கொஞ்சம் வெளிப்படையாக..
என் பெயர் இந்திரா.
என்ன திடீரென்று இந்த அறிமுகம் என்று யோசிக்கிறீர்களா..
முறையான அறிமுகம் எதுவுமே இல்லாமல் தான் நான் பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தேன்.
ஆரம்ப நாட்களில் ஒரு சில வலைப்பூக்களை படித்திருந்தேன். அது போல நாமும் எழுத வேண்டும் என்ற ஆசையால் பதிவுகள் இட ஆரம்பித்தேன்.
வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் பல கசப்பான அனுபவங்களை மறப்பதற்காக, என்னை நானே திசை திருப்புவதற்காகவே எனக்கென ஒரு தளத்தை திறந்தேன். இந்த வலைப்பூ எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்தது, கொடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆரம்ப நாட்களில் ஏதோ கடமைக்காக, பதிவுகள் போடவேண்டுமே என்ற எண்ணத்தில் எழுத ஆரம்பித்தேன்... ஆனால் போகப் போக வலையுலகம் என்னைத் தன்பக்கம் வெகுவாக ஈர்த்துக்கொண்டது.. பிற பதிவாளர்களின் வலைகளைப் பார்க்கும்போது எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். நாமும் நம்மால் முடிந்த அளவு சிறப்பான பதிவுகளை எழுத வேண்டுமென்ற நம்பிக்கையில் தொடர ஆரம்பித்தேன்.
மற்ற நேரங்களில் முடியாதெனினும் வலையுலகத்தில் இருக்கும்போது பல ரணங்கள் மறக்கப் படுகிறது .. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆறுதலாக எண்ணுகிறேன்.
இந்த வலையுலகின் மூலம் எனக்கு சில நண்பர்களும் கிடைத்துள்ளனர். அவர்களுக்கு எல்லாம் எனது இந்த ஐம்பதாவது பதிவு மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை அவ்வப்போது ஊக்கப்படுத்தியதர்க்காக நான் நன்றி சொல்ல விரும்பும் சக பதிவாளர்கள்..
கவிதைக் காதலன்
ஜெய்லானி
சித்ரா
சைவகொத்துபரோட்டா
மங்குனி அமைச்சர்
பட்டாப்பட்டி
வாழ்க்கைப் பயணம்
ஜில்தண்ணி யோகேஷ்
ஜோக்கிரி
காஞ்சி முரளி
வினோ ராஜேஷ்
பிரின்ஸ்
வால்பையன்
கலை
குரு
இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அதனால் நிறுத்திக்கொள்கிறேன்.
இது வரை எப்படியோ.. ஆனால் இனி எனது பதிவுகளை, என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக அமைக்கிறேன். உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எனக்கு வழங்குங்கள் நண்பர்களே..
இத்துடன் எனது ஐம்பதாவது பதிவு நிறைவு பெறுகிறது. அடுத்த பதிவில் சந்திப்போம்.
.
.
Comments
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.
super akka niceeeeeeeeee
//என்னை அவ்வப்போது ஊக்கப்படுத்தியதர்க்காக நான் நன்றி சொல்ல விரும்பும் சக பதிவாளர்கள்..//
இந்த லிஸ்டில் பெரிய ஆட்களுடன் இந்த ஜோக்கிரியையும் இணைத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி.....
வெறும்பய
சௌந்தர்
கலை
கோபி//
அனைவருக்கும் நன்றி..
// DEVA said...
'சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.
super akka niceeeeeeeeee //
முந்தைய பதிவிற்கான பின்னூட்டம்..
நன்றி சகோதரி..
ஐம்பது....
ஐநூறாகி...
ஐயாயிரமாக வளர...
"வாழ்த்துக்கள்..!
வாழ்த்துக்கள்.....!
வாழ்த்துக்கள்.......!"
அடுத்து...
வலைப்பூவின் ஜாம்பவான்கள் பெயர்களுடன்...
என் பெயரையும் வெளியிட்டமைக்கு நன்றிகள்...!
தங்கள் இந்த பதிவில்...
////பல கசப்பான அனுபவங்களை மறப்பதற்காக, என்னை நானே திசை திருப்புவதற்காகவே எனக்கென ஒரு தளத்தை திறந்தேன்/// என்றும்...
////வலையுலகத்தில் இருக்கும்போது பல ரணங்கள் மறக்கப் படுகிறது .. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆறுதலாக எண்ணுகிறேன்/// என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்...
என்றுமே...
நம் துன்பத்தின்.... துயரத்தின் ரணங்களை ஆற்றும் மாமருந்து நல்நட்பு மட்டுமே...
நண்பியே...
தங்கள் கசப்பான அனுபவங்களை...
முற்றிலும் மறந்து...
மன ரணங்கள் ஆறி...
மீண்டும்
மகிழ்ச்சியுடன் வாழ...
எல்லாம்வல்ல கடவுள் அருள்புரிவானாக...!
நட்புடன்...
காஞ்சி முரளி....
அதனால எல்லோருமே எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க...
All the best...
தொடர்ந்து ரவுண்டு கட்டி எழுதுங்க :) எல்லாம் நடக்கும்
வாழ்த்துக்கள்
ரைட்டு..சதம் அடிக்க வாழ்த்துக்கள்...
என் மேல உங்களுக்கு என்ன கோவம்?
என் பேரை நீங்க சரியா எழுதலை..
ம்ஹூம்.... ஆவ்வ்வ்வ்வ்வ்... (அழுவுறேன்)
காஞ்சி முரளி
தமிழன்07
☀நான் ஆதவன்☀
ப்ரியமுடன் வசந்த்
ஜில்தண்ணி - யோகேஷ்
பட்டாபட்டி..//
நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். //
மிக்க நன்றி
//என் மேல உங்களுக்கு என்ன கோவம்?
என் பேரை நீங்க சரியா எழுதலை..
ம்ஹூம்.... ஆவ்வ்வ்வ்வ்வ்... (அழுவுறேன்)//
அய்யயோ அழுகாதீங்க..
கோபம் எல்லாம் இல்லை.
எழுத்துப் பிழை நடந்து விட்டது.
திருத்தி விட்டேன்.
மன்னிக்கவும்.
அடிக்கடி ஏன் காணாமல் போயிட்றீங்க??
nanathan 51vathu comments.
valuthukkal..
akka.
உங்களை போல நானும் ஒரு சிறிய வலை தளம் வைத்துள்ளேன்,
எனக்கு தோன்றியதை மட்டும் வரைந்துளேன் .....
உங்களை போல என்னக்கும் சில ரணங்கள் உள்ளத்தில் உண்டு...
அதை தான் அதில் கொட்டி தீர்த்திருக்கிறேன்...
உங்கள் அறிமுகம் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி .....
நட்பு தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்....
தொடர்புக்கு :
moovjabi@gmail.com...
Moortthi JK
same in facebook.....
அரை சதம் அடித்து விட்டிர்கள் ... வாழ்த்துக்கள் ....
உங்களை போல நானும் ஒரு சிறிய வலை தளம் வைத்துள்ளேன்,
எனக்கு தோன்றியதை மட்டும் வரைந்துளேன் .....
உங்களை போல என்னக்கும் சில ரணங்கள் உள்ளத்தில் உண்டு...
அதை தான் அதில் கொட்டி தீர்த்திருக்கிறேன்...
உங்கள் அறிமுகம் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி .....
நட்பு தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்....
தொடர்புக்கு :
moovjabi@gmail.com...
Moortthi JK
same in facebook.....//
வாழ்த்துக்களுக்கு நன்றி மூர்த்தி..
தொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே.
உங்கள் வலைப்பக்கமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.