டாக்டர் என்ற காமெடி பீஸ்கள்


பொதுவா மருத்துவர்கள் மரியாதைக்குரியவங்க தான்.
ஆனா தமிழ் சினிமாவுல வரும் டாக்டர் கதாப்பாத்திரம் இருக்குதே..
அந்த கொடுமைய யார்கிட்ட சொல்றதுனே தெரியல..
லேசா நரச்ச முடி.. சிவப்பு நிறம்.. முடிந்தவரை கண்ணாடி போட்ருக்கணும்.
ஒரு வெள்ளை கோட், குறிப்பா ஸ்டெதஸ்கோப் தோளில் மாட்டியிருக்கணும்..
முக்கியமா ஹீரோவைப் பார்த்து ஒரு காட்சியிலாவது ”இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கல்” அப்டினு டயலாக் பேசணும்.
முகத்துல ஒரு மாஸ்க்கும் கைல கிளவுசும் போட்டுட்டு ஆபரேசன் தியேட்டர் கதவ தெறந்து வெளிய வந்து (கண்ணாடி போட்ருந்தா அத கழட்டிட்டு) சோகமா தலைய ஆட்டிகிட்டே ”எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணோம்.. ஆனா பேசண்ட காப்பாத்த முடில” அப்டினு சொல்லனும்..
காலங்காலமா இந்த இம்சை தான் நடக்குது..

சினிமாவுல தான் இந்த கொடுமையெல்லாம்னு பார்த்தால்.. விளம்பரங்களில் அதை விட இம்சை பண்றாங்க..
மாத்திரைகள், ஆயின்மென்ட்கள் மட்டுமில்லாம டூத் பேஸ்ட் விளம்பரத்துல ஆரம்பிச்சு ஷாம்பு, டேட்ஸ் சிரப், குழந்தைகள் நாப்கின், ஹார்லிக்ஸ், காம்ப்ளான், ஃபேஷ் க்ரீம் இப்படி பெரும்பாலான விளம்பரங்களில் வந்து, ஏதோ ஒரு நிறுவனப் பெயர் சொல்லி (அநேகமா அது வெளிநாட்ல தான் இருக்கும்), இந்த நிறுவனத்தால தரச் சான்றிதழ் பெற்றதுனு வசனம் பேசுவாங்க..
இந்த மாதிரியான (மருத்துவ) கதாப்பாத்திரங்கள் உத்திரவாதம் அளித்தால் தான் மக்கள் நம்புகிறார்கள் என்பது இவர்கள் எண்ணமோ?? அதுக்கு உண்மையான டாக்டர்களையே பேசவைக்கலாம்... அத விட்டுட்டு எங்கயோ ஒரு மாடலிங்கைப் பிடிச்சுட்டு வந்துட்றாங்க..
இதுல என்ன காமெடினா, வேற விளம்பரத்துல அவன் கம்ப்யூட்டர் இஞ்சினியராவோ இல்ல காதலி பின்னாடி சுத்திகிட்டோ நடிச்சிருப்பான்.. அவனுக்கு வெள்ளை கோட் மாட்டி கீழ ஏதோ பெயர் போட்டு பக்கத்துல ஆர்கியாலஜிஸ்ட், நியூராலஜிஸ்ட், டெர்மடாலஜிஸ்ட், ஹேர் ஸ்பெசலிஸ்ட் அப்படினு ஏதாவது போட்ருவாங்க.. (நிரூபிக்கிறாங்களாமா..)
இந்த மாதிரியான காமெடி பீஸ்களை எல்லாம் சகிச்சுக்கணும்னு நம்ம தலைல எழுதியிருக்கு.
என்ன கொடும சார் இது..??
.

Comments

24 மணி நேர மேட்டர விட்டு விட்டிங்க
ஆமாம்..அவங்களாவது நடிக்க வந்தவங்க..நிஜ டாக்டர்கள் பன்னிய காமெடியையும் கொஞ்சம் படிச்சு பாருங்க....

http://rameshspot.blogspot.com/2010/08/blog-post.html
Robin said…
//பொதுவா மருத்துவர்கள் மரியாதைக்குரியவங்க தான்.// அந்த மரியாதையைத்தான் அவங்களாகவே கெடுத்துக்கிட்டான்களே
எல்லாமே செம காமெடி பீசுகளாத்தான் இருக்கு

what a medical miracle ???

சிரியான சமயத்துல தான் கொண்டு வந்துட்டீங்க,ஒரு 5 நிமிசம் தாமதிச்சிருந்தீங்கன்னா உயிருக்கே ஆபத்தாயிருக்கும்

இத மாதிரி எவ்வளவு பாத்துருக்கோம் :)
siva said…
hahaha..

ennatha cholla...

mudialai..

yen evlo kovam..?docterkitta????

appram ETHACHUM case potraporanga pathukonga...
இங்க....
அது... காமெடியான இருந்தாலும்... எடுப்பா (அள்ளக்கை) இருந்தாலும்...

வெள்ளை கோட்டுப் போட்டாத்தான் டாக்டர்!
கறுப்புக் கோட்டுப் போட்டாத்தான் வக்கீலு!
இப்படி.... சில பத்தாம் பசலித்தன அடையாளம் இல்லேன்னா...
நாங்க நம்பமாட்டோமில்ல..!

இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புதுன்னு... கேட்கிறீங்களா...!
நம்பித்தானே ஆவணும்...! அது அவங்க தலையெழுத்து...!

நட்புடன்...
காஞ்சி முரளி...
நாமெல்லாம் முட்டாளுங்கன்னு தெரிஞ்சு வச்சிக்கிட்டு நம்ம தலையில் மிளகா அரைக்கிறாங்க.. அவ்வளவு தான்..
ஆதிரா said…
24 மணி நேரம் வைட் பண்ணினாத்தான் சொல்ல முடியும் என்று கூறுவது...

நல்லா எழுதி இருக்கீங்க...
என்ன ஆச்சி ஏன் இந்த கொல வெறி ..?
//A.சிவசங்கர் said...
24 மணி நேர மேட்டர விட்டு விட்டிங்க//

அட ஆமாம்ல.. மறந்துட்டேன்..

//ரமேஷ் said...
ஆமாம்..அவங்களாவது நடிக்க வந்தவங்க..நிஜ டாக்டர்கள் பன்னிய காமெடியையும் கொஞ்சம் படிச்சு பாருங்க.... //

உண்மை தான் ரமேஷ்..


//Robin said...
அந்த மரியாதையைத்தான் அவங்களாகவே கெடுத்துக்கிட்டான்களே//

என்ன பண்றது?? நல்ல மருத்துவர்கள் யார்னே தெரிஞ்சுக்க முடியிரதில்ல..
//ஜில்தண்ணி - யோகேஷ் said...
எல்லாமே செம காமெடி பீசுகளாத்தான் இருக்கு
what a medical miracle ???
சிரியான சமயத்துல தான் கொண்டு வந்துட்டீங்க,ஒரு 5 நிமிசம் தாமதிச்சிருந்தீங்கன்னா உயிருக்கே ஆபத்தாயிருக்கும்
இத மாதிரி எவ்வளவு பாத்துருக்கோம் :)//

சரியா சொன்னிஙக யோகேஷ்..


//siva said...
hahaha..
ennatha cholla...
mudialai..
yen evlo kovam..?docterkitta????
appram ETHACHUM case potraporanga pathukonga...//

நீங்களே ஐடியா குடுப்பீங்க போல இருக்கே..


//காஞ்சி முரளி said...
இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புதுன்னு... கேட்கிறீங்களா...!
நம்பித்தானே ஆவணும்...! அது அவங்க தலையெழுத்து...! //

வாங்க முரளி..
//வெறும்பய said...
நாமெல்லாம் முட்டாளுங்கன்னு தெரிஞ்சு வச்சிக்கிட்டு நம்ம தலையில் மிளகா அரைக்கிறாங்க.. அவ்வளவு தான்..//

ஆனோ இது எத்தன நாளைக்குனு தான் தெரியல..


//ஆதிரா said...
24 மணி நேரம் வைட் பண்ணினாத்தான் சொல்ல முடியும் என்று கூறுவது...
நல்லா எழுதி இருக்கீங்க...//

நன்றி ஆதிரா.. அடிக்கடி வாங்க.


//ஜெய்லானி said...
என்ன ஆச்சி ஏன் இந்த கொல வெறி ..? //

வாங்க ஜெய்லானி..
சும்மா ஒரு ஆதங்கம்.. அவ்வளவு தான்..
Dr. Srjith. said…
அருமை நல்ல கருத்துகள் நன்றி
எல்லாம் கடவுள் கையில் தான் இருக்கு சொல்வாங்க அப்போ நாங்க பணத்தை கடவுளிடம் தரலாமா.....
என்னாச்சு அம்மணி? டாக்டருங்களைப் போட்டு இந்த வாரு வாறியிருக்கீக...? :-)
Jey said…
//அதுக்கு உண்மையான டாக்டர்களையே பேசவைக்கலாம்... //

ஆஹா...இந்த டாக்டர்கள உள்ள போடுரதுக்கு வழி பாக்குரீங்களே...
Chitra said…
சினிமாவுல தான் இந்த கொடுமையெல்லாம்னு பார்த்தால்.. விளம்பரங்களில் அதை விட இம்சை பண்றாங்க..
மாத்திரைகள், ஆயின்மென்ட்கள் மட்டுமில்லாம டூத் பேஸ்ட் விளம்பரத்துல ஆரம்பிச்சு ஷாம்பு, டேட்ஸ் சிரப், குழந்தைகள் நாப்கின், ஹார்லிக்ஸ், காம்ப்ளான், ஃபேஷ் க்ரீம் இப்படி பெரும்பாலான விளம்பரங்களில் வந்து, ஏதோ ஒரு நிறுவனப் பெயர் சொல்லி (அநேகமா அது வெளிநாட்ல தான் இருக்கும்), இந்த நிறுவனத்தால தரச் சான்றிதழ் பெற்றதுனு வசனம் பேசுவாங்க..


....... hilarious! ha,ha,ha,ha,ha,...
R.Gopi said…
என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்றேன்...

எல்லாத்துக்கும் மேல ஆண்டவன் இருக்கான்...

இந்த ரேர் ப்ளட் க்ரூப் நாலு பாட்டில் வேணும்... சிட்டியில எங்கேயும் கிடைக்காது.... ஆனா, இந்த சர்ஜரிக்கு கண்டிப்பா தேவைப்படும்...

அவரை பிழைக்க வைக்க நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணினோம்.. ஆனா, அவர் நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு போயிட்டார்....

டாக்டர்.... அவருக்கு இப்போ எப்படி இருக்கு.... ஒரு 24 மணி நேரம் கழிஞ்சா தான் எதுவும் சொல்ல முடியும்....

சரியான நேரத்துக்கு கொண்டாந்துட்டீங்க... நீங்க மட்டும் ஒரு பத்து நிமிஷம் லேட் பண்ணியிருந்தீங்கன்னா, இவர உயிரோடவே பார்த்திருக்க முடியாது..

இது போல எவ்வளவோ டெர்ரர் டயலாக்ஸ் இருக்கே இந்திரா....
Jegan said…
Wonderful.. :-)
HariShankar said…
nenga solradhu nyayam dhan. Tele marketing mattum kolla peeru irukanga ippo...

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..