அம்மா-அம்பா காலத்தில்...
ஏன் இந்தளவிற்கு விவாகரத்து நடைபெறவில்லை...
காரணம்...
புரிதல்.... என்று சொல்வதைவிட விட்டுக்கொடுத்தல் ஆக்கிரமித்திருந்தது அவர்கள் வாழ்க்கையில்....

இதை நான் சொன்னால்...
பத்தாம்பசலியாக... பெண்ணடித்தனமாக... எங்க அம்மாபோல வாழச்சொல்கிறீர்களா? என்ற சொற்கணைகள் என்மீது?

வாழ்க்கையில்..

பொறுமை..
சகிப்புத்தன்மை...
விட்டுக்கொடுத்தல்..
புரிதல்.... எந்த தம்பதிக்குள் அதிகம் இருக்கிறதோ... அவர்கள் வாழ்வாங்கு இன்புற்று வாழ்வார்கள்...

அதோடு..

ஒரு சில தம்பதியினரைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளேன்...

கணவர் இறந்த செய்தி அறிந்து.. உடன் மனைவி மறைவதும்...

மனைவி மறைந்த செய்தியறிந்து உடனே மரித்துபோன கணவரை பற்றிய செய்தி அறிந்து ஆச்சரியப்பட்டுப்போனேன்...

அந்த வயதான காலத்திலும்...
அவர்களுக்குள்
அப்படிப்பட்ட
காதல்...
புரிதல்...

அவர்கள் வாழ்ந்தது மட்டுமே வாழ்க்கை...

எனவே...
உரிமை என்று கோஷமிடுவதைவிட
விட்டுக்கொடுத்தல்... பரஸ்பரம் பேணுதல்... புரிதல் இருந்தால்... அங்கே உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை...

அங்கு முழுதும் வியாபித்திருப்பது... பரவியிருப்பது 'அன்பு' மட்டுமே...
மிகவும் எதார்த்தம் அக்கா! குடும்பத்தில் ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை மதியாமல் அவமதிப்பதும், ஒரு பெண் பெண் உரிமை என்ற பெயரில் ஒரு ஆணை அவமதிப்பதும் நிஜத்திலேயே கண்டிருக்கிறேன்! பெண் உரிமை என்று கேட்டாலே அது அங்களுக்கு எதிரான ஒன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது! இதுவே நிஜமும் ஆகிப்போனது! அருமையான [அகிர்வு அக்கா!
//காஞ்சி முரளி//

//யுவராணி தமிழரசன்//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்