உனது பிரிவு


உன் நினைவுகளின் பாரம் தாளாமல்
புதைந்து போகிறேன்.
மண்ணுக்குள் அல்ல என் மனதுக்குள்.
எல்லோருக்கும் இதயம் துடிக்கிறது..
எனக்கோ துடியாய்த் துடிக்கிறது
உன் பிரிவால்.
நீ இறந்து விட்டாயாம்.. சொல்கிறார்கள்.
பாவம் அவர்களுக்கு என்ன தெரியும்?
முன்கூட்டியே எழுந்து என்னை எழுப்புபவள் நீ
முன்கூட்டியே ஞாபகம் வைத்து என்னை வாழ்த்துபவள் நீ
முன்கூட்டியே நேரத்திற்கு வந்து என்னைத் திட்டுபவள் நீ
முன்கூட்டியே வேலைகளை முடித்து எனக்கு உதவுபவள் நீ
இப்போது
முன்கூட்டியே மண்சாய்ந்து எனக்கு வழிகாட்டுபவள் நீ.
நடந்து சென்ற பாதைகளையும்
பேசிச்சென்ற வார்த்தைகளையும்
கொடுத்துப் போன நினைவுச் சின்னங்களையும்
பார்த்துக் கடந்த கடைசி பார்வைகளையும்
வைத்துக் கொண்டு எத்தனை நிமிடங்கள் தான்
என்னால் வாழ முடியும்?
ஜனனம் உனக்கானதா தெரியவில்லை
இதோ என் மரணம்.. உனக்காக.
ஏமாற்றாமல் ஏற்றுக்கொள்.

Comments

உங்கள் கவிதைகள் நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்.

எனது வலைப்பூவின் பெயரும் கிறுக்கல்கள்தான் வந்து பாருங்களேன்.
//சே.குமார்..

உங்கள் கவிதைகள் நல்லாயிருக்கு.

வாழ்த்துக்கள்.

எனது வலைப்பூவின் பெயரும் கிறுக்கல்கள்தான் வந்து பாருங்களேன்.//

நன்றி நண்பரே..

உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்.. அருமையான கவிதைகள்..
வாழ்த்துக்கள்.
kalai said…
romba supera eruku feel panavaikuthupa

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..