உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..
என்னுடன் நீ பேச மாட்டாயாமே .. அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா ? பிடித்ததை கண்சிமிட்டியும் பிடிக்காததை புருவம் உயர்த்தியும் எனக்குத் தெரிவிக்கிறதே .. சமாதானமாக நான் பேசும்போதெல்லாம் செவிகளை எனக்கும் விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய் .. அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது .. என்னிடமிருந்து ' லவ் யூ ' வும் உன்னிடமிருந்து ' ஹேட் யூ ' வும் பரிமாறப்படுகிறது .. பேசும் நேரங்களை விட பேசாத நேரங்களில் காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள் .. ' சாப்பிடு ' என்று நான் கெஞ்சவேண்டும் என்பதற்காகவே .. பசியோடு காத்திருக்கிறாய் .. கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு . பின்கூட்டி அணைக்கிறேன் .. பிடிக்காதது போல உதறுகிறாய் .. இறுக்காத பிடியிலும் கூட இறுகியதாய் தடுமாறுகிறாய் .. ஏனோ தெரிவதில்லை .. உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில் நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன் .. உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி உன்னை வெறுப்பெற்றுகிறேன் .. பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய் .. தொலைக்காட்சியை .. எனது சேஷ்டைகளைப் போலியாக வெறுக்கும் உன் நடிப்பு ஆஸ்கரையும் மிஞ்சும் .. உன் குழந்தைத் தனம...
Comments
All the Best ....
After completing your 1st Year Blog Writing , i am posting this comment for your very 1st post...
anyway all the best ....
அன்பின் இந்திரா - வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கழித்து இங்கு வருகிறேன். பதிவுகளைப் படிக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - மதுரை 98406 24293 //
வாங்க சீனா சார்.
வாழ்த்துக்கு நன்றி.
தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.
வருகைக்கு நன்றி.