குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க சில ஆலோசனைகள்..



1.       உயரமான நாற்காலிகளைப் பயன்படுத்தாமல் தாழ்வான மேசை நாற்காலிகளையே குழந்தை உள்ள இடத்தில் பயன்படுத்துங்கள்.
2.       குழந்தைக்கு உணவூட்டும்போது உயரமான நாற்காலிகளைப் பயன்படுத்தினால் அத்தகைய நாற்காலி கவிழாவண்ணம் அதன் அடிப்பாகம் அகலமானதாக அமையட்டும். அல்லது சுவர் அருகில் இருக்கும்படியாக அமைத்துக் கொள்ளுங்கள். அல்லது அதிலிருந்து விழுந்துவிடாமல் அதை ஒரு பெல்ட்டால் இணைத்து விடுங்கள.
3.       தள்ளு வண்டியைப் பயன்படுத்துகிறீர்களா? குழந்தை எழுந்து நிற்க முயற்சிக்கலாம். கீழே விழுந்து விடாமலிருக்க அதை வண்டியுடன் சேர்த்து பெல்ட்டால் இணைத்து விடுங்கள்.
4.       குழந்தை மாடிப்படியிலோ, தெருவாயிற்படியிலோ ஏறி இறங்கிப் பழகும் வரையில் அவைகளின் முகப்பில் சிறிய கதவுகள் அமைத்து அவைகளை மூடி வையுங்கள்.
5.       சன்னல்களில் கம்பிகள் இல்லை என்றால் அடிக் கதவுகளை எப்போதுமே மூடி வைப்பது நல்லது.
6.       சமையல் செய்யுமிடத்திலோ, உணவு பரிமாறும் போதோ குழந்தை தவழவோ, நடக்கவோ விட்டுவிடாதீர்கள். ஏனென்றால் உங்கள் குழந்தையின் மேல் இடறி விழுந்துவிட நேரிடும். சூடான உணவுப் பொருள், எண்ணெய் அதன் மேல் சிந்தி விடலாம். அல்லது குழந்தையே பாத்திரத்தை இழுத்து தன் மேல் கவிழ்த்துக் கொள்ளலாம். தோசைக் கல், வெந்நீர் பாத்திரங்களை வைத்து விடாதீர்கள். கல்லில் தவறி உட்கார்ந்து விடலாம்.
7.       அடுப்பின் மேல் உள்ள பாத்திரங்களின் கைப்பிடிகளை பிடித்து இழுக்காதபடி அவ்வப்போது உள் பக்கமாகத் திருப்பி வைத்துக் கொள்ளுங்கள்.
8.       உணவு பரிமாறும்போது காபி, அல்லது சூடான உணவுப் பொருட்கள் உள்ள பாத்திரங்களை மேசையின் நடுவில் குழந்தை தொட முடியாத இடத்தல் வைத்துக் கொள்ளுங்கள்.
9.       மேசையின் ஓரத்தில் மேசை விரிப்புகள் தொங்கிகொண்டிருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தை பிடித்து இழுத்து பொருட்களை கொட்டி விடலாம்.
10.    எந்தப் பொருளையும் வாயில் வைக்கும் இயல்புள்ளது. எனவே அதனிடத்தில் பித்தான்கள், காசுகள், பட்டாணி, கடலை வகைள், மணி, பாக்கு போன்ற சிறிய பொருட்களைக் கொடுக்காதீர்கள். காற்றுக் குழாய்க்குள் எளிதில் அவை புகுந்து குழந்தைக்கு மூச்சடைப்பு உணடாக்கலாம். மிகவும் கவனம் தேவை.
11.    குழந்தையைக் குளிப்பாட்டக் கொண்டு செல்லும்முன் குளியலறையில் முன்னமே சுடுநீரைத் தண்ணீரில் கலந்து அதிகம் சூடில்லாமல் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் சுடுநீரை இழுத்துக் கொட்டிக் கொள்ளலாம்.
12.    மின்சார வயர்களை இழுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கைக்கெட்டும் உயரத்தில் சுவிட்சுகள் இருக்கக் கூடாது. பயன்படாதவற்றைச் செல்லோ-டேப் போட்டு ஒட்டிவிடுங்கள். கைக்கெட்டும் உயரத்தில் உள்ள ஹோல்டர்களில் எப்போதும் பல்ப் மாட்டி வைத்து விடுங்கள். (பியூசான பல்பாக இருந்தாலும் சரி).
13.    கிணறுகள், தண்ணீர்த் தொட்டிகள் முதலியன நன்கு மூடிப் பாதுகாக்க வேண்டும்.
14.    பெற்றோரைக் குழந்தை இமிடேட் செய்யும். ஷேவிங் பிளேடு பத்திரம். முகத்தைக் காயப்படுத்திக் கொள்வர். எட்டாத உயரத்தில் இருக்கட்டும்.
15.    உடைந்த கண்ணாடித் துண்டுகள், திறந்த டப்பாக்கள், பயன்படுத்தப்பட்ட பிளேடுகள் முதலியவற்றைத் தூர எறிந்து விடுங்கள்.
16.    பழக்கமில்லாத நாய், பூனை முதலியவற்றைக் குழந்தையிடம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை அச்சம் கொள்ளலாம். அல்லது அவற்றைத் துன்புறுத்தினால் அவை கடித்துவிட ஏதுவாகலாம். ஜாக்கிரதை!
17.    விஷமுள்ள பொருட்களை அதன் கைகளுக்கு எட்டாத உயத்தில் வைத்து விடுங்கள். இரண்டாவது வயதில் குழந்தை ருசியைக் கூட கவனிக்காமல் கைகளுக்கு அகப்பட்ட எதையும் தின்றுவிடுகிறது. (உதாரணம: ஆஸ்ப்ரின் கலந்த மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பெட்ரோல், மண்ணெண்ணெய், பூட்பாலிஷ்)
18.    பென்சில் பேனாவைக் கொடுக்க, எடுக்க விடாதீர்கள். கண்ணில் குத்திக் கொள்ளலாம்.
19.    எவ்வளவு கெட்டியாக மூடப்பட்டிருந்தாலும் மருந்துப் புட்டிகளை குழந்தை அடம் பிடித்தாலும் கொடுத்து விடாதீர்கள்.
20.    எலி, பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தும் விஷப்பொருட்களை, உங்கள் வீட்டில் குழந்தை இருக்கும்போது பயன்படுத்தும் பழக்கத்தை விட்டு விடுங்கள். அவசியம் நேரின் பயன்படுத்திய பொருட்களைக் குழந்தைகள் எடுக்க இயலாத வெகுதொலைவில் எறிந்து விடுங்கள். எறும்பு கொல்லும் கேக்கூட அதன் கையில் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
21.    குழந்தை அஞ்சக் கூடிய பொருட்களிடத்தம் ஆபத்து விளைவிக்க்க் கூடிய பொருட்களுடனும் விளையாட விடாமல் தடுத்துவிட வேண்டுமென்றால், அதன் கவனத்தை அந்தப் பொருட்களிடமிருந்து திருப்பி விடுவது நல்லது.
22.    ஒரு வயதுக் குழந்தை உணவுக்குப் பின் வாய் கைகளைக் கழுவ மறுக்கும், தொந்தரவு கொடுக்கலாம். அப்போது அதன் முன்னால் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீரை வைத்து விடுங்கள்.தண்ணீரில் கைகளை விட்டு விளையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் அதன் வாயையும் கைகளையும் உங்கள் ஈரக்கையால் துடைத்து விடலாம்.
.
.
(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)
.

Comments

அனைத்துமே குழந்தைகளை பாதுகாக்கும் பயனுள்ள குறிப்புகள்..

பகிர்ந்தமைக்கு நன்றி சகோ..
பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
//(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)//

சுவாரஸியமா படிச்சுட்டே கீழ இதை சின்னதா பார்த்ததும் பழைய பதிவு, சண்டை எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு :)
பயனுள்ள தகவல்கள்
/// ☀நான் ஆதவன்☀ said...
//(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)//

சுவாரஸியமா படிச்சுட்டே கீழ இதை சின்னதா பார்த்ததும் பழைய பதிவு, சண்டை எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு :)///

aamaa...! illaa..!
Unknown said…
பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்...அந்த புத்தகதுக்கும், அதிலிருந்து விஷயங்களை பகிர்ந்த உங்க்ளுக்கும் நன்றி சகோ!
மிகவும் பயனுள்ளதாக இருந்தது... பகிர்விற்கு நன்றிகள்
பயனுள்ள குறிப்புகள்.
11-க்கு மேல்உள்ளவைதான் தற்போது கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் என் குழந்தை தவழும் குழந்தையல்லவே...
மற்றபடி அனைவருக்கும் பயனுள்ள இடுகை...
பயன் தரும் குறிப்புகள்.நன்றி பகிர்வுக்கு.
ஹேமா said…
இளம் தாய்மாருக்கு நல்ல உபயோகமான செய்திகள்.
நன்றி இந்திரா !
//தமிழ்வாசி பிரகாஷ் said...

அனைத்துமே குழந்தைகளை பாதுகாக்கும் பயனுள்ள குறிப்புகள்..

பகிர்ந்தமைக்கு நன்றி சகோ..//



நன்றி பிரகாஷ்..
//மனசாட்சி said...

பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றி//


நன்றிங்க..
//☀நான் ஆதவன்☀ said...

//(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)//

சுவாரஸியமா படிச்சுட்டே கீழ இதை சின்னதா பார்த்ததும் பழைய பதிவு, சண்டை எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு :)//


ஆமாங்க ஆதவன். இப்ப எல்லா பதிவரும் பிஸியாயிட்டாங்க. பதிவுகள படிக்கவே நேரமில்லங்கும்போது சண்டை எங்கே போட்றது.
அது ஒரு கானக்.. ஸாரி கனாக் காலம்..
//sasikala said...

பயனுள்ள தகவல்கள்//


நன்றிங்க..
//காஞ்சி முரளி said...

/// ☀நான் ஆதவன்☀ said...
//(குழந்தை வளர்ப்புக் கலை புத்தகத்திலிருந்து)//

சுவாரஸியமா படிச்சுட்டே கீழ இதை சின்னதா பார்த்ததும் பழைய பதிவு, சண்டை எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு :)///

aamaa...! illaa..!//


ஆமா மட்டும் தாங்க..
//Rathnavel said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.//


நன்றிங்க..
வருகைக்கும் கருத்துக்கும் பகிர்ந்ததற்கும்.
//விக்கியுலகம் said...

பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்...அந்த புத்தகதுக்கும், அதிலிருந்து விஷயங்களை பகிர்ந்த உங்க்ளுக்கும் நன்றி சகோ!//


நன்றிங்க நண்பரே..
//மன்னார் அமுதன் said...

மிகவும் பயனுள்ளதாக இருந்தது... பகிர்விற்கு நன்றிகள்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
//கே. பி. ஜனா... said...

பயனுள்ள குறிப்புகள்.//


தாங்க்ஸ்ங்க..
//குடந்தை அன்புமணி said...

11-க்கு மேல்உள்ளவைதான் தற்போது கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் என் குழந்தை தவழும் குழந்தையல்லவே...
மற்றபடி அனைவருக்கும் பயனுள்ள இடுகை...//


ம்ம்ம் கவனமாக இருங்க.
வருகைக்கு நன்றிங்க.
//RAMVI said...

பயன் தரும் குறிப்புகள்.நன்றி பகிர்வுக்கு.//


வருகைக்கு நன்றிங்க..
//ஹேமா said...

இளம் தாய்மாருக்கு நல்ல உபயோகமான செய்திகள்.
நன்றி இந்திரா !//


கருத்துக்கு நன்றி ஹேமா..
வணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html
வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளது, வாழ்த்துகள்!
ஒவ்வொன்றும் அருமையான ஆலோசனை. நன்றி!

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்