என் அம்மாவுக்குப் பிறந்தநாள்..


வழக்கம்போல காலேல எந்திரிச்சதும் அம்மாவுக்கு போன் பண்ணி வாழ்த்து சொன்னேன். நான் தான் முதல்ல வாழ்த்தினேன்.
ஆரம்பநாட்கள்ள அவங்களோட பிறந்த நாள் என்னைக்குன்னு அவங்களுக்கே தெரியாம தான் இருந்தது..
பாட்டி கிட்ட கேட்டதுக்கு ஆடி மாசம் தான், ஆனா தேதி மறந்துடுச்சுன்னு சொன்னாங்க. அதுனால நான், என் அப்பா, என் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து ஆடி மாசத்துல ஒரு தேதி முடிவு பண்ணி வருஷா வருஷம் கொண்டாட ஆரம்பிச்சோம்..
ஆடி 21 .
நீங்களும் வாழ்த்துங்க.. அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க.

அப்புறம் என்னோட முந்தைய பதிவுக்கு பதில் சொல்றேன்னு சொன்னேன்ல..

அது சவப்பெட்டி.

இப்ப என்னோட கேள்வி சரிதானே??

Comments

ரொம்ப நாளாச்சு...!
நடுவில் நீங்களும் காணாமற் போனீர்கள்...!
நானும்....!

"ஊண் தந்து...
உயிர் தந்து...
உடல் தந்து...
உமை..
உருவாக்கிய
தெய்வத்தின் பிறந்தநாள் வாழ்த்து
வாழ்த்த
வயதில்லை..
வணங்குகிறேன்..."


எங்கோ ஓர் திரைப்படத்தில் கேட்ட வசனத்தின்படி...

"எந்த கோயிலுக்கு போனாலும்
எல்லா தெய்வமும் ஒண்ணுதான்"
எந்த வீட்டுக்குப் போனாலும்
எல்லாத் தாயும் ஒண்ணுதான்" என்ற
நினைவில் நின்ற வரிகளுடன்...

நட்புடன்...
காஞ்சி முரளி....
அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


:)

அதே போல் நிறைய புதிர் போடுங்கள்!
அப்புறம் விற்பவனும் விரும்ப மாட்டான்னு சொன்னிங்கள்ள, அது தப்பு, விற்பவனுக்கு அது வியாபாரம் மட்டுமே!
kalai said…
amma happy birth day avanga enakum amma than
//வால்பையன்..//

வாழ்த்தியதற்கு நன்றி..

//நிறைய புதிர் போடுங்கள்!//

கண்டிப்பா..

//விற்பவனும் விரும்ப மாட்டான்னு சொன்னிங்கள்ள, அது தப்பு, விற்பவனுக்கு அது வியாபாரம் மட்டுமே!//

வியாபாரம் செய்தாலும் அதில் அவனுக்கு ஒரு நெருடல் இருக்கதானே செய்யும்.. முழு மகிழ்ச்சி இருக்காதே..
// காஞ்சி முரளி//

//கலை//

வாழ்த்தியதற்கு நன்றி
அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
தங்களின் அன்னைக்கு என்னின் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்...

இறைவன் அருள் என்றும் கிடைக்கட்டும்...
அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


மூனு நாளா உங்க பிளாக் திறக்காமல் எர்ரர் வந்தது.எதுக்கும் பேக்கப் பண்ணி வையுங்க..புதிர் (விக்கிற ஆள் சந்தோஷமில்லைன்னு எப்படி சொல்லலாம் .அவருக்கு அது பிசினஸ்)
ஜெய்லானி


அதை தான் நானும் சொன்னேன்
இந்த கோணத்தில் நான் யோசிக்கவில்லை..

நக்கீரர்களே.. தவறை ஒத்துக்கொள்கிறேன்..
R.Gopi said…
இந்திரா....

விற்பனை என்று வந்து விட்டால், அந்த பொருள் எதுவாயினும், விற்று தீர்ந்தால், அவனுக்கு வருமானம் தானே....
வியாபாரம் செய்தாலும் அதில் அவனுக்கு ஒரு நெருடல் இருக்கதானே செய்யும்.. முழு மகிழ்ச்சி இருக்காதே..

//


என்னங்க..இப்ப நல்லா இருப்பவர்களிடமே.. சொல்லாம கொள்ளாம கிட்னிய திருடிப்புடராங்க..

சவப்பெட்டி விற்பனுக்கு நெருட்டல் இருக்குமா?.. சே..சே..
siva said…
valatha vayathiallai

vankkangal.

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்