ராங் நம்பரா? ராங் நபரா?
ஒருமுறை எனக்கு, தெரியாத நம்பர்ல இருந்து ”ஹாய்” மெசெஜ் வந்தது. யார்னு தெரியாதனால பதில் அனுப்பல.. தொடர்ந்து நாலஞ்சு தடவை வந்ததுனால ”Who r u?” அப்டினு அனுப்பினேன். உடனே அந்த நம்பர்ல இருந்து போன் வந்தது. ”திவ்யா இருக்காங்களா”னு ஓரு ஆண் குரல் கேட்டது. நானும் ”இங்க திவ்யானு யாரும் இல்லங்க. சாரி ராங் நம்பர்”னு வச்சிட்டேன். மறுபடியும் ரெண்டு மூணு தடவ, என்னவோ தெரிஞ்சவன் மாதிரி ”எப்படி இருக்கீங்க.. சாப்டீங்களா?? குட் மார்னிங்.. ” அப்டியெல்லாம் மெசெஜ் வந்துகிட்டே இருந்தது. தொடர்ந்து இப்டி வந்ததால எனக்கு கோவம் வந்துடுச்சு. போன் பண்ணி திட்டிட்டேன். இது தான் டாக்டர் நடந்தது.
அவன் என்ன பண்ணினானோ தெரியல.. வேற வேற நம்பர்ல இருந்து தினமும் நெறைய மெசெஜ் வர ஆரம்பிச்சுது. அடிக்கடி போன் பண்ணிட்டே இருந்தாங்க. சில சமயம் காலி மெசெஜா வரும்.. ஒன்னு ரெண்டு இல்ல.. நூற தாண்டி கூட போகும். swith off பண்ணி வைக்கவும் முடியாது. அலுவலக நிமித்தமாகவும் நண்பர்களிடமிருந்தும் அழைப்பு வரும். கடுப்பாகி திட்டி மெசெஜ் அனுப்புவேன். பதிலுக்கு ஏதாவது அசிங்கமான ஜோக் அனுப்பினாங்க. அதயெல்லாம் படிக்கவே முடியாது. வேற வேற நம்பர்ங்குறதுனால கண்டுபிடிக்கவும் முடியல. யாரோ முகம் தெரியாத ஒருத்தனுக்கு எதுக்கு பயப்படனும்னு கண்டுக்காம விட்டுட்டேன்.
இதுல என்ன கொடுமைனா இந்த நபர்கள்ல ஒருத்தனுக்கு என் நண்பர் ஒருவர் போன் செஞ்சு திட்டினார். அதுல இருந்து அவருடைய போனுக்கும் இதே தொந்தரவு தான். இப்போது அவர் நம்பர் மாற்றியதாக கேள்வி.
இவங்க தொடர்ந்து அனுப்பிய நூத்துக்கணக்கான மெசெஜ்னால என் போன் பழுதானது தான் மிச்சம். அதுக்கப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல நா வேற வழியில்லாம நம்பர மாத்திட்டேன். (என் தோழி ஒருத்தி, அவள் அண்ணன் ஒரு அதிகாரினும் அவர்கிட்ட கம்ப்ளயின்ட் பண்றதாவும் சொல்லி என் சிம் கார்ட வாங்கிட்டுப் போனாள். அதிர்ச்சியான விசயம் என்னனா.. அவ அந்த சிம்ம உபயோகப்படுத்தி அவர்களுக்குள் ஒருத்தன நண்பணாக்கி பேசிகிட்டிருந்தானு எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சது)
இவங்கள்ளாம் யாரு, இதுனால இவங்களுக்கு என்ன சந்தோசம் கிடைக்குதுனே எனக்குப் புரியல.. இன்றும் எனக்கு மெசெஜ் ரிங்டோன் சத்தம் கேட்டா அலர்ஜியா இருக்கு. இன்னைக்கு இந்த மாதிரியான ராங் நம்பரால பல பெண்களுக்கு பிரச்சனைகள் வருது. இதுனால எவ்வளவு மன உளைச்சல் ஏற்படுதுனு இவங்க ஏன் யோசிக்கிறதே இல்லை??
.
Comments
அடுத்தவங்க கஷ்டப்படறத பத்தி,சிறிதளவு யோசனை செய்ய ஆரம்பிச்சாலே, இது போன்ற கிரிமினல் மனதுள்ளவர்களின் வக்கிர நடவடிக்கைகள் குறையுமே...
அது இல்லாமல் போவதால் தான், அடுத்தவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து இந்த அற்ப பிறவிகள் இன்பம் அடைகிறார்கள்....
அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் இவர்களை என்ன செய்ய?
எனக்கு வேலைவிசயமா என்னோட ஓனர் போன் பண்ணினாலே எரிச்சலா இருக்கும்..
....
யோசித்து பார்த்தால்தான் , திருந்தி விடுவார்களே......
அவர்களை பொறுத்தவரை இது ஒரு விளையாட்டு. மற்றவர்களை குழப்பி மன உளைச்சல் உண்டாக்கும் விளையாட்டு. நாமாக எண்ணை மாற்றும் வரை இது தொடரும். அதுதான் அவர்களுக்கு வெற்றி. அவர்களை கண்டுபிடிக்க நாம் முயற்சித்தால் அது சில சமயங்களில் வெற்றி பெறலாம். ஆனால் அதுவரை நமக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் அதிகம்.
அவன் நம்பர என்கிட்டே சொல்லியிருந்தா...!
நான்... ஒரு தடவ பேசுனாவே... அடுத்த தடவ உங்களுக்கு போனே பண்ணமாட்டான்...!
"ஆடிக் கறக்கற மாட்ட ஆடித்தான் கறக்கோணம்...
பாடிக் கறக்கற மாட்ட பாடித்தான் கறக்கோணம்"
நம்ம பாலிசியே அதுதான்...!
எல்லாம் பாஷைல இருக்கு...! (நான் சொல்றது மெட்ராஸ் பாஷ)...!
தடி எடுத்தாத்தான் குரங்கு சலாம் போடும்...
நட்புடன்...
காஞ்சி முரளி....