துப்புங்க எசமான் துப்புங்க..



கார்த்திக்..
சிவந்த நிறம், நல்ல உயரம். ஏதோ ஒரு சினிமா ஹீரோவின் சாயலை ஒத்த தோற்றம். தினமும் உடற்பயிற்சி செய்பவன் என்பதை அவனது ஃபிட்டான உடற்கட்டே சொல்லியது. ஏற்றி சீவப்பட்ட கேசம் அவ்வப்போது நெற்றியில் தவழ்ந்து அழகூட்டியது. தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதிப்பவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை.
அன்று ஞாயிற்றுக் கிழமை, எனினும் சீக்கிரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான். கூடுதலான அவனது உற்சாகமே கூறியது, தனது காதலியைப் பார்க்கப் போகிறானென்று. அவர்கள் வழக்கமாக சந்திக்கும் காஃபி ஷாப்புக்கு அவளை 10 மணிக்கு வரச் சொல்லியிருந்தான். சரியாக 9.45க்கு தனது கருப்பு நிற பல்சரைக் கிளப்பிப் பாய்ந்தான்.
காஃபி ஷாப்புக்குள் நுழையும்போது அவனது வாட்ச் மணி 10ஐ காட்டியது. திருப்தி அடைந்தவனாய் உள்ளே நுழைந்து பார்வையை சுழற்றினான். அவள் இன்னும் வரவில்லை. ஏனோ அன்றைக்கு ஆட்கள் அதிகமாக ஷாப்புக்குள் அமர்ந்திருந்தனர். யோசனையாய் ஒரு டேபிளில் அமர்ந்த கார்த்திக், தனக்கு ஒரு காஃபியை ஆர்டர் செய்துவிட்டு தனது காதலியின் வருகைக்கு காத்திருக்க ஆரம்பித்தான்.
.................................
அனிதா..
அழகி என்று சொல்ல முடியாதெனினும் நல்ல லட்சணமானவள். அழகான முகவெட்டு. உடலமைப்பிற்கேற்றபடி அந்தப் பச்சை நிற காட்டன் புடவை கச்சிதமாக அவளுக்குப் பொருந்தியிருந்தது. கார்த்திக்கை விட மூன்று வயது இளையவள். ஒரு அண்ணன் இருக்கிறான்.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரு கணிணி மையத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாள். போதுமான சம்பளமும் சுதந்திரமும் கிடைக்கிற திருப்தியில் இருக்கும்போது தான் வீட்டில் திருமணத்திற்கு வரண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அனிதாவுக்கோ தனது காதலனை கைப்பிடிக்கும் நோக்கம். அதனால் மேற்கொண்டு வீட்டில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பேச தனது காதலனை பார்க்கக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
அம்மாவிடமும் அண்ணனிடமும் சமாளித்துவிட்டு கிளம்பிவதற்குள் அனிதாவிற்குப் போதும் போதும் என்றாகி விட்டது. ஸ்டாப்பிற்கு வந்து சிறிது நிமிடம் காத்திருப்பிற்குப் பின் பஸ் வந்தது. தனக்காக அவன் வந்து காத்திருப்பானே என்ற கவலையுடனான 20 நிமிடப் பயணத்திற்குப் பின் இறங்கி ஷாப் இருக்கும் வழி நோக்கி நடந்தாள்.
ஒருவழியாக 10.15க்கு காஃபி ஷாப்பின் உள்ளே நுழைந்தாள். வழக்கத்தை விட இன்று கூட்டமாயிருக்கிறதே என்று குழப்பமாய் சுற்றிப் பார்த்தபடி கார்த்திக் இருந்த டேபிளை நோக்கி நகர்ந்தாள் அனிதா.
.................................
கார்த்திக் அவ்வப்போது வாட்சைப் பார்த்துக்கொண்டான். அனிதா அவனெதிரில் சென்று உட்கார்ந்தாள். தனது கைப்பையை மடியில் வைத்து சௌகரியமாய் உட்காரவும் வெய்ட்டர் வந்து ஆர்டர் கேட்கவும் சரியாக இருந்தது. யோசித்தவளாய் தனக்கும் காஃபியே ஆர்டர் செய்தாள். வெய்ட்டர் நகர்ந்தவுடன் இருவருமே மௌனமாய் இருந்தனர்.
இரண்டு நிமிடங்களில் காஃபி வந்தது. எடுத்து மெதுவாய்க் குடிக்க ஆரம்பித்தாள். ஆனாலும் அவர்களுக்குள் மௌனம் மட்டுமே இருந்தது. பில்லுக்கான பணமும் கொடுத்தாயிற்று.
கார்த்திக் அடிக்கடி அனிதாவை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டான். அவளோ எதுவுமே பேசாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அல்ல இரண்டு நிமிடம் அல்ல.. முழுதாகப் பதினைந்து நிமிடம் இந்த மௌனப் போராட்டம் நடந்தது. அதற்குப் பின் பொறுமையிழந்தவனாய் அந்தக் காரியத்தை செய்தான் கார்த்திக்..
வேகமாய் வெளியேறி தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான். ஆனால் அனிதாவிடம் எந்த சலனமுமில்லை. தொடர்ந்து அமர்ந்திருந்தாள்.
.................................
என்ன முழிக்கிறீங்க??? யாரோ ஒருத்தன் வேகமா வெளிய போனா அனிதா எதுக்கு கவலைப்படணும்??
அனிதாவும் கார்த்திக்கும் லவ் பண்றாங்கனு நா சொன்னேனா??? கார்த்திக் தன்னோட காதலி வரலனு கோவமா போயிட்டான். அனிதா தன்னோட காதலனுக்காக வெய்ட் பண்றா. அவ்ளோ தான். அதுக்கெதுக்கு ஒரே டேபிள்ல உட்காரணும்னு கேக்குறீங்களா?? அட என்னங்க சின்னப்புள்ளத் தனமா கேக்குறீங்க?? அன்னைக்கு தான் காஃபி ஷாப் கூட்டமாயிருந்துச்சுல.. இடம் இல்லனு தான் எதிரெதிர்ல உக்காந்தாங்க. இது ஒரு தப்பா??
இப்ப என்ன தான் சொல்ல வரேன்னு கேக்குறீங்க.. அதானே..
ஒண்ணுமில்லங்க.. பதிவெழுதனும்னு முடிவாய்டுச்சு.. எதையாவது எழுதனும்ல.. ஐ மீன் கிறுக்கணும்ல.. (அப்பாடா.. ப்ளாக்கோட தலைப்பு வந்துடுச்சு)
அட என்ன பண்றீங்க..
நோ நோ இங்கல்லாம் துப்பக்கூடாது.
பின்னூட்டத்துல போய் காரிதுப்பிட்டு வேலையப் பாருங்க.
அடுத்த பதிவுல சந்திக்கலாம். வரட்டுமா..
.
.

Comments

இருங்க படிச்சுட்டு வரேன்....
கார்த்திக் அனிதா... பட டைல்லிலேருந்து சுட்டீங்களா?


நல்லாருக்கு மேடம்.......

இதுபோன்று தொடர்ந்து எழுதுங்கள்.......

ஹிஹிஹி
துப்பியது வந்துச்சா...
//இந்திராவின் கிறுக்கல்கள்//

தலைப்பு பொருத்தமாத்தான் வச்சிருக்கீங்க......

கிறுக்குங்க.....கிறுக்குங்க.....
நக்கலு...!
செய்ங்க...! செய்ங்க...!

ம்ம்...!
பழைய "இந்திரா"வக் காணோம்...!

இப்பல்லாம்... "இந்திரா" ரொம்ப பெரிய பதிவராய்ட்டாங்கன்னு நினைக்கிறன்...!

but... ரொம்ப சந்தோசம்...!
நடக்கட்டும்.... நடக்கட்டும்....!
//சங்கவி said...

துப்பியது வந்துச்சா...//


ஹி ஹி ஹி..
//மாணவன் said...

vadai...//

உங்களுக்குத் தான்..
முடியல...


சரி முடிவை சொல்லுங்க... அனிதாக்கு கல்யாணம் யார் கூட ஆச்சி?

கார்த்திக் அவன் காதலிய எப்படி திட்டினான்?

காபி ஷாப் ல ஏன் கூட்டமா இருந்துச்சு?


- பல்பு வாங்கினாலும் சமாளிப்போர் சங்கம்
//மாணவன் said...

//இந்திராவின் கிறுக்கல்கள்//

தலைப்பு பொருத்தமாத்தான் வச்சிருக்கீங்க......

கிறுக்குங்க.....கிறுக்குங்க.....//


உங்க சொல்படியே பண்ணிட்றேங்க..
//மாணவன் said...

கார்த்திக் அனிதா... பட டைல்லிலேருந்து சுட்டீங்களா?


நல்லாருக்கு மேடம்.......

இதுபோன்று தொடர்ந்து எழுதுங்கள்.......

ஹிஹிஹி//


நன்றிங்க
//காஞ்சி முரளி said...

நக்கலு...!
செய்ங்க...! செய்ங்க...!

ம்ம்...!
பழைய "இந்திரா"வக் காணோம்...!//

ஏங்க இப்டி சொல்றீங்க???
பழைய இந்திரா எப்படி இருந்தாங்க???
ரொம்ப மொக்கை போட்றேங்குறீங்களா முரளி??



//இப்பல்லாம்... "இந்திரா" ரொம்ப பெரிய பதிவராய்ட்டாங்கன்னு நினைக்கிறன்...!//

அய்யோ.. அப்டியெல்லாம் சொல்லி ஓரங்கட்டிடாதீங்க..
siva said…
பதிவு என்றால்
சாரி கதை என்றால்
எப்படி இருக்கணும்
பிரபல பதிவர் ஆன
உங்களுக்கு
வாழ்த்துக்கள்
Vaitheki said…
இப்படி எல்லாம் உங்களால எப்படி மேடம் யோசிக்க முடியுது?
ஹி ஹி ஹி :))
வாழ்த்துக்கள் !
//siva said...

:)//


1000 ரூபாய்
//அருண் பிரசாத் said...

முடியல...


சரி முடிவை சொல்லுங்க... அனிதாக்கு கல்யாணம் யார் கூட ஆச்சி?

கார்த்திக் அவன் காதலிய எப்படி திட்டினான்?

காபி ஷாப் ல ஏன் கூட்டமா இருந்துச்சு?


- பல்பு வாங்கினாலும் சமாளிப்போர் சங்கம்//


அட அடுத்தவங்க விஷயம் நமக்கெதுக்கு அருண்??? அவங்க யாரையோ கல்யாணம் பண்ணிட்டுப் போகட்டும்..
பல்பு வாங்கினாலும் உங்க சமாளிப்பை நான் பாராட்றேங்க.
//siva said...

பதிவு என்றால்
சாரி கதை என்றால்
எப்படி இருக்கணும்
பிரபல பதிவர் ஆன
உங்களுக்கு
வாழ்த்துக்கள்//


ஏதோ சொல்றீங்க..
நன்றிங்க..
//S வைதேகி B said...

இப்படி எல்லாம் உங்களால எப்படி மேடம் யோசிக்க முடியுது?
ஹி ஹி ஹி :))
வாழ்த்துக்கள் !//

பதிவெழுத ஆரம்பிச்சுட்டாலே மொக்கை போட தன்னால வந்துடுதுங்க..
வாழ்த்துக்கு நன்றிங்க..
Balajisaravana said…
ரைட்டு.. நீங்களும் ஒரு முடிவோடத் தான் கிளம்பியிருக்கீங்களா?!
ஒய் கொலவெறி? ;)
Lakshmi said…
கதை என்று சொன்னாலும் சரி, கிறுக்கல்கள் என்றாலும் சரி ரசிக்கும்படியாகவே இருக்கு.
karthikkumar said…
தனது கருப்பு நிற பல்சரைக் கிளப்பிப் பாய்ந்தான்//
என்னோடதும் BLACK பல்சர்தான்.. போன பதிவில அருண் பேர எழுதிருந்தீங்க.. நான் அருண கலாய்ச்சேன்.. இந்த பதிவில கார்த்திக் அப்டின்னு இருக்கு.. நல்லவேள அருண்(VOOR STHUM SUTRULAVIRUMBI) இன்னுமொரு நாலு நாளைக்கு ப்ளாக் பக்கம் வராது... என்ன கலாய்க்க முடியாது... தப்பிச்சேன்.. :)
துப்பிக்கெட்டது யாரு!?
/////அப்பாடா.. ப்ளாக்கோட தலைப்பு வந்துடுச்சு)////

ஆமாம் நானும் இப்பத் தான் இந்திராக்கா புளோக்கென்று உறுதிப்படுத்தினேன்..
ஹ..ஹ....ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.
///உன் நினைவுகளின் பாரம் தாளாமல்
புதைந்து போகிறேன்.
மண்ணுக்குள் அல்ல என் மனதுக்குள்.
எல்லோருக்கும் இதயம் துடிக்கிறது..
எனக்கோ துடியாய்த் துடிக்கிறது
உன் பிரிவால்.
நீ இறந்து விட்டாயாம்.. சொல்கிறார்கள்.
பாவம் அவர்களுக்கு என்ன தெரியும்?
முன்கூட்டியே எழுந்து என்னை எழுப்புபவள் நீ
முன்கூட்டியே ஞாபகம் வைத்து என்னை வாழ்த்துபவள் நீ
முன்கூட்டியே நேரத்திற்கு வந்து என்னைத் திட்டுபவள் நீ
முன்கூட்டியே வேலைகளை முடித்து எனக்கு உதவுபவள் நீ
இப்போது
முன்கூட்டியே மண்சாய்ந்து எனக்கு வழிகாட்டுபவள் நீ.
நடந்து சென்ற பாதைகளையும்
பேசிச்சென்ற வார்த்தைகளையும்
கொடுத்துப் போன நினைவுச் சின்னங்களையும்
பார்த்துக் கடந்த கடைசி பார்வைகளையும்
வைத்துக் கொண்டு எத்தனை நிமிடங்கள் தான்
என்னால் வாழ முடியும்?
ஜனனம் உனக்கானதா தெரியவில்லை
இதோ என் மரணம்.. உனக்காக.
ஏமாற்றாமல் ஏற்றுக்கொள். ////...........எனவும்.

///மௌனமாய்ப் பார்க்கிறேன்..
உடைந்த உள்ளத்துடன்.
என்னவள் என்னெதிரில் அழுகிறாள்..
தன் அவனை நினைத்து.////...............எனவும்

///கலைந்துவிட்ட கனவுகளிலும்
கலைந்திடாத கற்பனைகளோடு..
விடிந்துவிட்ட இரவுகளிலும்
விழித்திடாத இருட்டுக்களோடு..
உனக்காகக் காத்திருந்த போது தான்
உணர்ந்து கொண்டேன்..
தென்றலும் சுடும் என்ற உண்மையை../// ..........எனவும் எழுதிய "இந்திரா"தான்... பழைய இந்திரா...! (இதைத்தான் சொன்னேன்... தப்பாய் ஏதுமில்லை...)

இப்போதைய "இந்திரா" பெரிய பதிவர்களில் ஒருவர்...
i am very happy ...!
ரொம்ப சந்தோஷம் நண்பி...!
//காஞ்சி முரளி said...//


இது பாராட்ர மாதிரி தெரியலையே..

காதல் கவிதைகளாகவே எழுதிக்கொண்டிருந்தேன்.
இப்போது மொக்கை போடவும் ஆரம்பித்துவிட்டேன். உண்மை தான் முரளி.
ஆனாலும் அவ்வப்போது கவிதைகளும் எழுதுகிறேனே..

மனதில் உள்ள கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கு பதிவுகள் நல்ல ஊடகம். சரிதானே??

அது காதல் மட்டுமில்லை.. ஏக்கம், ஆதங்கம், புலம்பல், நகைச்சுவை என்று கலவையாக இருப்பது தவறில்லை என்று நினைக்கிறேன்.

ஆனாலும் உங்க பாராட்டிற்கு நன்றி.
உங்களது தொடர்ச்சியான கருத்துக்களை வரவேற்கிறேன்.
ஹி.ஹி.ஹி.............வலிக்கலையே வலிக்கலையே ................ நாங்க ஆரம்பத்துலே கண்டுபுடிச்சிட்டோம் எங்கையோ ஆப்பு இருக்குன்னு .............வலிக்கலையே வலிக்கலையே
//Balajisaravana said...

ரைட்டு.. நீங்களும் ஒரு முடிவோடத் தான் கிளம்பியிருக்கீங்களா?!
ஒய் கொலவெறி? ;)//


நல்லா பல்பு வாங்குனீங்களா???
//Lakshmi said...

கதை என்று சொன்னாலும் சரி, கிறுக்கல்கள் என்றாலும் சரி ரசிக்கும்படியாகவே இருக்கு.//


உங்கள் ரசனைக்கு நன்றிங்க மேடம்
//விக்கி உலகம் said...

துப்பிக்கெட்டது யாரு!?//


அது நா இல்லங்க.
//karthikkumar said...

தனது கருப்பு நிற பல்சரைக் கிளப்பிப் பாய்ந்தான்//
என்னோடதும் BLACK பல்சர்தான்.. போன பதிவில அருண் பேர எழுதிருந்தீங்க.. நான் அருண கலாய்ச்சேன்.. இந்த பதிவில கார்த்திக் அப்டின்னு இருக்கு.. நல்லவேள அருண்(VOOR STHUM SUTRULAVIRUMBI) இன்னுமொரு நாலு நாளைக்கு ப்ளாக் பக்கம் வராது... என்ன கலாய்க்க முடியாது... தப்பிச்சேன்.. :)//


நாங்க தான் சொன்னோம்ல.. உங்களையும் மாட்டி விடுவோம்னு..
//ம.தி.சுதா said...

/////அப்பாடா.. ப்ளாக்கோட தலைப்பு வந்துடுச்சு)////

ஆமாம் நானும் இப்பத் தான் இந்திராக்கா புளோக்கென்று உறுதிப்படுத்தினேன்..
ஹ..ஹ....ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//


ரொம்ப பேசுனீங்கனா அருண், கார்த்திக் மாதிரி உங்க பேரையும் அடுத்த பதிவுல கொண்டு வந்திடுவேன். ஜாக்கிரதை தம்பி..
//மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி.............வலிக்கலையே வலிக்கலையே ................ நாங்க ஆரம்பத்துலே கண்டுபுடிச்சிட்டோம் எங்கையோ ஆப்பு இருக்குன்னு .............வலிக்கலையே வலிக்கலையே//


சரி சரி விடுங்க..
நீங்க பல்பு வாங்கினத தான் நாங்க பாத்துட்டோம்ல.. அப்புறம் ஏன் சமாளிக்கிறீங்க..
இதெல்லாம் வாழ்க்கைல ஜகஜம்..
ஆவ்வ்வ்வ்வ் துப்புங்க எசமான் துப்புங்க.. இந்த பதிவர்களே இப்படி தான் :)
வைகை said…
விடுங்க இந்திரா! அவன் சரியான பொரிக்கியோ?!! முன்ன பின்ன தெரியாத பொண்ணு எதிர்ல உக்காந்தா இப்பிடியா குறுகுறுன்னு பாக்கிறது?! ஒரு டீசன்ட் வேண்டாம்!.................ஏம்பா நான் பேசுறது சரியா?!!......ஆமா...என்ன பேசுனேன் நான்?!
vinu said…
ithellaaam oru polappuuuuu
vinu said…
ithellaaam oru polappuuuuu
//வைகை said...

விடுங்க இந்திரா! அவன் சரியான பொரிக்கியோ?!! முன்ன பின்ன தெரியாத பொண்ணு எதிர்ல உக்காந்தா இப்பிடியா குறுகுறுன்னு பாக்கிறது?! ஒரு டீசன்ட் வேண்டாம்!.................ஏம்பா நான் பேசுறது சரியா?!!......ஆமா...என்ன பேசுனேன் நான்?!//


பல்பு வாங்கினத எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியதாயிருக்கு பாருங்க.. சரி சரி விடுங்க.
//☀நான் ஆதவன்☀ said...

ஆவ்வ்வ்வ்வ் துப்புங்க எசமான் துப்புங்க.. இந்த பதிவர்களே இப்படி தான் :)//


கரெக்ட்டா சொன்னீங்க ஆதவன்..
//vinu said...

ithellaaam oru polappuuuuu//


டாங்ஸ்ங்க..
ரொம்பப் புகழாதீங்க வினு..
vinu said…
இந்திரா said...
//vinu said...

ithellaaam oru polappuuuuu//


டாங்ஸ்ங்க..
ரொம்பப் புகழாதீங்க வினு..





இதுல தன்னடக்கம் வேற முடியல முடியல முடியல; தேடிவந்து பல்பு வாங்கிட்டு போற என்னை சொல்லணும்
vinu said…
இதே மாதிரி ஒரு சினிமா படத்துல ஒரு ஜோக் வரும் 1985 ல திவ்யாக்கும், ரமேசுக்கும் கல்யாணம் நடந்தது ஆனா 1986 ல திவ்யாக்கு பொறந்த குழந்தைக்கு ரமேசு அப்பா இல்லை எப்புடி?
ஏ.....ன், இந்த கொலை வெறி. ஆங்கில New year வாழ்த்துக்கள்.
logu.. said…
hayyyo....
ellam kolagara kootama irukkuda sameee...

namala kirukkana akkama vidrathilla pola..
thapicha pothumada sameeeeeeeee
இன்னிக்குன்னு பார்த்து எச்சி ஊற மாட்டேங்குது..இருங்க வரேன்.. இப்பதான் சௌந்தர் பிளாகுல துப்பினேன்
.................................

இந்த வரிகள் மிகவும் அருமை....
அது சரி... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.
//logu.. said...

hayyyo....
ellam kolagara kootama irukkuda sameee...

namala kirukkana akkama vidrathilla pola..
thapicha pothumada sameeeeeeeee//


உங்கள அவ்வளவு சுலபமா தப்பிக்க விட்ருவோமா???? நெவர்
//சைவகொத்துப்பரோட்டா said...

ஏ.....ன், இந்த கொலை வெறி. ஆங்கில New year வாழ்த்துக்கள்.//


உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாத்தை
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.................................

இந்த வரிகள் மிகவும் அருமை....//


ரொம்ப நல்ல்ல்ல்ல்ல ரசனைங்க உங்களுக்கு.
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னிக்குன்னு பார்த்து எச்சி ஊற மாட்டேங்குது..இருங்க வரேன்.. இப்பதான் சௌந்தர் பிளாகுல துப்பினேன்//


அப்பாடா..
இப்ப தான் எனக்கு ஆறுதலா இருக்கு..
(சௌந்தர்.. என் இனமடா நீ)
//சே.குமார் said...

அது சரி... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.//


ஹிஹிஹி
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48
49
50//


ஆஹா.. என்ன ஒரு பின்னூட்டம்..
ஜெ.ஜெ said…
என்ன கொடும சார் இது??

இப்படி டப்புனு முடிச்சுட்டீங்கலே...
அடப்பாவி அவளா நீ எம்புட்டு ஆர்வமா படிச்சேன்..ஆத்தி நன்னாவே இருக்கு த்ரில்....துப்பவா துடைக்கவா தெரியலை ஹ்ஹஹஹஹா நைஸ் ஒண்டா...
///இது பாராட்ர மாதிரி தெரியலையே..///

என்ன இப்படி சொல்லிடீங்க... நண்பி...!
ச்சே...
அப்படியெல்லாம் இல்ல...!

காதல் கவிதை மட்டும் எழுதவேண்டுமென்றோ... கவிதை மட்டும் எழுத வேண்டுமென்றோ நான் சொல்லவில்லை...

கவிதை.... கட்டுரை... யதார்த்ததில் நடக்கும் சீர்கேடுகள் சுட்டிக்காட்டுதல்... நக்கல்... காமெடி.. இப்படி பல்வேறு பதிவுகளை பதிந்து
வலையுலகில்... பதிவுலகில் "பன்முக பதிவ"ராய் தாங்கள் வலம் வருவதைத்தான் அப்படி சொன்னேன் நண்பி...


தங்கள் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சியுடன்... வாழ்த்துக்களைத்தான் சொன்னேன்...! ////இது பாராட்ர மாதிரி தெரியலையே../// என்ற உள்குத்து ஏதும் இதில் கிடையாது... நண்பி...!
கதை என்ற பெயரில் எங்களை வதைக்காமல் ரசிக்க வைத்த உங்கள் பதிவிற்கு வாழ்த்துகள்... தொடரட்டும் உங்கள் பதிவுகள் மென்மேலும்...
Meena said…
நீங்கள் மிகவும் புத்திசாலி. நல்ல டிவிஸ்ட் முடிவில்.
இருந்தாலும் கார்த்திக்குக்கும் அனிதாவுக்கும் நடுவுல ஒரு கெமிஸ்ட்ரி இருந்துச்சு...
Philosophy said
இருந்தாலும் கார்த்திக்குக்கும் அனிதாவுக்கும் நடுவுல ஒரு கெமிஸ்ட்ரி இருந்துச்சு//
....
ஏங்க chemistry ஐ இப்படி கேவலப்படுத்தேரீங்க. நான் Chemistry மாணவன்னு சொல்லிக்கவே முடியல.
இந்திரா...
கார்ததிக் அனிதா physics நல்லா இருந்தது.
அம்மணி,
எதுக்கு இந்த கொலை வெறி?
send this article to devi weekly, 727,anna salai,chennai 600006
change the title as karthik vs anitha - a love story if u send it to magazine
//ஜெ.ஜெ said...

என்ன கொடும சார் இது??

இப்படி டப்புனு முடிச்சுட்டீங்கலே...//

அதான் பல்பு வாங்கிட்டீங்களே.. அதான் முடிச்சுட்டேன்.
//குமரை நிலாவன் said...

முடியல...//


அப்டியா???
//தமிழரசி said...

அடப்பாவி அவளா நீ எம்புட்டு ஆர்வமா படிச்சேன்..ஆத்தி நன்னாவே இருக்கு த்ரில்....துப்பவா துடைக்கவா தெரியலை ஹ்ஹஹஹஹா நைஸ் ஒண்டா...//

ஹாஹாஹா
ஏமாந்தீங்களா ஏமாந்தீங்களா..
//காஞ்சி முரளி //


நன்றி நன்றி நன்றி
உங்கள் பாராட்டுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே..
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வரவேற்கிறேன்.
//தஞ்சை.வாசன் said...

கதை என்ற பெயரில் எங்களை வதைக்காமல் ரசிக்க வைத்த உங்கள் பதிவிற்கு வாழ்த்துகள்... தொடரட்டும் உங்கள் பதிவுகள் மென்மேலும்...//

நன்றி வாசன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
//philosophy prabhakaran said...

இருந்தாலும் கார்த்திக்குக்கும் அனிதாவுக்கும் நடுவுல ஒரு கெமிஸ்ட்ரி இருந்துச்சு...//


இது வேறயா???? ம்ம்ம்
//Meena said...

நீங்கள் மிகவும் புத்திசாலி. நல்ல டிவிஸ்ட் முடிவில்.//


நன்றி மீனா மேடம்.
//வெளங்காதவன் said...

அம்மணி,
எதுக்கு இந்த கொலை வெறி?//


நமக்கும் பொழுது போகணும்ல..
//சிவகுமாரன் said...


ஏங்க chemistry ஐ இப்படி கேவலப்படுத்தேரீங்க. நான் Chemistry மாணவன்னு சொல்லிக்கவே முடியல.
இந்திரா...
கார்ததிக் அனிதா physics நல்லா இருந்தது.//


ரொம்ம்ப முக்கியம்
//சி.பி.செந்தில்குமார் said...

good story and fine twist

send this article to devi weekly, 727,anna salai,chennai 600006

change the title as karthik vs anitha - a love story if u send it to magazine//


அந்த அளவுக்கு வொர்த் இல்லனு நெனைக்கிறேன். ஆனாலும் தகவலுக்கு நன்றி.
/இந்திரா said...

//சி.பி.செந்தில்குமார் said...

good story and fine twist

send this article to devi weekly, 727,anna salai,chennai 600006

change the title as karthik vs anitha - a love story if u send it to magazine//


அந்த அளவுக்கு வொர்த் இல்லனு நெனைக்கிறேன். ஆனாலும் தகவலுக்கு நன்றி.
//



ஆமா இதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க!!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆமா இதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க!!//

ஹிஹிஹி
அத தாங்க நானும் சொல்றேன்..
அடங்கோ

நம்பி படிச்சுட்டேன்
idhellam romba over'ah theriyalai. naanum interest'ah vandhu padicha ipadi panitiyae indhira......... udha vanga pora.........
sulthanonline said…
இப்படி எல்லாம் உங்களால எப்படி மேடம் யோசிக்க முடியுது? முடியல தொண்டை வரண்டதால தப்பிச்சிட்டீங்க..! ரொம்ப வித்தியசமாக யோசிச்சிருக்கிங்க வாழ்த்துக்கள்.:-)
Maheswari said…
Hi nice story....
am new to blogs....so interesting...
keep rocking
HariShankar said…
இத தான் "கார்த்திக் - அணித"நு fb நோட்ல போட்டிருக்கீங்க.. ஏற்கனவே anga பல்பு வாங்குனது நாளே இங்கே தப்பிச்சேன்

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்